புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2014

புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க் களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், மேல்நிலை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டும், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் (சி.இ.ஓ.,), பணி நியமன உத்தரவை பெற்று பணியில் சேர்ந்தனர்.

இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்., 30 மற்றும் அக்., 1 அன்று, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு நாட்கள், அந்தந்த மாவட்டத்திலேயே, கருத்தாளர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பாக, பயிற்சி தரப்படும்' என்றார்.

9 comments:

  1. Trichy க்கு எங்கே சார் நடக்கிறது

    ReplyDelete
  2. கிருஷ்ணகிரிக்கு எங்கு நடக்கிறது?

    நமது சொந்த மாவட்டத்தில் கலந்து கொள்ளலாமா அல்லது தேர்வு செய்த மாவட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. krisna kiri il than pogavendum kavitha medam,,,,,,,,,,,,,,velai parkum mavattathil than trainnig

      Delete
  3. நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் BT Teachers க்கு பயிற்சி நடைபெறும் . அதற்கான அறிவிப்பு தற்போது தயார் செய்து கொண்டு இருப்பதாக CEO Office இல் இருந்து தெரிவித்தார்கள். இடம், பள்ளி ஆகியவற்றை 12 மணிக்கு மேல் உங்கள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. Vela podura varaikum eppo kudupanganu masakanakula wait panninga. Ipo Vela potathum training poganumanu qstns kekuringa somberingala Ungala thooki kenathula poda .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி