டைப்பிஸ்ட் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

டைப்பிஸ்ட் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டச்சர் பணியிடங்களுக்கு நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு இன்று பணி நியமன கவுன்சலிங் நடக்கிறது.

2013&2014ம் ஆண்டுக்கான தட்டச்சர் காலிப் பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 213 பேர் பள்ளிக் கல்வித்துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நியமன ஆணை வழங்கும் கவுன்சலிங் இணைய தளம் மூலம் இன்று நடக்கிறது. தட்டச்சர் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு நடக்கும். சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடம் இல்லாததால் பணியிடம் கிடைக்காதவர்கள், வேறு மாவட்டங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கும் இன்று மதியம் 12 மணிக்கும் கவுன்சலிங் நடக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி