தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2014

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு


தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்புவிடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான கடிதம் ஆளுநர் ரோசையாவிடம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை6.30 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், ரோசைய்யாவை சந்தித்துப் பேசினர். அப்போது, அ.தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான, கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக, ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, 2வதுமுறையாக, ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார்.

அரசியல் பயணம்

அ.தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதலே உறுப்பினராக இருந்து வரும் ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயலாற்றி உள்ளார். பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் ஆரம்பக் காலத்தில் பதவி வகித்துள்ளார். தேனி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். டான்சி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காரணத்தால், தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக நேரிட்டது.

இதையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக 2001ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார். இந்நிலையில், தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, 2வது முறையாக,ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார்.

4 comments:

  1. My dear TET friends.
    இரண்டாவது தேர்வுப்பட்டியல் வருவதில் காலதாமதம் ஏற்படும்.
    மதுரை கோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் வர வில்லை.
    தீர்ப்பை படித்து பார்த்தால் மட்டுமே முழு விபரம் தெரியவரும்.
    தற்போது பல குழுக்கள் ஒன்றிணைந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்லும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரண்டாவது பட்டியல் வெளியாவதில் மிகப்பெரிய இடைவெளி உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது.
    பிரச்சனைகளை சமாளிக்க ஒருவேளை வழக்குகள் முடிந்தப்பிறகே வெளிவரலாம்.
    எதுவாக இருந்தாலும் நண்பர்களே அடுத்த தேர்வுக்கு உங்களை தயார் செய்துகொண்டே இருங்கள்.படிப்பதை விட்டுவிடாதீர்கள்.நல்லதே நடக்க. வேண்டும் என வேண்டிக்கொள்வோம். வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி