மக்கள் நலப்பணியாளர் வழக்கில் இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

மக்கள் நலப்பணியாளர் வழக்கில் இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு


மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் “மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபருக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மாற்றுப் பணி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அவர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தது.தமிழக அரசு தனது மனுவில்: "மக்கள் நலப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க இயலாது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

10 comments:

  1. Ajantha madam enna private schoola work panna poiteengala? Appadi irunthal udane resign pannunga.nama only govt schooluku than poga porom. eppadinu mattum ketkatheenga. Adhu nitchayam nadakkum .wait and see

    ReplyDelete
    Replies
    1. Private school ila sir . Govt school sir. ADWPS Rangatha puram. Perar, the nilgiris.

      Future la na work pana pora school um ithutan sir. Ipo PTA teacher. Future la GOVT teacher .
      Nadakum la sir???????

      Delete
    2. kandipaga nadakum mam all selected pray for u mam.

      Delete
    3. Litesh krishna sir thank u so much sir. Ungal vakku palicha am so happy sir. Apuram vela kedaicha keda vetti virundu vaikuren vandurunga sir

      Delete
  2. Replies
    1. Ravi sir namaku list viduvanga sir.
      Enaku theringu nilgiri dist la 38 school la ( WELFARE SCHOOL) vaccant iruku.

      Delete
  3. Supreme court jutgment partingala sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி