மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல


''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார்.

டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஆதார் அடிப்படையிலான, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையானது, இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும்.

அதனால், இனி, தங்களின் வருகைப் பதிவு விபரங்களை, attendence.gov.in என்ற இணையதளம் மூலமாக, மத்திய அரசு ஊழியர்கள் பார்க்கலாம்.மையப்படுத்தப்பட்ட மேலாண்மை முறை மூலம், இந்த வருகைப்பதிவு கையாளப்படும். மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் அலுவலகங்களில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து, தங்களின் அலுவலக வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதன்மூலம், ஊழியர்கள் சரியான நேரத்திற்கும், ஒழுங்காகவும் பணிக்கு வருகின்றனரா என்பதை அறிந்துகொள்ளலாம்.தற்போது, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில், 1,816 பயோ மெட்ரிக் கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம், 43 ஆயிரம் பேர், தங்களின் வருகையை பதிவு செய்கின்றனர்.இவ்வாறு, ராம்சேவக் வர்மா கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி