போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்- மாலைமுரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்- மாலைமுரசு.


சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை..

அ.தி.மு.க. ஆட்சி 2011ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து என்ன காரணத்தாலோ, கல்வித் துறையில் ஏராளமான குளறுபடிகள், சமச்சீர் கல்வியில் தொடங்கி, ஆசிரியர்கள்நியமனம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
இதுவரை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் எல்லாம் அவ்வப்போது சுட்டிக் காட்டியும் கூட அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்குரிய மதிப்பு கொடுக்க மறுக்கின்றனர்.

தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் பத்து நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிக்கின்றார்கள். நேற்றையதினம் கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளி வந்து என்னுள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல்வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக்கூறப்பட்டது.ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லுhரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது.

தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை.அதிலும் "வெயிட்டேஜ்" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லுhரித் தேர்விலும், பயிற்சிக் கல்லுhரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்."வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நுhற்றுக்கு மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்; "வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில்கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

81 comments:

  1. Kumba sandaiku naduvil ipoothavathu thalaivarukku arsiriyar neyabagam vanthathea!!!!

    ReplyDelete
    Replies
    1. வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்

      Delete
    2. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம்.

      வாழ்க வளமுடன்.

      Delete
    3. .

      ஆறு முறை முதல்வர் இ௫ந்த கலைஞர் அவர்களின் இந்த அறிக்கைக்கும்
      இந்த செய்தியை வெளியிட்ட
      கல்விசெய்திக்கும்
      பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
      பின்
      தர்மமே வெல்லுமா ?

      .

      Delete
    4. Govinda govinda
      Kalainzer aiya sollittara enni no response in amma side so loss 10 days

      Delete
    5. To Saravanan
      Trb no issued our certificate
      no problem for Trb

      Delete
    6. தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரிய சகோதரிகளே இங்கு சென்னை யில் இடைநிலை ஆசிரியர் சார்பில் 20 நபர் மட்டும் தான் உள்ளனர் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலும் மகளிர் என்பதை அனைவரும் அறிவர்
      உங்களின் சூழ்நிலைகளையும் நாங்கள் நன்கு அறிவோம்,தங்களால் நாளை சென்னை வரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தங்களது சிறு பங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்,
      எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு "கூடுதல் பணியிடங்கள் " வேண்டுதல் சார்பாக உங்கள் மேலான உணர்வையும், உணரும் மன வலியையும் வெளிப்படுத்துங்கள்,
      உங்களின் ககுரலுக்கு வலிமை அதிகம் உணருங்கள்
      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb.tb@nic.in
      schsec@tn.gov.in
      mlajolarpet@tn.gov.in

      எதிர்பார்ப்புடன்,

      சத்தியமூர்த்தி.
      சத்யஜித்,

      Delete
  2. Aasiriyar nalanil eppodhum akkarai kondavar kalaignar....marukka mudiyaadhu

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க,
      (மன்னிக்க)
      1.நம்மகிட்ட ஒற்றுமை இல்லை
      2.விழிப்புணர்வு இல்லை,
      3 . முயற்சி இல்லை
      4 தன்னம்பிக்கை இல்லை
      5.போராட மனமில்லை,
      6. Weightage 75 எடுத்துட்டோம்அடுத்த முறை job ok ஆகிடும் நினைக்காதீங்க,
      அடுத்த டெட் competition above 80 weightage level ல தான் இருக்கும் ,so just below 75 weightage க்கு ஒன்னும் கிடைக்காது , இப்பவே vacancy increase செஞ்சு வேல வாங்குனா தான் ஆச்சு, இல்ல பட்ட கஷ்டம்லா பாழா தான் போச்சி னு நினைச்சுகுங்க, இன்னும் அம்பது முற டெட் எழுதி weightage 80 வாங்கினாலும் வெறும் ஐநூறு, ஆயிறம்னு vacancy அறிவிச்சா எப்ப வேல வாங்குவிங்க??


      7, இப்ப சொன்னதுல தவறு இருந்தால் எங்கள திட்டுவதற்காவது ஒன்னு சேருங்க, அதுலயாவது உங்க ஒற்றுமைய எதிர்பாக்குறோம் .

      95433 91234
      09663091690

      Delete
  3. வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்

    ReplyDelete
  4. பெயரிலேயே கருணையை கொண்டவர்....
    அவர் தான் கலைஞர்....

    ReplyDelete
    Replies
    1. Alan Ani, apo kalaignar aatchi varumvarai neenga wait pannunga.. k

      Delete
    2. பெயரிலேயே VETRI கொண்டவர்....
      அவர் தான் JAYALALITHA...

      Delete
    3. JAYAM= VETRI.... HOW IS THIS?

      Delete
    4. vetri eruthu yainna payain manitha uier kaindukatha vainga vetri paitral yainna , vaail ka oru vaitam.....................? pureunu nenikera

      Delete
  5. அடுத்த ஆட்சி திமுக வாகயிருந்தால் டெட் ப்லஸ் சினீயாரிடி தான் இந்த ஆட்சியில் சீனீயாரிட்டி என்ற பேச்சிக்கே இடமில்லை

    ReplyDelete
  6. மீண்டும் தொடரும்.இங்கு மட்டும் எப்படி?

    ReplyDelete
  7. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. nalla mudivu veru yaravathu payan peruvar do it fast

      Delete
    2. Can you please explain me. Sanrithal thirumba kudukum poratam patri

      Delete
  8. தற்பொழுது 700 மதிப்பெண் எடுத்த நபருக்கும் B,E கிடைக்கிறது. 1100 ,1000 எடுத்தவர் எவரும் உங்களோடு போட்டி போடவில்லை நண்பர்களே
    நனறி..

    ReplyDelete
  9. Vettri nichayam sariya thee poriye perum erulai pokkum .....

    ReplyDelete
  10. PORATATHIL ULLA
    NANBARKALUKUM....................
    MR.RAJALINGAM AVARKALUKUM......
    ENUDAYA MANAMARNTHA MANNIPUGALAI THERIVITHU KOLGIREN............
    .....ORU.....SORRTRU PARUKAIN MATHIPPU SITHARA VITTA
    NAMAKU THERIYADHU .......
    ADHAI EDUTHU SELLUM ERUMBUKU THAN
    THERIUM..............
    "THAYANGU
    PAVANAL SILLANTHI VALAYAI
    KUDA SITHAIKA MUDIYATHU.........
    ANAL THUNINTHAVAN
    (PORATA NANBARGAL)
    IRUMBU VELIGALAI KOODA
    MURRITHU VIDUVAN.........
    ENATHU SAGOTHARARGAL
    VETRI UDAN THIRUMBA VALLTHUKALUDAN.,............

    ReplyDelete
  11. Seniors
    i understand your situation ..but don't do such silly things ..this. will make you much weaker...wait something good will happen for you ...

    ReplyDelete
  12. விரைவில் நலம் பெறவேண்டுகிறேன்.அரசு விரைவில் நல்லமுடிவெடுக்கவேண்டும்.படிக்கும்காலங்களில் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்படுவதால் தான்2014 ,ஆம் ஆண்டில் கூடஅனைவருக்கும் கல்வி(ssa) அனைவருக்கும் இடை நிலைக்கல்வி(RMSA) திட்டங்கள் உள்ளன. காமராசர்,M.G.R போன்ற தலைவர்கள் கூடபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.இன்றைய முதல்வர் கூட சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.10,20ஆண்டுகளுக்குமுன்புபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை வறுமையில்கடந்து பெற்றவர்களும் மற்றவர்களும் கஸ்டப்பட கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி ,பிறகு b.et படித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.10,20,ஆண்டுகளைக் கணக்கிடாமல் அம்மா நல்ல முடிவை எடுங்கள்.உங்கள் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும். சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்க்ளுக்கு உ ங்களைத்தவிர வேறு யார் உள்ளார்கள்.முடிவு நல்லமுடிவைத்தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்பட்ட 60000 குடும்பத்தாரின் ஓட்டுக்களும் கருனாநிதி க்கு சென்றுவிடாமல் நம் அம்மா சரியான முடிவை எடுத்து நமக்கும் வழிகாட்டுவார்.நமக்கும் மிக விரைவில் பணி வழங்குவார்கள்.அம்மாவை நம்புவோம்

      Delete
  13. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் குறைவாக fix செய்த போது உடனே அழைத்து பேசினீரா ஐயா..

    ReplyDelete
  14. Kalviseithi nanparkalukku oru vendukol.....thayavu seithu arasiyal sarpullavarkalai Athariththo or Ethirththo karuththukkalai Pathivu seivathai Thavirkkavum

    ReplyDelete
  15. Aduththa murai ATCHI amaikkum poruppai Yarukku tharalam enpathai atharkana kalam varum pothu Mudivu seithu Kollalam athu varaikkum atchi patriyea arasiyal sarpulla naparkalai patriyeo karuththukkal pathividuvathai thavirkalamea....................!

    ReplyDelete
  16. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure. because of poison g.o.no 71

    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA



    ReplyDelete
  17. Tmrw tirunelveli district la BT ku counseling nadakuma

    ReplyDelete
  18. யாராது ஒருவர் ஆதரவு தெரிவித்தால் அதை குறை கூறுவதற்கு ஒருவர்...

    இதெல்லாம் எங்கேபோய் முடிய போகிறதோ.....

    ReplyDelete
  19. THANKYOU very much to KALAIGNAR and Kalviseithi
    for felt our sadness

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. tanks TO KALAIGNAR for understand our feelings

    ReplyDelete
  22. appa angaye poi vela kelu thambi

    ReplyDelete
  23. UNMAITHAMILAN ORUPOTHUM THUNKAMATTAN NEETHIKKU KURAL KOTUPPAVARKAL ORUPOTHUM SAKAMATTARKAL THARMATHIN VALVUTHANNAISOOTHU KAVUM THARUMAM MARUPADIUM VELLUM

    ReplyDelete
  24. ADMK , DMK appadinu pirthu ithai arasiyalakka vendam, kalaingarukku purintha vishayam ammavukku purinthal pothum ,seniorslaye thiramayanavanga baathika paduvathu therinthu kolla vendum, amma thiramaikku munnurimai vazhanguvargal yeno tet vishayathil athai ammaval purinthukolla mudiyavillai,asiriyar niyamanathil athigarigalin thavarum irunthal amma thavarugalai kalaya munvaravendum.

    ReplyDelete
  25. கருணாநிதியை போற்றி புகழும் பின்னூட்டங்களை நிர்வாகம் நீக்காததன் காரணம் தான் என்ன?.அறிய விரும்புகிறேன்

    ReplyDelete
  26. பாதிப்பு பற்றி அவருக்கும் தெரியும்.....


    இருப்பினும் ஏனோ மௌனம்...



    புதிய வியூகம் வகுத்து கொண்டு இருப்பார்....

    ReplyDelete
  27. Ushaaaar ma
    Kalaingar kural mattumdhan kudupar .......
    Velai kudukka mattar.....
    Sathunavu teacher velaike 2 lakh kekura punnivan avar....
    Aadu naiyudhenu
    Onaiy aludhadham....
    Engala patha unakku avolo muttala theriyudha.....
    Konjam uppu pottu sapittu parungalen....
    Edhenum mattra undagudhanu parpom....

    ReplyDelete
  28. Yes.we will get good news.Gov now discuss about this.

    ReplyDelete
  29. all problem because of 5% relaxation , notification padi 90ku mel eduthu cv complete panna piragu , thannudiya suya labathirku 5% relaxation kuduthu unmaiyaga pass anavargalai tharkolaiku karanam intha govt than , relaxation kudukka solli ketta anayam cv mudinth exam ku illai ini varum kalangalil kudukka vendum endruthan . wtg system is ok because of 5% only affected 90 and above 90

    ReplyDelete
  30. அடுத்த ஆட்சி திமுக வாகயிருந்தால் டெட் ப்லஸ் சினீயாரிடி தான் இந்த ஆட்சியில் சீனீயாரிட்டி என்ற பேச்சிக்கே இடமில்லை
    Nanbargale
    Panam pathum seiyum
    Marandhuvidadhirgal
    Varumaanam poivitadhenu kavalaipaduraru

    ReplyDelete
    Replies
    1. dmk write or wrong that no issue , at least he look real passes teachers problem

      Delete
  31. சென்னைக்கு திரளாக வாருங்கள் நண்பர்களே வெற்றி நம் மிக மிக அருகில் உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. Valthukkal Mr rajalingam nanbargale tholkodungal otrumaiye vetrikku muthalpadi mudinthavarai muyarchi seiungal kalanthukolla mammal midiyathathu ethuvum illai thanks and all the best nanbargale

      Delete
    2. Anna Nama 5friends ipa epdi irukanga Onum pbm Ilaye

      Delete
    3. SELLATHURAI PONDROR IRAVU PAGALGA PORADI UYIR VIDA THUNINDU ULLANAR

      EMPTY VESSEL RAJU INGE COMMENT PODUVATAI THAVIRHTU NEE ENNA SEITHAI

      அடுத்தவர் செய்யும் தியாகத்தை உன் வெட்டி விளம்பர கீழ்த்தரமான புத்திக்கு இறையாக்க துடிக்கும் மிருகம் நீ

      Delete
    4. Rajalingam
      Poriya illa vaila kathi vittu suthava

      Delete
  32. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  33. Raja thiruvengadam sir
    What an English.....
    Very good sir..
    Nichayama neenga English teacher dhan pinnnnnniteenga ponga sir

    ReplyDelete
    Replies
    1. ms nithya sri am not a dted or b.ed teachers , making a mistake in single word or single line u cannot find anything about me , what is your mark tet ? hence you have good knowledge go and work in new York city , 90 and above 90 are very quit but 82-89 epppaaaaaaaaaaaaaaa mudila

      Delete
    2. ms nithya sri if your good a teacher why not able to score high mark in tet exam .

      Delete
  34. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. Enaku rmba nalla oru dubt 2012 tet la 82 not elgble bt 2014 tet la 82 elgble kalvi thaaram sema imprvmnt itha pathi peasunga sir vcnt >pas cndite apavea les panala ana vcnt<pas cndite irukum pothu en ipadi pananga kealunga boss

      Delete
  35. Write or wrong .. .
    Bmmmmm
    Supperaoppu

    ReplyDelete
  36. Of course I am only 87
    But I am selected with cut off 67
    Nan 9th pass boss
    Neenga 10 th fail boss
    Pass perusa fail perusal
    Be cool

    ReplyDelete
    Replies
    1. sister by best wishes to you , but you should consider 90 and above 90 teachers too , because of relaxation only your going to get job .

      Delete
    2. Nithya sri...............
      ha ha ha ha una patha enaku siripu siripa varuthu but i cant laugh bcoz u took 87 and got job , iam 96 but no job.......

      wat a tragedy.........

      Delete
  37. if your good a teacher why not able to score ........
    Suuuupper sir
    Enakku nalaiku counseling irukku
    Good night sir
    Write.... Chai right...

    ReplyDelete
    Replies
    1. Nithya sri...............
      ha ha ha ha una patha enaku siripu siripa varuthu but i cant laugh bcoz u took 87 and got job , iam 96 but no job.......

      wat a tragedy.........

      Delete
    2. Nithya mam why can't u score above 90....?????? Haven't u learnt well???? Empty vessels only make much noise.... I humbly request u .... don't hurt them.... we r human beings keep it in ur mind mam.... and being a woman u should not do this......

      Delete
  38. Enaku puriyala guys, entha certificatea return panna poringa. Nanum varen sollunga...

    ReplyDelete
  39. இனிமேல் IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு, அவர்கள் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களும்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 12ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமானால் ஓய்வு பெறும் வரை மீண்டும் மீண்டும் எழுதி எழுதி எழுதி எழுதி................... என்று அரசுஒரு கொள்கை முடிவை எடுத்தால் எப்படி இருக்கும். நீதிமன்றத்திற்கே அவர்கள் சென்றால் கூட........... . நீதிமன்றம்தான் அரசின் கொள்கை முடிவில் தலையிடாது அல்லவா??????? அப்புறம் என்ன செய்வார்கள் இந்த வெயிட்டேஜ்- ஐ யாரையும் கலந்தாலோசிக்காமல் கொண்டு வந்து எங்கள் வயிற்றில் அடித்த அந்த IASகள். அதிகாரிகளே எங்களின் மனநிலையில் நீங்கள் இருந்து பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் எங்கள் உழைப்பின் வலியும், 20ஆண்டு காத்திருப்பின் பரிதவிப்பும்...
    Puthi ketta ias athikarikalal ini izakapovathu ethanaiyoo ...??? ?????

    ReplyDelete
    Replies
    1. Intha IAS sabitha than
      saniyan nasama tholainthu pogattum

      Delete
  40. பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கண்ணீரை தமிழக அரசு விரைவில் துடைக்கும்...

    ReplyDelete
  41. Enaku rmba nalla oru dubt 2012 tet la 82 not elgble bt 2014 tet la 82 elgble kalvi thaaram sema imprvmnt itha pathi peasunga sir vcnt >pas cndite apavea les panala ana vcnt<pas cndite irukum pothu en ipadi pananga kealunga boss

    ReplyDelete
  42. Go 71 erpaduthiya IAS ATHIKARIKALEY therinthu KOLLUNGAL

    1 TET EXAM NADATHIYATHU VETRU MOZHIYIL ALLA
    6 MUTHAL12 VARAI ULLA text book ill THAN
    ATHIL NANGAL above 90 petru ullom

    2 ) +2 vill 1000 mark eduthavan below 90 petru irukiran

    Irandu andukaluku mun padithavanal above 90 eduka mudiya villai

    Anall 10- 12 andukaluku munnall paditha engalall indru ulla text book ill padithu above 90 eduka mudikirathu

    Irandu andukaluku munnal paditha oru padathai mendum padithu above 90 eduka mudiyathavarkalai

    Asiriyarkalaga therivu seithirupathu go 71 ill ulla migaperiya kuraipadu

    Nangu paditha oru muttalinl seiyalagavey ithai karutha mudikirathu

    Ithanal migaperiya pavathai seithu irukirikal
    Apadi illai enrall 10 .- 12 andukaluku munnar padithu above 100 mel ullavarkaluku enna pathil kurapogirikal

    Intha pavathai avarkal mannitalum kadavul mannikka mattar

    ReplyDelete
  43. பாதிக்கப்பட்ட 60000 குடும்பத்தாரின் ஓட்டுக்களும் கருனாநிதி க்கு சென்றுவிடாமல் நம் அம்மா சரியான முடிவை எடுத்து நமக்கும் வழிகாட்டுவார்.நமக்கும் மிக விரைவில் பணி வழங்குவார்கள்.அம்மாவை நம்புவோம்

    ReplyDelete
  44. Ias athikarigaley melkanda kuraipatirku nengaley karanam

    Intha kuraipadu ammavin parvaiku varumpothu Avarkal velai kali anal pathikappattavarkaluku velai kedaikuma

    neethi vetri perumaa

    Kovalan kathaiyaki poividumoo

    Kannagi maduraiyai erithal....
    Tet pass seitha nangal seitha kutram enna ..........

    Kadavuley nethi vendum..............

    ReplyDelete
    Replies
    1. Intha IAS sabitha than
      saniyan nasama tholainthu pogattum

      Delete
    2. IAS thavaru seithal amma ketkamattara??? Illai endral neethi seththu vidatha???

      Delete
  45. Good morning friends
    Indru (03.09.2014) counseling il kalandhukolla pogum en sagodhara sagodharigalukku Rajarajan and family saarbaga VAAZHTHUKKAL
    I am Tiruvarur
    After finishing counseling i comment about Tiruvarur dis English vacancy details.
    Thank you friends
    Indha naalukkaga oru varudam kaathukondirandha anbu nenjangal indru aarudhal adaiyattum.

    ReplyDelete
  46. all the best nithya..... I am also attending counselling in Cbe for english... hope everyone gets a comfortable place.....God is great...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி