அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கம்


பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களிலும் பெறலாம். இந்த புதிய சேவை சிவகங்கையில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சேவை குறித்து சிவகங்கை மாவட்டம்,இது குறித்து இஞ்சல் கண்காணிப்பாளர் இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்கும்விதமாக மின்கட்டண வசூல், சோலார் லைட், மினி பிரிட்ஜ் விற்பனை, மீடியா போஸ்ட் மூலம் விளம்பரம் செய்தல், ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங், உடனடி மணியார்டர், மொபைல் போன் மூலம் பண பறிமாற்றம் மற்றும் இ-போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்களில் ரூ.10 செலுத்தி பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை பெற்று, அதனை நிரப்பி கவுண்டரில் கொடுத்து ரூ.100 செலுத்த வேண்டும். இதில், 29 தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 7 முக்கியமான அலுவலகங்களும் அடங்கும்.

விண்ணப்பங்களில் உள்ள தவகல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ரசீது மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் படிவம் ஒன்றும் வழங்கப்படும். அதை நிரப்பி பாஸ்போர்ட்டிற்கான பணத்தை கட்டி பின் அஞ்சல் அலுவலகத்தில் முன்னதாக கட்டிய ரூ.100க்கான ரசீதுடன் சமிர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரம் வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் அலுவலகத்திலேயே தெரிவிக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் இந்த சேவை செயல்பட உள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி