மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில்,கோவை மாவட்டத்திலுள்ள மூலத்துறை அரசுப் பள்ளி மாணவன் முதலிடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2014

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில்,கோவை மாவட்டத்திலுள்ள மூலத்துறை அரசுப் பள்ளி மாணவன் முதலிடம்.


ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய"திசையெல்லாம் திருக்குறள்" என்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் செ.லோகேஸ்வரன் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.
இச்சாதனைக்காக அவனுக்கு ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.சென்னையில் சத்யா ஸ்டுடியோ வளாகத்தில்27 செப்டம்பர் 2014 அன்று நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் கலந்து கொண்ட சுமார் 850 மாணவர்களில் இருந்து தேர்வான 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் திருமுருகன்,முனியம்மாள்,ரவிக்குமார்,அமுதா,அங்கையற்கண்ணி,பிரேமாள்மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

புகைப்படத்தில்..ஸ்ரீராம் சிட்ஸ் மண்டல மேலாளர் பாலாஜி அவர்களிடமிருந்து பரிசுபெறும் மாணவன்செ.லோகேஸ்வரன்.

நன்றி..
அன்புடன்
ஜெ.திருமுருகன்
கணித ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளிமூலத்துறை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி