திருக்குறள் நடையில் புதுக்குறள்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

திருக்குறள் நடையில் புதுக்குறள்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம் - தினமணி

அரச்சலூரைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சாலமன் (44) திருக்குறள் நடையில் புதுக்குறள் எழுதி வருகிறார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளை 2 அடியில் எழுதியது போல இவரும், 2 அடியில் புதுக்குறள் எழுதி வருகிறார். இதுவரை எழுதப்பட்ட 108 குறள்களை, 1.5 செ.மீ. உயரம், 3 செ.மீ. அகலம் கொண்ட மிகச்சிறிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இதற்கு புதுக்குறள் எனத் தலைப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு குறளுக்கும் ஒரு தலைப்பு உண்டு. நல்வாழ்வு, உயர்வு, உள்ளத்தூய்மை, தமிழ்மொழி, பால்நிலா, அம்மா, மழைநீர் சேமிப்பு, திருக்குறள், வெற்றி, அன்பு, தீண்டாமை, வீரம், சினம், வினை, ஆசிரியர், உண்மையும், பொய்யும், நல்விதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குறள்களை இவர் எழுதியுள்ளார்.

தனது புதுக்குறள் குறித்து ஓவிய ஆசிரியர் சாலமன் கூறுகையில், ஒரு திரைப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து 10 குறள்களை இயற்றிப் பாடியுள்ளதாக நாளிதழில் வாசித்தேன். இதுவே, எனக்கு குறள் போன்று எழுத உந்துதலாக இருந்தது.

ஓவியனாகவும், புகைப்பட கலைஞனாகவும் இருப்பதால் சிறிய புத்தகத்தை நானே உருவாக்க முடிந்தது. இதுவரை 180 குறள்கள் எழுதிவிட்டேன் என்றார்.

இவர், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெயவேணி என்ற மனைவியும், பால்நிலவன் என்ற மகனும் உள்ளனர்.



இவர் எழுதிய புதுக்குறளில் சில...

வாழ்வாங்கு வாழ்வார்யாரோ அவர் செஞ்சூரியன்

எழும்முன் எழுவார் அவரே.

நடையழகு உடையழகு விழியழகு என்பாரே அவர்

பால்நிலாவின் உலாஅழகை ரசிக்காதவர்.

3 comments:

  1. Replies
    1. பாதிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் சென்ரல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்று கூடுவோம்.

      வெயிட்டேஜ் முறைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெரும்.
      ஆதரவு தாருங்கள் நண்பர்களே.

      தன் உயிரையும் துச்சமென நினைத்து நமக்காக உயிரை விட நினைத்த நண்பர்களுக்கு நாம் என்ன செய்யபோகிறோம். குறைந்தபட்சம் இந்த தொடர் போராட்டத்தில் ஒரு நாளாவது கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டாமா. வாருங்கள் நண்பர்களே உங்ககளின் வருகை நம் அனைவரின் வெற்றி.

      சென்றால் வெற்றியோடு செல்வோம்.
      இல்லையேல் மண்ணோடு மண்ணாவோம்.

      Delete
    2. 2007 LAE PUTHUKURAL ELTHI 19 VAYATHILAE ORU MANAVAR SATHITHU VITTAR....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி