அரசு உத்தரவு அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

அரசு உத்தரவு அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்

தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு தமிழகத்தில் ஆதரவு இருந்தாலும் சிலர் குறை கூறினர். இந்நிலையில், தற்போது ஆட்சி யில் உள்ள அதிமுக அரசு மேற்கண்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவை தயாரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தனிப் பட்ட நபரோ அல்லது அமைப்போ நடத்தும் சிறுபான்மை பள்ளிகள் ஆகியவை அனைத் திலும் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் 2009ம் ஆண்டு சட்டம் 35ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பிரிவு பள்ளிகள் கேந்திரிய வித்தியாலயா 40, நவோதயா பள்ளிகள் 2, சைனிக் பள்ளி 1 அடங்கும்.

சிபிஎஸ்இ பள்ளிகளும் நடத்த வேண்டும்

அவை தவிர தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் செயல்படும் 565 சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும்.
அதிகாரிகளுக்கே தெரியாத உத்தரவு

தமிழக அரசின் உத்தரவு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்துவோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசின் பள்ளிகளை தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சி இது. மேலும் இந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த உத்தரவு கடந்த 18ம் தேதி பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது.

இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், மேனிலைப் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரிடம் கேட்டபோது இதுகுறித்து தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று பதில் கூறினர். கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாமல் இப்படி ஒரு உத்தரவு கடந்த 18ம் தேதி வெளியாகியுள்ளது வேடிக்கை.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி