CTET: 21ம் தேதி நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

CTET: 21ம் தேதி நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்.


வரும் 21ம் தேதி நடைபெறுகின்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்குஆன்லைனில் ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றை சிபிஎஸ்இ வரும் 21ம் தேதி நடத்துகிறது. காலை 9.30 மணி முதல் 12 மணி வரை 2.30 மணி நேரம் தாள் 2 தேர்வும், அன்று மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை 2.30 மணி நேரம் தாள் 1 க்கான தேர்வும் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 964 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஹால்டிக்கெட்கள் ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

இதனை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகின்ற குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஹால்டிக் கெட்கள் தனியாக விநியோகம் செய்யப்படுவது இல்லை.ஹால்டிக்கெட் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுவது இல்லை. ஹால்டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள் இன்று19ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்திய விபரங்களுடன் சிபிஎஸ்இ அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுகல்கு மட்டும் காலை வணக்கம்.
    நேற்று பாலிமர் செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
    இன்று வானொலி செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
    **********************
    அடுத்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?

    ReplyDelete
  2. hi friends,
    I have cleared ctet -july 2013. what is the advantage of this ctet? how do they recruit teachers for kendriya vidyalaya schools? pls reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி