அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்.


அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில்பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 700 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனகலந்தாய்வு நடந்தது. அப்போது,"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியனம் நடப்பதால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதி இழப்பதாகக் கூறி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை ஆணை பெற்றனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்று வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பணி நியமன கவுன்சிலிங்கில் பங்கேற்ற பலர், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர்.அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளி வேலையை விட்டனர்.

தற்போது, அரசு ஆசிரியர் பணி கிடைக்காததால் தவிக்கின்றனர். இவர்களில் தேனி மாவட்டத்தில் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேனி கலெக்டர் பழனிசாமியிடம் பணி நியமனம் கேட்டு நேற்று மனு அளித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளது போல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சிக்கலுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9 comments:

  1. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. thanking you.

    ReplyDelete
    Replies
    1. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100



      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
  2. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. thanking you.

    ReplyDelete
  3. ஒரு வருடமாக காத்திருக்க வேண்டிய நிலை. இருந்த தனியார் பள்ளி வேலையும் விட்டு விட்டு நகைகள் அடகு வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம் காலம் தாமதிக்கமல் விரைந்து பணி ஆணை வழங்கினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Ungal kasdakalam kudiaveraivil marividum keep the life all is well

      Delete
  4. Life is becoming very stressful. Stil v ve to wait 1 month to join. Ohhhhh god..

    ReplyDelete
  5. Today maduri court stay case enna achi sir vijayakumar chennai sir....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி