சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு


18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு.

முதல்வர் பதவியை இழந்தார் ஜெ

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது:

"சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின்காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகசேர்க்கப்பட்டனர்.சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. வழக்குகுறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.

இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.

எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்கஉடந்தையாக இருந்துள்ளனர்.எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இரு தரப்பு வாதம்:ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.

27 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Very gud judgement. Aaana ean manasukulla bayam itha karanam kati ADW list ah vidamalo ila late ah kudupangalonu. Any one ple clarify my doubt pls

    ReplyDelete
    Replies
    1. நீதி வெ்ன்றது. நெ்ற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

      Delete
    2. p.......da unakku vela iru keda

      Delete
    3. Mr. Udaya kumar. Ungaluku engala pathi ena theryum sir. Unaku vela oru kedanu kekuringa. Olunga padikama nanga varla sir 10 th school first. 12 th la teacher ila dhadala 850 tan score panen maths group la. Diplomo la college first. Tet la 90 above canditate . 24 vayasu aana ponu sir vela kedaichadan kalyanam panuvenu oru adam. Enga amma appa. Tea estate la tea elai eaduthu engala padika vachanga. Avangaluku onum panama nama valkai ya paka kudathunu. Wait pandren. Engaa urula ean age group la oru ponnu kuda marraige agama ila. Elorum enga amma kita ponuku ean inum marrauge panala soli avangala disturb pandranga.
      Tet pass panitom mark iruku vela kedaichudum family problem solve pabidalam nu nenacha ipadi pandranga.

      Delete
    4. Amma ku judgement vanda kastapata alula nanum oruthitan inemel exam eluthi free ah teacher velaiku pona elorum. 8laks 10 lakh kuduthu velaya vanguvanga ena pola alunga thirami irundum apadi ah irukanum.

      Sir ena nadandalum enaku kedaika vendiya velaya kekurathu ean urimai atha keka neenga yaru sir

      Delete
    5. Oru school la PTA va join panathula irundu. Antha school la avlo peru vangi iruken. Na school vitu pona collector ku pettion kudupenu solura uru makkl , ithu varaikum visit vanda AEO , DEPUTY COLLECTOR, BRT' s elorukitayum nala peru vangunava. Ean pullainga ( students) ena oru akka va athaya amma va accept panitu irukanga.
      Enaku ean vela venum nu keka taguthi ila ya UDAYA KUMAR sir. Solunga pls. Ungaluku ena sir theryum engaloda feeling.

      Delete
  3. Kandavel sir . Onum problem varathe

    ReplyDelete
    Replies
    1. Government aa run panradhu only
      IAS and IPS so don't worry about

      Delete
  4. Hello Friends Don't Comments Particularly...

    ReplyDelete
    Replies
    1. Enga vayitherichal summa vidadhuma. Nee summa.

      Delete
  5. amma IAS officers solvathai mattum ketkathinga ealai village manargal eppadiyellam kastappatu TET exam eluthi pass panna piragu +2,DEGREE,B.ED.WEITAGE MARK vacheenga NANDRI 65000 tet eluthi pass pannavangaloda paavam ungalai SUMMA VIDATHU polirukke???eniyavathu tamilnaattil nalla irakka manathudan mudivedunga OK GOOD BOY!!!

    ReplyDelete
    Replies
    1. விடுகதையா எங்கள் வாழ்க்கை
      விடைதருவார் யாரோ..
      உனது ராஜாங்கம் இதுதானே
      உதிரக்கூடாது நல்லவளே
      தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
      தொல்லை நேராது தூயவளே
      கைகளில் புன்னகை நீ கொடுத்தாய் இன்று
      கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
      காவியங்கள் உனைப்பாட காத்திருக்கும் பொழுது..
      காவலில் நீயிருந்தால்
      என்னவாகும் மனது
      நீதிக்கு தண்டனை
      இது என்ன சோதனை
      அழுது அறியாத என் கண்கள் ஆறுகுளமாக மாறுவதோ
      ஏனென்று கேட்கவும் ஆளுமில்லை..
      நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
      இறைவா
      என் அன்னைக்கு ஆதரவாய் இரு

      Delete
    2. un annaiku jail la niraiya per thunaya erukaka.nee feel vidatha

      Delete
  6. JAYA disqualified as CM .3 crore to 66 crore on 1 rupee income????

    ReplyDelete
    Replies
    1. விடுகதையா எங்கள் வாழ்க்கை
      விடைதருவார் யாரோ..
      உனது ராஜாங்கம் இதுதானே
      உதிரக்கூடாது நல்லவளே
      தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
      தொல்லை நேராது தூயவளே
      கைகளில் புன்னகை நீ கொடுத்தாய் இன்று
      கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
      காவியங்கள் உனைப்பாட காத்திருக்கும் பொழுது..
      காவலில் நீயிருந்தால்
      என்னவாகும் மனது
      நீதிக்கு தண்டனை
      இது என்ன சோதனை
      அழுது அறியாத என் கண்கள் ஆறுகுளமாக மாறுவதோ
      ஏனென்று கேட்கவும் ஆளுமில்லை..
      நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
      இறைவா
      என் அன்னைக்கு ஆதரவாய் இரு

      Delete
  7. AMMA nanga above 90marks eduthum engal jobsa ilanthom but now you definitely felt our feeling.....
    God 's grace.. thank you lord..

    ReplyDelete
    Replies
    1. goldwin nambala beththu valartha thaae mattumthan AMMA entra solluku sonthakaari.maththathellam summa vanjithu saapidum koottathin vanjanai soll.tet la 107 eduthum en vaalkaiya paalakiya yaarum nimmathiya eruka vida maattaar kadavul.vaalka LORD GUNKA

      Delete
  8. விடுகதையா எங்கள் வாழ்க்கை
    விடைதருவார் யாரோ..
    உனது ராஜாங்கம் இதுதானே
    உதிரக்கூடாது நல்லவளே
    தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
    தொல்லை நேராது தூயவளே
    கைகளில் புன்னகை நீ கொடுத்தாய் இன்று
    கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
    காவியங்கள் உனைப்பாட காத்திருக்கும் பொழுது..
    காவலில் நீயிருந்தால்
    என்னவாகும் மனது
    நீதிக்கு தண்டனை
    இது என்ன சோதனை
    அழுது அறியாத என் கண்கள் ஆறுகுளமாக மாறுவதோ
    ஏனென்று கேட்கவும் ஆளுமில்லை..
    நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
    இறைவா
    என் அன்னைக்கு ஆதரவாய் இரு

    ReplyDelete
    Replies
    1. AMMA...................AIYO SAD NEWS........................NETHI SETHU VITADHU BANGALORE LA...............

      Delete
  9. Good. Judgement. Manavarkaloda feelinga. P urunchukirathavankaluku venum

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. all are expect this. now iam happy. above 90 unselected candidate

    ReplyDelete
  12. AMMA.......................................................................

    ReplyDelete
  13. enimel tet case poduratha eruntha bangalore court la podunka.vetri nitchiyam kidaikum,naayam,neethi, nermai,tharmam anaithum kondavar lord john micheal d gunka.vaalka avarin arapani

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி