கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள்பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள்பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்கள்

தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள அரசு பள்ளிகளில் 100 பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் முதுகலையில் 900,பட்டதாரியில் 300 புதிய ஆசிரியர் பணி காலியிடங்கள் உருவாகும். இந்த இடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வுஆசிரியர்கள்,எஞ்சிய 50 சதவீதத்தில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், சட்டசபை அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டதால் பாடம் வாரியாக பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள 450க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை-பட்டதாரி பதவி உயர்வில் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விரைவில் தரம் உயர்வு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் விவரம் வெளியிடவேண்டும் என, அவர்கள் கோரியுள்ளனர்.இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மாவட்ட அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் விவரம் அறிவிக்காததால், சீனியர் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறமுடியவில்லை. கல்வியாண்டின் துவக்கத் தில் தரம் உயர்வு பள்ளிகளை அறிவித்து, உருவாகும் இடங்களை நிரப்பினால் மாணவர்களின் கல்வி பாதிக்காது. 50 சதவீத புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு டி.ஆர்.பி., தேர்வு நடத்தவேண்டிய நிலையில், தாமதிப்பது மாணவர், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்,” என்றார்.

2 comments:

  1. BC&MBC க்கு 3 % மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என்று வாதத்தை வைத்த வழக்கறிஞர் அவர்களே
    உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா ?
    எந்த அரசியல் சட்டத்தில் சமமாக சலுகை வழங்க கூடாது என்று விதிமுறைகள் உள்ளது.?
    ஏன் பிற்பட்ட மக்கள் மட்டும் மண்ணை தின்றாலும் செறித்துவிடுமா ?
    இது நாள் வரை பிற்பட்ட மக்களை ஏமாற்றியது போதும்.இன்று தங்கள் சுயநலத்துக்காக இடஒதுக்கீட்டில் சமமாக தளர்வு வழங்கியது தவறு என்று வாதிடும் நீங்கள் பிற்பட்ட மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளி புதைத்து கொன்று விடலாம் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி