'மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2014

'மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்'

கடந்த 2013 வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்' எனப்படும், இரு வினாத்தாள் முறை, வரும், 25ம் தேதி துவங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த,
மேல்நிலைக் கல்வி தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு பாடங்களுக்கு...கடந்த, 2013 மார்ச் மேல்நிலைத் தேர்வு மற்றும் அதற்கு முந்தைய மேல்நிலை தேர்வுகளில், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய ஆறு பாடங்களுக்கு மட்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள், ஜம்பிங் முறையில் அமைக்கப்பட்டு, 'ஏ' மற்றும் 'பி' என, இரு வினாத்தாள்கள், தேர்வர்களுக்கு வினியோகிக்கப்பட்டு தேர்வுநடத்தப்பட்டது. இரு வினாத்தாள்கள் இருப்பதால், இவற்றை திருத்தி, வாங்குவதற்குரிய கால அவகாசம் அதிகமானது.இதனால், 2013 மார்ச்சுக்கு பின் நடந்த தேர்வுகளில், இம்முறை கைவிடப்பட்டு, ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே வினாத்தாள் என்பதால், அருகருகே அமர்ந்திருக்கும் மாணவர்கள் காப்பி அடிப்பது, ஒரு சில பள்ளிகளில், 'சைகை' மூலம் ஒரு மதிப்பெண் வினாவுக்கு விடை சொல்வது தொடர்ந்தன. இதனால், மீண்டும், ஜம்பிங் முறையை அறிமுகப்படுத்த, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.அரசு தேர்வுகள் இயக்கக மேல்நிலை கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி விடுத்துள்ள சுற்றறிக்கை: கண்காணிப்பாளர்கள் வரும், 25 முதல், அக்., 10ம் தேதி வரையுள்ள, மேல்நிலை தேர்வுகளின் போது, முந்தைய மேல்நிலை தேர்வுகளில், பின்பற்றப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, 'ஏ' மற்றும் 'பி' ஜம்பிங் முறை வினாத்தாள்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்த விவரங்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு, தெரிவித்து, அவர்கள் தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

3 comments:

  1. ஆல் எஜூகேட்டஸ் மன்டயன்ஸ்களா
    டோனட் வொரி முூஞ்ச கொஞ்ச சிரிச்ச மாதிரி வைங்கப்பா
    நாளைக்கு உஸ்கூலுக்கு போனா நம்ம டெரர் முஞ்சிய பாத்து ஆல் சில்ரன்ஸ்கு வேப்பில தான் அடிக்கனும்
    முக்கா கெனறு தான்டியாச்சூ இன்னங் கொஞ்சந்தான்
    தட் ப்ளாக் பிக் பத்தியோ அவனோட அன்டப்பழுக பத்தியோ கவல படாதீங்க
    அப்புறம் இன்னைக்காவது பல்லு வௌக்கிட்டு டீ குடிங்கடா

    ReplyDelete
  2. Good morning all kalviseithi nanbargale...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி