மத்திய அரசு பணியிடங்களில் வடகிழக்கு மாநிலத்தவர்கள்: புதிய நடைமுறையால் தமிழகத்தில் பெரும் குழப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

மத்திய அரசு பணியிடங்களில் வடகிழக்கு மாநிலத்தவர்கள்: புதிய நடைமுறையால் தமிழகத்தில் பெரும் குழப்பம்.


தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) புதிய நடைமுறையால், பணிகள் முடங்கி உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகப் பணிக்கு வந்தவர்கள், சொந்த மாநிலங்களுக்கு பணி மாறுதல் கேட்பதால், தமிழகத்தில் மீண்டும் காலி பணியிடங்கள்ஏற்படும் என தெரிகிறது.

9 மண்டலங்கள்:

மத்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளுக்கு, மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், ஊழியர்களை தேர்வு செய்கிறது. இதற்காக, நாட்டை ஒன்பது மண்டலங்களாகப் பிரித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளா போன்றவை தென் மண்டலத்தைச் சேர்ந்தவை.இந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு துறைகளுக்கு, அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்யும் நடைமுறை, 2012 வரை பின்பற்றப்பட்டது. இதனால், மொழிப் பிரச்னை இருக்காது. ஆனால், 2013 முதல், மத்திய அரசு பணிஇடங்களுக்கு நடைபெறும் தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.இதையடுத்து, அசாம், மேகாலயா போன்ற, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளுக்கான, பணியாளர் தேர்வை எழுதலாம்.

தேர்ச்சி:

தமிழகத்தில், 2013ல், 2,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களை தேர்ந்தெடுக்க, பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தியது. இதில், 90 சதவீதம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி நியமனமும் வழங்கப்பட்டது. குறிப்பாக, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிளார்க், வருமான வரி ஆய்வாளர் போன்ற கீழ்நிலைப் பணிகளில், இவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். தமிழகத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அலுவலக மொழியாக உள்ளது.வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, இவ்விரு மொழிகளுமே தெரியாது. அவர்களுக்கு அவர்களது தாய்மொழி அல்லது இந்தி தான் தெரியும்.

முடங்கியுள்ளன:

அன்றாடப் பணிகளைக் கூட, இப்பணியாளர்களால் செய்ய முடியவில்லை. அதனால், ஊழியர்கள் நியமிக்கப்பட்டும், மத்திய அரசு அலுவலகப் பணிகள் முடங்கியே உள்ளன என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர் சங்கப் பொதுச்செயலர் துரைபாண்டியன் கூறியதாவது:மண்டல வாரியாக நிரப்பப்படும் தேர்வுகளில், அந்தந்த மண்டலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை, மொழிப் பிரச்னை இல்லாமல் இருந்தது.இத்தேர்வு முறையில், மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் கொண்டு வந்த புதிய நடைமுறைக்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதைபொருட்படுத்தாமல், யார் வேண்டு மானாலும், எங்கு வேண்டு மானாலும் தேர்வு எழுதலாம் என்ற பணியாளர் தேர்வு ஆணையத்தின் நடவடிக்கையே, இப்பிரச்னைக்குக் காரணம்.மத்திய அரசு தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடத்தப்படுகிறது. இந்தி வட மாநில மக்களின் தாய்மொழி மற்றும் அலுவல் மொழி என்பதால், அவர்கள், இத்தேர்வுகளில் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். தமிழகம் போன்ற மாநிலங்களில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் அலுவல் மொழியாக உள்ளது.

பெரும் பிரச்னை:

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களால், தமிழகத்தில் பணியாற்ற முடிவதில்லை. பணியில் சேர்ந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், தற்போது, சொந்த மாநிலங் களுக்கு பணி மாறுதல் கோருகின்றனர்.எனவே, ஏற்கனவே அமலில் இருந்தது போல, அந்தந்த மண்டலத்தைச்சேர்ந்தவர்களை, கீழ் நிலைப் பணிகளுக்கு நியமிக்க வேண்டும் என்ற முறையை பின்பற்ற வேண்டும். இல்லையேல், மத்திய அரசு அலுவலகங்களில் பெரும் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

35 comments:

  1. NAL vaazlthukal nalla naalai ammaiya

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் போச்சி.

      Delete
    2. நிம்மதியற்ற வாழ்க்கை.

      Delete
    3. எத்தனைப்பேர் பைத்தியமாக போகிறார்களோ.ஏர்வாடி அனேகமாக புல்லாக போகுது.

      Delete
    4. கவுன்ஸ்லிங் முடிச்சவங்களுக்கு போஸ்ட்டிங் போடுங்க.பாஸ் பண்ணவங்கள சீனியாரீட்டியில முன்னுரிமை தாங்க வாழ்க்கையில ஒளிவிளக்கேத்துங்க

      Delete
    5. Good news for selected candidates be ready teachers

      Delete
    6. கருப்பு ரோசா நண்பரே உங்களை போல் மற்றவர்களுக்கும் இந்த எண்ணம் வரவேண்டும்
      வாழ்த்துகள்

      Delete
    7. கருப்பு ரோசா நண்பரே உங்களை போல் மற்றவர்களுக்கும் இந்த எண்ணம் வரவேண்டும்
      வாழ்த்துகள்

      Delete
  2. Good morning. Hai enraikku theerupu nichayamaka arasukku sathakamakave amaiyum.athanal velaikku poka thayarakunkal.god and arasu erandume mamba Bakkam.order ready go......go.....go...go....go

    ReplyDelete
  3. Enna ok va.ready start 123456789 ok.

    ReplyDelete
  4. All the best to all tet canditates

    ReplyDelete
  5. Cant sleep... god bless us today.... all is well.... all is well

    ReplyDelete
  6. Gud morning to all.
    Inaikavathu intha tet ku oru thirvu kedaikanum.
    Court judgement ena irundalum atha apadiye accept panika muyarchi seyvom frnds.
    இந்த நாள் இனிய நாள் ஆக அமை்ய என் வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  7. Good morning have a nice day to all

    ReplyDelete
  8. Good morning to all.All the best.God is great.

    ReplyDelete
  9. Inakoda indha tet problem mudianum pala naatkalaga thukam pochu

    ReplyDelete
  10. All the best to all selected canditate s. God is great.ok.

    ReplyDelete
  11. G morning to all today the cloud must remove. We have to see the sun

    ReplyDelete
  12. Thirupathy elumalai venkatesa..u arulal nangal anaivarum pani niyamana anai pera vendum...good morning selected friends ..valga valamudan...

    ReplyDelete
  13. GOOD MORNING SANDEEP ., ELLAM NALLATHAE NADAKKUM., UNGALIN

    SEVAI SIRAKKA VALTHUKKAL., YESTERDAY FULL A THOONGALIYA., ., DONT FEEL

    ANYABOUT THING., BE HAPPY., VALGA VAZHAMUDAN.,

    TODAY READY TO JOIN THE DUTY TOMRW., CONFIRM., BE HAPPY.,

    ReplyDelete
    Replies
    1. Thank u velmurugan sir..ur words make me confidence and strength ..thaank u once again for ur positive thought..

      Delete
  14. நல்லா மனதோடு தெளிவான தீர்ப்பு கிடைக்க நீதி அரசர் அவர்களுக்கு குழப்பம் இல்லாத மனதை கொடு பிள்ளையார் பட்டி அப்பனே !

    ReplyDelete
  15. DEAR VIJI YOUR GUESSING! NEVER MISSING! PLEASE?

    ReplyDelete
  16. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் இருசாரார்களுக்கும்

    ReplyDelete
  17. இன்று பட்டியலில் உள்ளதா.

    ReplyDelete
  18. TNTET - வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 இன்று தீர்ப்பு வழங்கப்படயிருக்கிறது.... www.gurugulam.com

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மூன்று பேர் அரசுக்கு எதிரப்பான ஒரு கூறுவீர்கள் அதை நீங்களே சரி என்றும் கூறுவீர்கள் ...நங்கள் எதையாவது கூறினால் அதை ஏற்காமல் அந்த கருத்தை அழிப்பீர்கள் ....பின் எதற்காக இந்த விளம்பரம் ...போங்க சார் போய் வேலை எதாவது பாருங்கள் ...நடுநிலையோடு இருந்தால் தானே எல்லோரும் வருவார்கள் ...

      Delete
  19. Selectana nalla ullangal anaivarukkum indru inia naalaga amaiyum கருணை காட்டு இறைவா

    ReplyDelete
  20. தீர்ப்பு இருசாராருக்கும் நீதியை நிலைநாட்டக்கூடியதாய் அமையட்டும்!

    ReplyDelete
  21. endravathu namaku nala mudiu theriuma friends

    ReplyDelete
  22. Tet ill pass aana anaivarukkum oru
    nalla theervaka indraia judgement
    amaia ANDAVAN arul purivaaraaka!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி