ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து.


ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பதுஎன் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின்கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில்,குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர்அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. BC&MBC க்கு 3 % மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என்று வாதத்தை வைத்த வழக்கறிஞர் அவர்களே
    உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா ?
    எந்த அரசியல் சட்டத்தில் சமமாக சலுகை வழங்க கூடாது என்று விதிமுறைகள் உள்ளது.?
    ஏன் பிற்பட்ட மக்கள் மட்டும் மண்ணை தின்றாலும் செறித்துவிடுமா ?
    இது நாள் வரை பிற்பட்ட மக்களை ஏமாற்றியது போதும்.இன்று தங்கள் சுயநலத்துக்காக இடஒதுக்கீட்டில் சமமாக தளர்வு வழங்கியது தவறு என்று வாதிடும் நீங்கள் பிற்பட்ட மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளி புதைத்து கொன்று விடலாம் .

    ReplyDelete
  2. ன்னா கரக்டா சொன்னீங்னா

    ReplyDelete
  3. The teachers also have a right to get their rights

    ReplyDelete
  4. Friends view new website
    http://kalvikooda.blogspot.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி