அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள்


தற்செயல் விடுப்பு

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லதுஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.


2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம்.( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

3 comments:

  1. உதவிகரமான தகவல்.... நன்றி...

    ReplyDelete
  2. super message.ABSENT kuritha thavalgal ARASAANAIGAL(G.O) E.L. entry kurithu NAMATHU VALAITHALATHIL VELIYITTAL PAYANULLATHAGA IRUKKUM.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி