எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் - தினத்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் - தினத்தந்தி

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

நடைபெற உள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர்–2014, எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்–லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 2–9–2014 செவ்வாய்கிழமை (இன்று) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘‘SSLC SEPTEMBER/OCTOBER 2014 EXAMINATION HALL TICKET’’ என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்து, தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. Replies
    1. பாதிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் சென்ரல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்று கூடுவோம்.

      வெயிட்டேஜ் முறைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெரும்.
      ஆதரவு தாருங்கள் நண்பர்களே.

      தன் உயிரையும் துச்சமென நினைத்து நமக்காக உயிரை விட நினைத்த நண்பர்களுக்கு நாம் என்ன செய்யபோகிறோம். குறைந்தபட்சம் இந்த தொடர் போராட்டத்தில் ஒரு நாளாவது கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டாமா. வாருங்கள் நண்பர்களே உங்ககளின் வருகை நம் அனைவரின் வெற்றி.

      சென்றால் வெற்றியோடு செல்வோம்.
      இல்லையேல் மண்ணோடு மண்ணாவோம்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி