பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம்: அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன், வாசிப்பு, எழுதும் திறன் ஆகியவற்றை மாணவர்களிடம் கலந்துரையாடி அறிய வேண்டும்.

மாணவர்களின் வருகை பதிவேட்டில், நீண்ட நாள் பள்ளிக்கு வராதவர்களின் பட்டியலை எடுத்து, அதற்கான காரணத்தை மாணவர்களிடமே கேட்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு, கழிப்பறை, குடிநீர் வசதி போன்றவை சார்ந்த பள்ளியின் தளவாட பொருட்கள், 'டிவி'மற்றும் நுாலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு செய்ய வேண்டும். என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

1 comment:

  1. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி