பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2014

பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!


தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும். உடனடியாக அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் அவ்வப்போது புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் சில பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. இவர்களுடைய பட்டப் படிப்புகளைத் தகுதியற்றவையாக ஆசிரியர் தேர்வு வாரியம்புறக்கணிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.இதுகுறித்து அந்த கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கூறியது: ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரங்களைத் தயாரிக்கும் பணி வரும் டிசம்பரில் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாணையாக வெளியிடப்படும்.

இதில் தொழில்நுட்பம், கணிதம், வணிகவியல், சமூக அறிவியல்,உயிரியல், கல்வி, மொழிகள் உள்பட 8 தலைப்புகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு தலைப்பின் கீழும், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் தொடர்புடைய படிப்புகள் அனைத்தும் கொண்டு வரப்படும்.மேலும் மூலப் படிப்புக்கு, அதன் கீழ் வரும் பிற படிப்புகள் எந்த அளவுக்கு இணையானவை என்பது தெரிவிக்கப்படும். உதாரணமாக, வணிகவியல் தலைப்பின் கீழ் எம்.காம்., எம்.சி.எஸ்., எம்.காம். (சி.எஸ்.), எம்.ஏ. (சி.எஸ்.) உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கொண்டுவரப்படும். அதோடு, மூலப் படிப்பான எம்.காம். முதுநிலை பட்டப் படிப்புக்கு எம்.சி.எஸ்., உள்ளிட்ட பிற படிப்புகள் எத்தனை சதவீதம் இணையானது என்பது தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இதில் மூலப் படிப்புகளுக்கு 75 சதவீதம் இணையான படிப்புகளை மட்டுமே, அந்தந்தத் துறைகளுக்கு தகுதியான படிப்புகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் கருத்தில் கொள்ளும். இந்தவிவரங்கள் வெளியிடப்படுவதன் மூலம், மாணவர்களிடையே எழும் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் என்பதோடு, படிப்புகளில் சேருவதற்கு முன்னரே அவை எதற்கு இணையானவை என்பதை அறிந்து சேர முடியும் என்றார்.

3 comments:

  1. What is the equivalent of bio chemistry

    ReplyDelete
  2. Those who are join to file the case to supreme court about GO 71 & 25 (near madurai)
    Give u r name , ph no and email id pls send to email id jollykannan@yahoo.co.in Before thurday 2 pm .Thank u .

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

    தாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .

    1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .

    2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .

    3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?

    4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .

    5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .

    மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .

    மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்

    இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .

    சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,

    இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.

    அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )


    தொடபுக்கு :

    சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141

    புதுக்கோட்டை : 9943228971

    வேலூர் : 7220724755

    திருவண்ணாமலை :7639497834

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி