சென்னை பல்கலைக்கழகம் திட்டம் ஆன்லைன் மூலமே மாணவர்கள் தேர்வு எழுதி ஆசிரியர்கள் மதிப்பிடும் முறை துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2014

சென்னை பல்கலைக்கழகம் திட்டம் ஆன்லைன் மூலமே மாணவர்கள் தேர்வு எழுதி ஆசிரியர்கள் மதிப்பிடும் முறை துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி

சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் மூலம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி விடைகளை ஆன்லைனிலேயே ஆசிரியர்கள் மதிப்பிடும் முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 175-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளிவருவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் விரைவாக முடிவை வெளியிட வேண்டும் என்று மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர்.

ஆன்லைன் மூலம் தேர்வு

இது தொடர்பாக தேர்வுத்துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவீர்களா? என்று கேட்டதற்கு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறியதாவது:-

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித்துறையில் நடவடிக்கை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறையில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் தேர்வு முடிவுகளை 25 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளோம்.

இன்னும் கூடுதல் வசதியாக மாணவ-மாணவிகள் ஆன்லைனில் கம்ப்யூட்டரிலேயே தேர்வு எழுதி, அந்த விடைகளை ஆசிரியர்களும் ஆன்லைனிலேயே மதிப்பீடு செய்து விரைவாக தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்டு அது சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து, முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

2 comments:

  1. அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???

    Source From : The Hindu Covai Edition

    ReplyDelete
    Replies
    1. தகவலை முலுமையாக பதிவிடுங்கல் நண்பரே!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி