மீண்டும் வேலை வழங்க வேண்டும்: கணினி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

மீண்டும் வேலை வழங்க வேண்டும்: கணினி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு.


மதுரை: பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீண்டும்பணி வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக இருந்த 600க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடையாவில்லை என அரசு திடீரென்று பணியை விட்டு நீக்கியது.
கடந்த ஒரு ஆண்டுகளாக பணி இழந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த நாங்கள்,பணி நிரந்தரம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தோம்.

கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி எங்கள் அனைவரையும் திடீரென அரசு வேலையில் இருந்து நீக்கியது.தொடர்ந்து பணியாற்ற வேண்டுமெனில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால், தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டோம். எனவே எங்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினகரன்.(பதிவு :2014-09-16 )

8 comments:

  1. TET STAY CASE tomorrow come,

    29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    CAVEATOR FOR RESPONDENT
    and For Stay
    MP(MD).2/2014 - DO -

    AND
    (B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    CAVEATOR FOR RESPONDENT
    To Dispense With
    MP(MD).2/2014 - DO -
    For Stay
    MP(MD).3/2014 - DO -

    ReplyDelete
  2. yes
    govt not appear the case
    news from madurai hc.....

    ReplyDelete
    Replies
    1. yes sir because government waiting for the judgement sir......

      Delete
  3. அது என்ன மாணவர்கள் நலன் அப்படினா முதல் சான்றிதழ் முடிக்கும் போது தெரியவில்லையா .
    மாணவர்களுக்கு மட்டும் தான் நலனா ஆசிரியர்களுக்கு இல்லயா.
    ஒவ்வொரு தகவல்கள் அனைத்தும் எல்லா பட்டதாரி ஆசிரியர்கள் படிக்கராங்க ஓரலவுக்காவது உண்மயா பதிவு பன்னுங்க.

    ReplyDelete
  4. ஏனுங்னா இந்த வருசத்துக்குள்ள நமக்கு வேல கிடைக்குங்ளா

    ReplyDelete
  5. when will the computer instructors appointment notification?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி