சென்னையில் ஆசிரியர்கள் தற்கொலை முயற்சி : 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

சென்னையில் ஆசிரியர்கள் தற்கொலை முயற்சி : 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு - தினமலர்

ஆசிரியர் பணி நியமனத்திற்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி, விஷம் குடித்த, நான்கு ஆசிரியர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, போராட்டம் தொடரும்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் : தமிழகத்தில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தகுதித்தேர்வில் அதிக மதிப் பெண் பெற்றும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் குறைவால், பல ஆசிரியர் பின் தங்கும் நிலை ஏற்பட்டது. எனவே, 'வெயிட்டேஜ்' மதிப் பெண் முறையைக் கைவிட்டு, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும் என, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில், கடந்த 15 நாட்களாக, தொடர் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள், நேற்று, கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் துவங்கிய பேரணி, லங்ஸ் கார்டன் சாலையில் முடிந்தது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். பேரணி முடிவில், 'எங்கள் பிரதிநிதிகள், முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்' என, கோரினர். 'முதல்வரை சந்திக்க முடியாது; முதல்வர் தனிப்

பிரிவில் மனு கொடுக்க ஏற்பாடு செய்கிறோம்' என, போலீசார் தெரிவித்தனர்.

இதனால், ஆசிரியர்கள், போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

கபிலன், கார்த்திக், செல்லத்துரை, சந்தோஷ்குமார் என, நான்கு ஆசிரியர்கள், திடீரென பூச்சிமருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து, மயங்கி விழுந்தனர். சக ஆசிரியர்கள், நான்கு பேரையும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

'நான்கு பேரும் நலமாக உள்ளனர். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: நாங்கள், 15 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தியும், முதல்வரை சந்திக்க, போலீசார் அனுமதிக்கவில்லை. இயக்குனரக அதிகாரிகளும், தொடர் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல், எங்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, எங்களின் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான போராட்டம் நடத்தலாம் என, கூடி முடிவு செய்வோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. விரைவில் நலம் பெறவேண்டுகிறேன்.அரசு விரைவில் நல்லமுடிவெடுக்கவேண்டும்.படிக்கும்காலங்களில் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்படுவதால் தான்2014 ,ஆம் ஆண்டில் கூடஅனைவருக்கும் கல்வி(ssa) அனைவருக்கும் இடை நிலைக்கல்வி(RMSA) திட்டங்கள் உள்ளன. காமராசர்,M.G.R போன்ற தலைவர்கள் கூடபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.இன்றைய முதல்வர் கூட சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.10,20ஆண்டுகளுக்குமுன்புபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை வறுமையில்கடந்து பெற்றவர்களும் மற்றவர்களும் கஸ்டப்பட கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி ,பிறகு b.et படித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.10,20,ஆண்டுகளைக் கணக்கிடாமல் அம்மா நல்ல முடிவை எடுங்கள்.உங்கள் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும். சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்க்ளுக்கு உ ங்களைத்தவிர வேறு யார் உள்ளார்கள்.முடிவு நல்லமுடிவைத்தாருங்கள்.

    ReplyDelete
  3. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    2016 election la NANGAL SEIGIROM.
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA

    because of POISON GoNo71

    ReplyDelete
  4. Amaithi poratam ithuthana..... Neengal aasiriyargal entru veliyil sollividatheer.... Aasiriyar anaivarukum mun utharanamaga nadaka venduum.... Yarum ini ipadi seiyatheergal

    ReplyDelete
  5. poratam painna poram soinna varamatega, vetula eruthu pasa yainna thaguthe eruku kishore,poratam yaillarukaga tha,pureinje pasuga,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி