சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார் நினைவுதினம் இன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார் நினைவுதினம் இன்று


இந்திய சுதந்திரப் போர்க்களத்தில் சுதேசி சிந்தனை யுடன் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய வீரர்கள் அநேகம்பேர். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! காரணம் தம் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்க, அம்மண்ணின் மைந்தர்கள் போராடுவது இயல்பானதும் யாராலும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.

ஆனால், வேற்று நாட்டில் பிறந்து, இந்த மண்ணுக்கு வந்து, இந்தியா என் தாய்நாடு என்று உள்ளத்தால் ஒன்றிப்போய், இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தார் ஓர் அன்னிய நாட்டுப் பெண்மணி, என்றால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும். ஆம். அப்படி ஒருவர்தான் புகழ்பெற்ற ஹோம்ரூல் இயக்கம் தொடங்கிய அய்ரிஷ் பெண்மணியான அன்னிபெசன்ட் அம்மையார்.

அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்ட அன்னிவுட் பிறந்தது லண்டனில். 1847 அக்டோபர் முதல் தேதி பிறந்தவர் அன்னிவுட். அவருடைய தந்தை டாக்டர் வில்லியம் பேஜ்வுட் என்பவர். தாயார் பெயர் எமிலி என்பது. எமிலியின் முன்னோர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அன்னியின் தந்தை மருத்துவ வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மேதையாகவும் திகழ்ந்தார். அரசியல் மற்றும் சமூக எண்ணம் கொண்டிருந்த அன்னிபெசன்ட் 1913 இல் நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1918 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரே தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இப்படி காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றார் அன்னி பெசன்ட் அம்மையார். 1917 இல் மாதர் சங்கம் அமைத்தார். அதன்மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வுகளைப் பரப்பினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடப்பதால், அவர்களில் பெரும்பாலோர் இளவயதிலேயே விதவைகளாக ஆகி விடும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து பால்ய விவாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார். இறுதியில் அவர் 1933 செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தம் 86 ஆம் வயதில் இறந்தார்.


பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட போராடிய பெண்

பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.

1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக் காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.

1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத் தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.

1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற் சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர் களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென போராடினர்.

1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கவுரவம் குலைக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினார். 1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சம உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வா றெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.

மேலும் சில தகவல்கள்....


அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியா முழுவதும் பிரபலமானவர். காங்கிரஸ் தலைவராக இருந்தவர். ஆனால், அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு என்றும் மறக்க இயலாது.

ஆரம்ப காலத்தில் அடையாற்றின் தெற்குக் கரையில் தியோசோபிகல் சொசைட்டி 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. பின்னர் 270 ஏக்கர் நிலப்பரப்பானதாக ஆக்கிய இந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் தொழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

400க்கும் மேற்பட்ட வயதுடைய அடையாறு ஆலமரமும் இந்த இடத்தில் தான் உள்ளது. இந்த மரத்தின் கீழ் தான் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கும் எண்ணம் ஆக்டேவியன் ஹூயூம் என்பவரால் முன்மொழியப்பட்டது. மேலும் தியோசோபிகல் சொசைட்டியில் உள்ள புத்தர் சிலை 800 ஆண்டுகள் பழமையானது.

அன்னி பெசன்ட் 1847ல் லண்டனில் பிறந்திருந்தால் கூட, அவர் சென்னையில் நீண்ட காலம் இருந்தார். தியோசோபிகல் சொசைட்டியை ஆரம்பித்த எம்.பி.பிளாவட்ஸ்கியின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அன்னி பெசன்ட் அம்மையாரும் தியோசோபிகல் சொசைட்டியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இதன் சார்பாக 1893ல் இந்தியா வந்தார். இங்கு வந்த பிறகு அவருக்கு தியோசோபிகல் சொசைட்டி மட்டுமின்றி இந்திய சுதந்திர போராட்டத்திலும் ஆர்வம் ஏற்பட்டது.

சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டர் என்பவருடன் சேர்ந்து சொசைட்டியில் சேவை செய்ய ஆரம்பித்தார். இவர் மூலமாகத்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறிமுகபடுத்தப்பட்டு பிற்காலத்தில் சிறந்த தத்துவமேதையாக உலகத்தால் அறியப்பட்டார். ஆரம்ப காலத்தில் அம்மையாருக்கு எதிர்ப்பு இருந்தது. பாரதியார் கூட இவரின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளவில்லை.

அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம், காங்கிரசின் கொள்கையை ஒத்திருந்தது. அவரது சிறைவாசம் ஹோம்ரூல் இயக்கத்தை பிரபலமாக்கிவிட்டது. கல்கத்தாவில் நடந்த 1917ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின், தலைவராக அன்னி பெசன்ட் அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933ல் இவர் காலமானார்.

20 comments:

  1. பெண்ணியம் போற்றிய வீரத்தாய்க்கு என் வீர வணக்கம்.

    ReplyDelete
  2. பெண்ணியம் போற்றிய வீரத்தாய்க்கு என் வீர வணக்கம்.

    ReplyDelete
  3. பெண்ணியம் போற்றிய வீரத்தாய்க்கு என் வீர வணக்கம்.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பரே. என் நண்பர் ஒருவர் ராஜி என்பவர் தமிழில் தேர்வாகி தினமும் அழுது மன வேதனை அடைகிறார், எதாவது ஆறுதல் கூறவும்.

    ReplyDelete
  5. திரு,மணியரசன் அவர்களே,செவ்வாய்கிழமை டெல்லி தீர்ப்பு பற்றி சற்று தெளிவாக கூறுங்கள்

    ReplyDelete
  6. திரு,மணியரசன் அவர்களே,செவ்வாய்கிழமை டெல்லி தீர்ப்பு பற்றி சற்று தெளிவாக கூறுங்கள்

    ReplyDelete
  7. வெயிடெஜ் முறையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே பணி நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்க வேண்டும் 18 பேர் பாதிக்கப்பட்டதற்காக 14000 பேரை பழிவாங்குவதா .
    தேர்வானவர்களே இது சரியா நாம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் ?
    ஏற்கனவே ஒரு வருடம் தாமதம் .
    கடிதம் மூலம் நீதிதுறைக்கு கோரிக்கையை அனுப்புங்கள்
    தகவல் அறியும் சட்டம் மூலம் பதில் கேளுங்கள் .
    இல்லை என்றால் எதிர் காலத்திலும் இதே கதை தொடரும்.

    ReplyDelete
  8. நீதி தேவதை neengal solvathu unmai 100% supreme court la case varuthu seniority case

    ReplyDelete
  9. Thagaval thandha sri nanbaruku vaazhthukkal...

    ReplyDelete
  10. Dear friend supreme court 23rd sep la seniority case varuthu this is 100%true.
    Dmk period la cv attend pannavanga 32000 candidate 22000 cv candidates appointment order kuduthutanga remaining 10000 candidate waiting la irukum pothu ADMK posting poda mudiyathu solitanga next TET exam calfer pannanga antha notifications la 23.8.2010 before cv candidates not write tet exam nu kuduthu irukanga so cv candidate high court division bench la case pottu win pannanga
    summa win pannalama
    *pending G.O
    *Ncte rules
    itha vachu win pannanga govt lawyer ippothu vacancy illa future la podranu sonnaru July la judgements order kuduthanga CV candidates not write tet exam future vacancy cv attend pannavangalukku posting podanum order kuduthanga 3 months after govt supreme court la appeal pannanga coming Tuesday judgement

    ReplyDelete
  11. நண்பர்களே செவ்வாய் அன்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது என்பது பற்றி யாரும் அதை நம்பி மனம் தளர வேண்டாம்.

    உண்மை யென்றால்
    சுப்ரீம் கோர்ட்டு Case list details
    & list தரட்டும் நம்புவோம்..

    அப்படியே ஒருவேளை இந்த வழக்கு வந்தால் கூட தேர்வான ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்....
    விஜய் ரிஷ்வா

    ReplyDelete
  12. நண்பர்களே செவ்வாய் அன்று உச்ச
    நீதி மன்றத்தில்
    வழக்கு உள்ளது என்பது பற்றி யாரும்
    அதை நம்பி மனம் தளர வேண்டாம்.
    உண்மை யென்றால்
    சுப்ரீம் கோர்ட்டு Case list details
    & list தரட்டும் நம்புவோம்..
    அப்படியே ஒருவேளை இந்த வழக்கு வந்தால்
    கூட தேர்வான ஆசிரியர்களுக்கு எந்த
    பாதிப்பினையும் ஏற்படுத்தாது ஏன் என்றால்
    தற்போதுள்ள
    காலிப்பணியிடங்கள்
    நம்மை கொண்டு நிறப்
    பட்டுவிட்டதாகவே கருதப்படும்.
    நமக்கு ஏற்கனவே பணிநியமன ஆனை முதல்வர்
    வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
    எனவே எதை நினைத்தும் கவலை படாதீர்கள்..
    தீர்ப்பும் அரசுக்கு சாதகமாக வரும்.. be cool my
    dear guys

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Dear friends supreme court news is correct there is no doubt in that because i am already attended secondary grade teachers verification in 2010 so only i am saying but it is benefit only for seniority teachers because tet candidates agitation only but there is one solution for this Monday judgement Tuesday joining means only solution for this or else no solution for tet candidates

    ReplyDelete
  15. first we will see the judgment how it is going to be

    ReplyDelete
  16. Vallavanukku vallavan undu vaiyagathil.

    ReplyDelete
  17. Finally we will wait the historical JUDGEMENT DAY...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி