பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியுமா? பிரியாதா? இன்று வரலாற்றை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியுமா? பிரியாதா? இன்று வரலாற்றை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியுமா என்பதை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707ல் (கிரேட்) பிரிட்டன் அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது. அதேபோன்று, ஸ்காட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது.
இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த கடந்த டிசம்பர் 2013ல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, கருத்து வாக்கெடுப்பு தொடர்பாக பிரசாரங்கள் செய்யப்பட்டன. ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இப்போது பிரிந்தால், இனி எப்போதும் இணைய முடியாது என ஸ்காட்லாந்து மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வேண்டுகோள் விடுத்தார்.

மற்றொரு பக்கம், ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவளிக்கக் கோரி, பிரமாண்ட பேரணிகளும், பிரசாரங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 42 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும். முடிவுகள் குறித்து நாளை காலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

கருத்து வாக்கெடுப்பில் ஆம் அல்லது இல்லை என்ற இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஆம் என்பது ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவு என்று பொருள். இல்லை என்பது, ஸ்காட்லாந்தை பிரிக்க ஆதரவு இல்லை என்று பொருள்படும்.

பிரிக்க முடிவுசெய்யப்பட்டால்...

கருத்து வாக்கெடுப்புக்கு சட்ட அதிகாரம் கிடையாது. எனவே மார்ச் 2016க்கு பின்னர்தான் ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கான பணிகள் தொடங்கும்.

யூரோ நாணயத்தை ஸ்காட்லாந்து பயன்படுத்த முடியாது.

பவுண்ட் ஸ்டெர்லிங் நாணயத்தை, இங்கிலாந்து வங்கியின் உதவியுடன் ஸ்காட்லாந்து பயன்படுத்த விரும்புகிறது. இதனை பிரிட்டன் எதிர்க்கிறது.

ராணுவத்தை பங்கீடு செய்வது, எல்லை விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும்.

பொருளாதார ரீதியிலும் பல்வேறு நெருக்கடிகளை ஸ்காட்லாந்து எதிர்கொள்ளலாம்.

2 comments:

  1. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு கண்டிப்பாக நீதி வெல்லும்....

    அநேகமாக +2, டிகிரி மதிப்பெண் தூக்கி எறியப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தறுவது உறுதி உறுதி....

    ReplyDelete
  2. Paper -1 pass panavanga ellorukum seniority fix pana vendum...ippo illai endralinm piragavathu velai kidaikum...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி