சமச்சீர் பாடத்தை ஆடியோ சிடியாக தயாரித்த காரைக்குடி மாணவிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

சமச்சீர் பாடத்தை ஆடியோ சிடியாக தயாரித்த காரைக்குடி மாணவிகள்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத் திட்டத்தின், முப்பருவ பாடத்திட்டத்தில், ஒரு பருவ பாடத்தை, கற்றுணர்ந்து, அதை ஆடியோ சிடியாக தயாரித்துள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி மாணவிகள்.கருவாய் உருவாகி, உருவாய் அரங்கேறி, பருவங்கள் பல தாண்டி, வருங்கால வாழ்வை நோக்கி ஒவ்வொருவரும் நடை பயில்கிறோம்.

லட்சியங்கள் கைக்கு எட்டும் துாரத்தில், இருந்தும் அலட்சியப்படுத்துகிறோம். தடைகள் ஓராயிரம், சாதிக்க தன்னம்பிக்கை ஒன்றுதான் பேராயுதம் எனக் கூறி, தன்னம்பிக்கை ஆயுதத்தை மட்டும் கையில் வைத்து, பார்வையற்ற மாணவர்களுக்காக 20 நாட்கள் கஷ்டப்பட்டு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை, சாதனைக்கு சாதனம் ஒரு பொருட்டல்ல எனக் கூறி, மொபைல் வழி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவுசெய்து, சி.டி.யாக மாற்றி, அதை திருப்பத்துார் டி.இ.எல்.சி., சிறப்பு பள்ளியில் உள்ள, பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக வரும் 19-ம் தேதி வழங்க உள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள்.குரலில் சிறந்த 80 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத்திட்டங்களை, கணிதத்தை தவிர, மற்ற பாடங்களை நான்கு குழுவாக பிரிந்து படித்து புரிந்து கொண்டனர்.அதை தொடர்ந்து, அவற்றை ரிக்கார்டிங் செய்ய, தங்கள் மாணவிகளிடம் உள்ள சிறந்த மொபைல்களை தேர்வு செய்து, ஒரு மாணவி புத்தகத்தை வாசிக்க, மற்றொரு மாணவி, மொபைலை பிடிக்க என ரிக்கார்டிங் தொடர்ந்தது. பறவைகளின் சத்தம், விலங்குகளின் சத்தத்தை அறிய, மாணவிகளே மிமிக்ரி கொடுத்தனர்.மாணவிகள் தேவி அபிநயா கூறும்போது: "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு, மாடல்ல மற்றயவை" என்பது கல்வியின் சிறப்பை கூறும் திருக்குறள்.

ஒருவர் எல்லா செல்வம் பெற்றிருந்தாலும், கல்வி செல்வமே சிறந்த செல்வமாகும். அந்த வகையில், கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி உதவியுடன், ஆங்கிலத்துறை தலைவர் அழகு மீனாள், ஆசிரியர்கள் சுந்தரி, சுதா, தாரகை ஆகியோர் தலைமையில், பார்வையற்ற மாணவர்களுக்காக, சமச்சீர் பாடத்திட்டத்தை, ஆடியோ சி.டி.,யாக பதிவு செய்துள்ளோம்.ஒவ்வொரு கேள்வியும், பதிலும் இரண்டு முறை வாசிக்கப்படும். பாடத்தை புரிந்து கதை சொல்வது போலவும், பாடுவது போலவும், முழு மனதுடன் செய்துள்ளோம்.தற்போது, அரசு பள்ளிகளில் வாசிப்பு திறன் குறைவாக உள்ளது. அந்த வாசிப்பு திறனை மேம்படுத்தவும், இந்த சி.டி.,யை பயன்படுத்தலாம். ஏற்கனவே நர்சரி படிப்புக்கான ஆடியோ சி.டி. தயாரித்து வெளியிட்டுள்ளோம். ஒரு வகுப்புக்குரிய தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும், இரண்டரை மணி நேரம் ஓடும். இதற்கு டாக்கிங் புக் லைப்ரரி என பெயர் வைத்துள்ளோம், என்றார்.முதல்வர் ஹேமாமாலினி கூறும்போது: செய்முறை பயிற்சியை, நோட்டில் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்து, தாங்கள் மட்டுமே வைத்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. படிக்கும் காலத்தில் பிறருக்கு உதவ வேண்டும். இன்றைக்கு என்ன தேவையோ அந்த ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

இன்றைய தேவைக்குரிய ஆராய்ச்சியே, நாளையதேவையின் படிக்கட்டு. அதன் அடிப்படையில், பார்வையற்ற மாணவர்கள், சமச்சீர் கல்வியை சிரமமின்றி படிக்க, ஆடியோ சி.டி.யை எங்கள் மாணவிகள் தயார் செய்துள்ளனர்.முதல் பருவம் மட்டுமே நிறைவேறியுள்ளது.அடுத்த இரண்டு பருவங்களும் விரைவில்,சி.டி.யாக மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். அடுத்த பருவ சி.டி.,க்களை, ரெக்கார்டிங் சென்டரில் வைத்து தயாரிக்க முயற்சி செய்து வருகிறோம், என்றார். சமச்சீர் சி.டி., வேண்டுவோரும், தன்னம்பிக்யை பாராட்டுவோரும், 94889 49279 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

22 comments:

  1. அருமை அருமை மாணவர்கள் திறமைபை நாம் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. TET குறித்த விவாதங்கள்
      TET குறித்த வாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.
      மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள்
      காரசாரமாகத் தொடங்கியது.

      விவாதத்தின் போது

      1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து
      வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு
      மதிப்பிடுவது தவறு.

      2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.

      3) weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..

      A) மற்ற தகுதிகான் முறையில் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறதோ அதே போல்தான் இதிலும் எடுத்துக்கொள்ளப்ப்டுகிறது.

      B) 5% தளர்வு வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டது.

      C) எந்த weightage முறையையும் நாங்களாக கொண்டு வரவில்லை.நீதிமன்றத்தின் சார்பாக நீதிபதி மாண்புமிகு திரு.நாகமுத்து அவர்கள் எதை பரிந்துரை செய்தாரோ அதையேத்தான் அரசும் TRB யும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

      D) மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி திரு,சசிதரன் அவர்கள் இடைக்காலத்தடை வழங்கியுள்ளதை நீதிபதிகளின் கவனத்திற்கு AG அவர்கள் கொண்டு சென்றார்.

      E) அரசு பள்ளியில் பயிலும் மானவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பினை வழங்கிட வேண்டும்.

      ஏதேனும் கருத்தை சேர்க்க வேண்டுமென்று இருதரப்பு வழக்குரைஞ்சர்களும் விரும்பினால் இந்த வார இறுதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமென்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

      Conclusion
      1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

      2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

      3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

      சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

      TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

      ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

      ஏற்கனவே ஓராண்டு காலத்திற்கு மேலாக காலதாமதம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் weightage முறையில் மாற்றம் வராது என எதிர்பார்க்கலாம்.

      அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

      நீதிமன்றத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த வாரத்தின் இருத்திக்குள் எதிர்பார்க்கலாம்.

      TET குறித்த பெரும் வழக்குகளான 5% தளர்வு மற்றும் G.O 71 க்கு எதிராக இனிமேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.. இனி வழக்குத் தொடர வேண்டுமானால் உச்சநீதிமன்றம் மட்டுமே மிச்சம்...........

      "weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      Delete
    2. இதற்கும் மேல உள்ள கருத்துக்கும் என்ன சம்மந்தம். Comments என்பது மேல உள்ள கருத்தை ஒட்டி இருக்க வேண்டும். எதற்கு எடுத்தலும் TET பற்றி தான. வேற கருத்தே கிடையாத?

      Delete
  2. @@@@@@@@@@@@@@
    கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
    @@@@@@ௐ@@@@@@@

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

    நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதுக்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.

    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    விழுமின்;
    எழுமின்;
    உழைமின் ;
    கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

    என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

    வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
    கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

    குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

    ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.

    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

    ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

    குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
    SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

    *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

    10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
    ******************************
    தொடர்புக்கு
    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy (erode)
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100

    ####################
    Date :21/09/14
    Place : chennai merina.

    ******************************
    Thanks to all.
    ******************************

    ReplyDelete
    Replies
    1. recruitment evlo thevaiyo avalvudhan eduka mudiyum , PM nenaicha kuda posting adhigama podamudiyadhu . elementry la students migavum kuraivu . manavargalai adhigapaduthinal dhan SG teachersku vacancy adhigamagum . there is no another way .

      Delete
    2. nanbar admin, i have to clarify my doubt with u , is it possible ?

      if u unable to answer me , delete my message ....

      Delete
  3. ஒருவர் எல்லா செல்வம் பெற்றிருந்தாலும், கல்வி செல்வமே சிறந்த செல்வமாகும்.it is true
    சமுதாயத்தில் ஒருவரை உயர்த்தி காட்டும் வல்லமை படைத்தது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Vijay kumar sir ADW list varum ah varatha sir. Pls tel me any one.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  4. TET குறித்த விவாதங்கள்
    TET குறித்த வாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.
    மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள்
    காரசாரமாகத் தொடங்கியது.

    விவாதத்தின் போது

    1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து
    வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு
    மதிப்பிடுவது தவறு.

    2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.

    3) weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..

    A) மற்ற தகுதிகான் முறையில் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறதோ அதே போல்தான் இதிலும் எடுத்துக்கொள்ளப்ப்டுகிறது.

    B) 5% தளர்வு வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டது.

    C) எந்த weightage முறையையும் நாங்களாக கொண்டு வரவில்லை.நீதிமன்றத்தின் சார்பாக நீதிபதி மாண்புமிகு திரு.நாகமுத்து அவர்கள் எதை பரிந்துரை செய்தாரோ அதையேத்தான் அரசும் TRB யும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

    D) மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி திரு,சசிதரன் அவர்கள் இடைக்காலத்தடை வழங்கியுள்ளதை நீதிபதிகளின் கவனத்திற்கு AG அவர்கள் கொண்டு சென்றார்.

    E) அரசு பள்ளியில் பயிலும் மானவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பினை வழங்கிட வேண்டும்.

    ஏதேனும் கருத்தை சேர்க்க வேண்டுமென்று இருதரப்பு வழக்குரைஞ்சர்களும் விரும்பினால் இந்த வார இறுதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமென்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    Conclusion
    1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

    3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

    சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

    TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

    ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

    ஏற்கனவே ஓராண்டு காலத்திற்கு மேலாக காலதாமதம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் weightage முறையில் மாற்றம் வராது என எதிர்பார்க்கலாம்.

    அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

    நீதிமன்றத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த வாரத்தின் இருத்திக்குள் எதிர்பார்க்கலாம்.

    TET குறித்த பெரும் வழக்குகளான 5% தளர்வு மற்றும் G.O 71 க்கு எதிராக இனிமேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.. இனி வழக்குத் தொடர வேண்டுமானால் உச்சநீதிமன்றம் மட்டுமே மிச்சம்...........

    "weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. nichayam seiniority ku vaipu undu

      Delete
    2. If weightage system will not modify then file a case in Supreme court.

      So, there is no end. Better govt. should change the weightage system which is favour to both freshers and experienced teachers. That is a good administrative government.

      After finished the CV govt. announced relaxation. At that time the emotion of that candidates = The emotion of the candidates who finished counseling now
      So, all candidates emotions are same.
      Candidates who got more than 90 but not selected what can you do? All are fate.
      Because of this unstable policy these things are happening.

      Candidates who got 82 to 89 and selected are luckiest candidates. God bless them.
      Candidates who got 82 to 89 but not selected better to prepare forthcoming examination. (TNPSC, ETC)

      Wait for two years. govt. should change. then policy are also change. Then these tet may cancel.

      God bless all.

      Delete
  5. Dharmathin vaalvutanai soodhu kavugiradhu. Meendum dharmam vellumaaa????? Endru vidaiyai thedi, ketkiraen manadhu vadi.....

    ReplyDelete
    Replies
    1. கவ்வு கவ்வுதான் ஜவ்வு ஜவ்வுதான்

      Delete
  6. பதிவுமூப்பு இல்லை TET க்கு seniority
    Tet-80
    B.ed-15
    Tet seni-5(

    ReplyDelete
    Replies
    1. If weightage system will not modify then file a case in Supreme court.

      So, there is no end. Better govt. should change the weightage system which is favour to both freshers and experienced teachers. That is a good administrative government.

      After finished the CV govt. announced relaxation. At that time the emotion of that candidates = The emotion of the candidates who finished counseling now
      So, all candidates emotions are same.
      Candidates who got more than 90 but not selected what can you do? All are fate.
      Because of this unstable policy these things are happening.

      Candidates who got 82 to 89 and selected are luckiest candidates. God bless them.
      Candidates who got 82 to 89 but not selected better to prepare forthcoming examination. (TNPSC, ETC)

      Wait for two years. govt. should change. then policy are also change. Then these tet may cancel.

      God bless all.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி