'ஐந்து மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடம் இல்லை' - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

'ஐந்து மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடம் இல்லை' - தினமலர்

'சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை. எனவே, நாளை (3ம் தேதி), மாவட்டத்திற்குள் நடக்கும் கலந்தாய்வுக்கு, ஐந்து மாவட்டங் களுக்கு, யாரும் செல்ல வேண்டாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.


அவரது அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறையில், புதிதாக, 10,444 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணி நியமன கலந்தாய்வு, நாளை (3ம் தேதி) துவங்குகிறது.

நாளை, மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது.

இதில், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லாததால், நாளைய கலந்தாய்வுக்கு, மேற்கண்ட ஐந்து மாவட்டங்களுக்கு, யாரும் செல்ல வேண்டாம். வேறு மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங் களுக்கு, 4ம் தேதியும், 5ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. இந்த தேதிகளில், தங்கள் மாவட்டத்தில் உள்ள கலந்தாய்வு மையத்திற்கு, புதிய ஆசிரியர் செல்லலாம்.

இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, தொடக்கக் கல்வித் துறையில், மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, நேற்று கலந்தாய்வு நடந்தது. 1,649 இடங்களில், நேற்று, 795 இடங்கள் நிரம்பியதாக, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இன்று, வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடக்கிறது.


3 comments:

  1. நல்லதே நடக்கும் !!

    ReplyDelete
  2. தென் மாவட்டங்களில் காலிப்பணியிடங்களை மறைத்தால்தான் மாறுதலுக்கு 6லட்சம்,7லட்சம்,8லட்சம் என்று காசு பார்க்கலாம்!

    ReplyDelete
  3. 90% eduthu job joined panravergal good.matravergal oc job amma karunaial pzithupagatum.teacher seletion mathri unkka passanaka padipum amma karinaial nadakum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி