வால் நட்சத்திரத்தில் ஆய்வுக் கலம் இறங்க தேதி நிர்ணயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2014

வால் நட்சத்திரத்தில் ஆய்வுக் கலம் இறங்க தேதி நிர்ணயம்

ஐரோப்பிய  விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் இப்போது ஒரு வால் நட்சத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.


அந்த விண்கலத்திலிருந்து ஆய்வுக்கலம் ஒன்று வெளிப்பட்டு 67 P சுரியுமோவ்/ஜெராசிமெங்கோ என்று பெயரிடப்பட்ட அந்த வால் நட்சத்திரத்தில்  நவம்பர் 12 ஆம் தேதி இறங்கப் போகிறது.  நான்கு கிலோ மீட்டர்  நீளமும் மூன்றை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த வால் நட்சத்திரத்துக்கு பெரிதாக ஈர்ப்பு சக்தி கிடையாது.

undefined
ரோசட்டா சுற்றி வருகின்ற வால் நட்சத்திரம் இது தான்
ஆகவே அதில் போய் இறங்கும் பிலே ( Philae) என்னும் ஆய்வுக் கலம் ஒரு வேளை எகிறி மேலே வந்து  விடலாம். ஆகவே ஆய்வுக் கலம் வால் நட்சத்திரத்தில் இறங்கியதும் தரையை இறுக கவ்விக் கொள்ளும். பின்னர் பல வகைகளிலும் வால் நட்சத்திரத்தை ஆராயும் (விடியோ காண்க)

ரோசட்டாவிலிருந்து ஆய்வுக்கலம் இறங்கும் காட்சியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

வால் நட்சத்திரத்தில் போய் இறங்கி இப்படியான ஆய்வு  நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டில் டெம்பிள்-1 (Temple-1) என்னும் வால் நட்சத்திரத்தை நோக்கி நாஸா Deep Impact என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்திலிருந்து பெரிய சம்மட்டி போன்ற  370  கிலோ எடை கொண்ட கருவி வெளிப்பட்டு அந்த வால் நட்சத்திரத்தின் மீது வேகமாகத் தாக்கியது. இதன் விளைவாக வால் நட்சத்திரத்தில் 100 மீட்டர் அகலமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.

அப்போது வால்  நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய தூசு மற்றும் துகள்களை விண்கலத்தில் இருந்த கருவிகள் ஆராய்ந்து நாஸாவுக்குத் தகவல் அனுப்பியது.
undefined
டெம்பிள் 1 வால் நட்சத்திரம் தாக்கப்பட்ட இடம்
கடந்த காலத்தில் வேறு பல விண்கலங்களும் வால் நட்சத்திரங்களை மிகவும் நெருங்கி படம் பிடித்து அனுப்பியுள்ளன.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய போதே வால் நட்சத்திரங்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அவை ஒதுங்கிப் போன மிச்ச மீதிகளாகக் கருதப்படுகின்றன.

சூரியனின் விளவாக கிரகங்களில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வால் நட்சத்திரங்கள் மீது அப்படியான பெரிய விளைவுகள் இல்லை. அவற்றில் இன்னும் ஆரம்ப காலத்து நிலைமைகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஆகவே தான் வால் நட்சத்திரங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.

வால் நட்சத்திரங்களை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் தோற்றம் பற்றி மேலும் நன்கு அறிய உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

12 comments:

  1. மெட்ராஸ்
    ஹைகோர்ட்ல
    ஒரு தீர்ப்பு

    மதுரை கிளை
    ஹைகோர்ட்ல
    ஒரு தீர்ப்பு

    எதன் அடிப்படையில் minority & adtw school list வரும்?

    next list க்கு
    5% தளர்வு உண்டா?

    மெட்ராஸ்
    ஹைகோர்ட் தீர்ப்புப்படி

    next list க்கு
    5% தளர்வு உண்டு தானே!



    மெட்ராஸ்
    ஹைகோர்ட் தீர்ப்புப்படி

    5% தளர்வோடு next list TRB விடலாமே!

    ReplyDelete
  2. Madurai Judgement copy read pana than ans kedaikum.. Wait sir.. Maduri judgement copy iruka fris?

    ReplyDelete
  3. www.tnallnews.blogspot.in

    all educational website news

    ReplyDelete
  4. undertaker d sir can u send ur mail id to muthurajabio@gmail.com

    ReplyDelete
  5. Mr sivakumar sir pg second list varumnu soneengale adu conforma how can u tell that sir plz I'm also waiting for second list plz explain me

    ReplyDelete
  6. Mr Kiruna any news about pg second list

    ReplyDelete
  7. Is there any chance for pg 2nd list please share me If any of them come to know

    ReplyDelete
  8. Sir I'm also waiting for second list

    ReplyDelete
  9. Replies
    1. இரண்டாம் பட்டியல் வெளிவர வேன்டிய நேரத்தில் ரிலாக்க்ஷேசன் கன்சல் தீர்ப்பு எனவே இனி அடுத்த லிஸ்ட் காலதாமதமாகும் அரசு மேல்முறையீடு செய்து இனி அது வந்து அட போங்கப்பா????

      Delete
  10. தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

    தாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .

    1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .

    2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .

    3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?

    4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .

    5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .

    மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .

    மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்

    இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .

    சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,

    இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.

    அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )


    தொடபுக்கு :

    சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141

    புதுக்கோட்டை : 9943228971

    வேலூர் : 7220724755

    திருவண்ணாமலை :7639497834

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி