முதன்மை தேர்வை தள்ளி வைக்க யு.பி.எஸ்.சி.,க்கு புதிய கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

முதன்மை தேர்வை தள்ளி வைக்க யு.பி.எஸ்.சி.,க்கு புதிய கோரிக்கை

'இந்த ஆண்டுக்கான, சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை, வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு பதிலாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த, யு.பி.எஸ்.சி., முன்வர வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, இந்திய ஆட்சிப்பணிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்சி., ஆண்டுதோறும் நடத்துகிறது. இவை, முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இந்நிலையில், சட்டம், நீதித்துறை, அரசுப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஆகியவற்றுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, டில்லியில் சமீபத்தில் கூடியது.நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்ட பின், முதன்முறையாக கூடிய இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:நிலைக்குழு கூட்டத்தில் பேசிய எம்.பி.,க்கள் பலரும், 'ஆகஸ்ட்டில் முதல்நிலை தேர்வை எழுதிவிட்டு, டிசம்பரில், முதன்மை தேர்வை எழுத வேண்டும் என, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது; இது எப்படி சரியாக இருக்க முடியும்' என, கேள்வி எழுப்பினர். இதில், நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.ஓராண்டுக்குள், தங்களின் அனைத்து பணிகளையும், முடிக்க வேண்டுமென்ற நோக்கில், யு.பி.எஸ்.சி., அவ்வாறு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். இது, மாணவர்களுக்கு, மிகப்பெரிய நெருக்கடியை அளிக்கும்.இப்போது தான், முதல்நிலை (பிரிலிமினரி) தேர்வுகள், நடந்து முடிந்துள்ளன. எனவே இந்த ஆண்டுக்கான, சிவில் சர்வீஸ் முதன்மை (மெயின்) தேர்வை, வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு பதிலாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதே, சரியான தீர்வாக இருக்க முடியும்.இந்த ஆண்டுக்கு மட்டும் தான், மாற்றம் தேவை. இதுகுறித்த பரிந்துரையை, நிலைக்குழு சார்பில், யு.பி.எஸ்.சி.,க்கு அறிவுறுத்திஉள்ளோம்.இவ்வாறு, சுதர்சன நாச்சியப்பன், கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி