நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2014

நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு.


மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் 8,400 மாணவர்கள் உள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சேவை, பெற்றோருக்கு உதவுதல், சமுதாய பணி மற்றும் முதலுதவி ஆகிய பண்புகளை, மாணவர் மத்தியில் வளர்க்க வேண்டும்; சுகாதாரம் பேணுதல், நட்புணர்வு, சேவைமனப்பான்மை, ஒழுக்கம், சுற்றுப் புறச் சூழல் மேலாண்மை, விபத்து நேரங்களில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை என மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 267 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒருவர் வீதம் செஞ்சிலுவை சங்க ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி யில், அவர்களுக்கு ஆலோசகர் பயிற்சி அளிக்கப்பட்டது.இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் மனோகரன் தலைமையில், பயிற்சியாளர்கள் பாலசுப்ரமணியம், அருள்மொழி, ஜெயிலானி ஆகியோர், செஞ்சிலுவை சங்க செயல்பாடு குறித்து பயிற்சி அளித்தனர். ஆலோசகர்கள் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இளையோர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களாகசேர்க்கப்பட உள்ளனர். முப்பருவ கல்வி முறையில், பள்ளி இணை செயல்பாடு பிரிவில், சேவை பணிகளுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதால், செஞ்சிலுவை திட்டத்தில் சேவை செய்யும் மாண வர்கள், மதிப்பெண் பெற வாய்ப்புஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி