உடற்கல்வி இயக்குநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

உடற்கல்வி இயக்குநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?

தமிழகத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு விளையாட்டுகளில் அபாரத் திறமைகொண்ட மாணவர்கள், அரசுக் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால் அங்கு உடற்கல்வி இயக்குநர்கள் இல்லாததால் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் இப்போது 83 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (டிஆர்பி) நிரப்புவதற்கான நவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இதுபோல, இந்தக் கல்லூரிகளில் காலியாக இருந்த நூலகர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், அண்மையில் ஓரளவுக்கு நிரப்பப்பட்டன.

இந்த நிலையில், அரசுக் கல்லூரிகளில் 20 கல்லூரிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளனர். மீதமுள்ள கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன என்கின்றனர் பேராசிரியர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்மணி, பொதுச் செயலாளர் பிரதாபன் ஆகியோர் கூறியதாவது:

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் மூலம், விளையாட்டுகளில் தனித் திறமைமிக்க மாணவர்கள் சிறந்த வாய்ப்பைப் பெறுவர்.

ஆனால், பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த திறமையைப் பெற்றிருந்தும், அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாத பல மாணவர்கள் அரசுக் கலைக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு, ஊக்குவிக்கும் திறமை உடற்கல்வி இயக்குநர்களுக்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அவர்களைச் சரியாக வழிநடத்தினால் விளையாட்டில் சாதனையாளர்களாகி, மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்து தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், 50-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த இடங்களில் பொறுப்பு அதிகாரிகளாகப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கு வேலைப்பளு கூடுவதோடு, மாணவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுத்தர முடியாத சூழலும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்போது சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ள மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளிலும், திறமைமிக்க மாணவர்கள் பலர் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

எனவே, உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அல்லாமல் டிஆர்பி மூலமாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்றனர்.

2 comments:

  1. இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
    நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
    எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
    இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
    ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

    இப்படிக்கு
    சத்தியமூர்த்தி

    We can change everything,
    All come to chennai
    21.09.2014

    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy (erode)
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர் பணி நியமனம் எப்போது ?.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி