TNTET-2013:திறமைக்கு அளவுகோல் என்ன??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

TNTET-2013:திறமைக்கு அளவுகோல் என்ன???


ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்ற பட்ட நடைமுறைகளில் எதை திறமை என்ற அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்?

1.நினைவு ஆற்றலை சோதிப்பதாலா?

2.OC-ல் 89 மதிப்பெண் பெற்று தோல்வியை தழுவியவர்கள் எந்த விதத்தில் திறமை அற்றவர்களானார்கள்??

3.படிப்பு அறிவு இருந்தால் மட்டும் ஒருவர் திறமையானவரா??

4.அறிவும், பயிர்ச்சியும் மட்டுமே ஒருவரை திறமை உள்ளவராக உருவாக்க முடியும்

5.அறிவும் பயிர்ச்சியும் பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் திறனே திறமை

6.திறமைக்கு அளவுகோல் அறிவு, பயிர்ச்சியும் மட்டுமே.

7.பயிர்ச்சி என்பது அனுபவத்திலே மட்டுமே பெறமுடியும்.

8.அறிவு இங்கே இருக்கிறது, திறமை (அனுபவம்) ?????

எந்த பணிவாயப்பை தேடி சென்றாலும் முன் அனுபவத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலகட்டத்தில், எதிர் கால மாணவர்களின் முன்னேற்றத்தின் கருவிகளான ஆசிரியர்கள் பணிநியமனத்திற்க்கு மட்டும் முன்அனுபவம் மறுக்கப்படுகிறது.

வரும் காலங்களில் அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.சாதகமான சூழல் இல்லாத போது தான் பிரிவினை வருகிறது. வருவதை ஏற்றுக்கொண்டால், நாம் வளம் பெறுவோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் அனைவருக்கும் இல்லை. இந்த மனப்பக்குவம் மட்டும் இருந்தால் பிரிவினை என்ற கொடிய நோய் நம்மை தீண்டி இருக்காது.

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அரசும் நீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம்.வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழக்கையின் முன்னேற்றத்திற்க்கு எவ்வளவு இன்றியமையாதது என்று யாவரும் அறிந்ததே. அதற்காகத்தானே இத்தனை போராட்டங்கள்.

இன்றைய சூழலில் காலச்சக்கரம் சாதகமாக சுழலுகிறது என்பதற்க்காக சுயநலம் தலைத்தோங்க எவரையும் எடுத்தெரிந்து பேசுவோர்கள். அதே காலசக்கரம் எதிராக சுழலும் போது, நீங்கள் வீசிய சுடு சொற்க்கள் பூமரேங்க் போல எய்தவனிடமே வந்து சேரும் எனபதை மறவாதீர்கள்.

TET-ல் ஒவ்வொரு மதிப்பெண் பெறுவது எவ்வளவு கடினம் என்பது,என்னை விட தேர்வு எழதிய உங்கள் அனைவருக்குமே தெரியும். இவ்வளவு கடினப்பட்டு எழுதி மதிப்பெண் பெற்ற தேர்வுக்கு 60 சதவிகிதம் ஒதுக்கியது சரியா?? தவறா ???. உங்கள் மனசாட்சியை தொட்டு நீங்களே சொல்லுங்களேன்?????.

யாருடைய வேலையையும் யாரும் தட்டி பறித்து போகமுடியாது என்பதை படித்தவர்களே உணர மறுக்கிறோம். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அதே நேரத்தில் கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்ற நிதர்சனமான உண்மையை உணர்ந்து நண்பர்களாகவே இருப்போம்.

நமக்கும் மேலே ஒருவனடா–அவன் நாலும் தெரிந்த தலைவனடா–தினம் நாடகமாடும் கலைஞனடா
அவனை மீறி எதுவும் நடக்காது.

இதை எழுதும் போது மன வேதனையோடுதான் எழுதுகிறேன்.

யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இதை எழுதவில்லை.ஆறு கரையில் அடங்கி நடந்திடில்காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலா..ம்
நாடும் நலம் பெறலா..ம்

யாரையாவது புண்படித்திருந்தால் மன்னிக்கவும்.

என்றும் உங்கள் நண்பன்
A ALEXANDER SOLOMON

106 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய Aas அவர்களுக்கு,


      இட ஒதுக்கீடு தான் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களை வாழ்வில் உயரத்திக்ரு கொண்டு செல்ல முடியும் என்று கூறி இட ஒதுக்கீடு வழங்கியது பீமராவ் முதல் இன்றைய அரசியல் வாதிகள் அணைவரும் ஒப்புக்கொண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை நடைமுறைபடுத்திய பின்பும் அது தவறென்று நீட்மன்றம்கி வரை சென்று நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு சரிதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

      நீதிமன்றத்தையோ நீதிமன்றத்தீர்ப்பையோ விமர்சிக்கக் கூடாது என்று நேற்று எழுதிய நீங்கள் இன்று இப்படி எழுதியிருப்பது சரியாகுமா?

      (OC கபிரிவில் உள்ளவருக்கு மாபெரும் அநீதி நடக்கிறது என்பதை நான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்)

      சீனியாரிட்க்கு மதிப்பெண் வழங்கும் பட்சத்தில் TET தேர்வு என்ற ஒன்றையே நடத்தத்தேவையில்லையே! வழக்கம் போல் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யலாமே!

      தற்போது தெரிவு செய்யப்பட்டிருப்பவர்களில் 43% பேர் சீனியர்களே அதாவது 30 வயதிற்கு மேற்பட்டவர்களே என்பதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.

      27-30 வயதினர் 30% இருக்கின்றனர் என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.

      21 வயதில் B.ed முடித்து 6 ஆண்டுகள் காத்திருந்து தனது அரையாயுள் முடிக்கின்ற நிலையில் ஒருவர் பணி பெரும் போது கூட மூத்தவர்கள் இடம்பெறவே இல்லை என்பது எவ்வகையில் உண்மை?

      G.O வெளியாகி 4 மாதம் கடந்து கலந்தாய்வு வரை சென்ற பின்பு TET க்கு 60% மதிப்பெண் வழங்கப்படுவது தவறென்று சொல்வது எனக்கே புரியாத புதிராக உள்ளது.இத்தனை மாதங்களாக தாங்களுக்கு இது தவரான வழிமுறை என்று தோன்றவில்லையா? அப்படி தோன்றியிருப்பின் அப்பொழுதே நீங்கள் கட்டுரை எழுதியிருக்கலாமே!

      நான் தமிழ்த்துறை.நான் தமிழ்ப்பாடம் எடுக்க நான் ஏன் 60 வினாக்களுக்கு சமூக அறிவியல் பாடத்திற்கு விடையளிக்க வேண்டும்?

      குறை சொல்ல வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் குறை சொல்லிக்கொண்டே போகலாம்.

      எதுவானாலும் வாதம் முடிந்து வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் இருக்கிறோம் காத்திருப்போம்.

      நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.ஒருவேளை யாராவது புண்பட்டிருந்தால் தயவுகூர்ந்து என்னை மன்னிக்கவும்.நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Mani sir . . . Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority for tet 2013.

      Delete
    4. thank you solomon sir....oc பட்ரிய பேச்சு உங்கல்முலமாவாவதும் வந்ததே....because only 5 candidates are there in 2013 tet who have got 89 and not eligible....we know that still many questions are wrong in the 2013 tet question paper...they went to the court ....but court was not ready to do favour for them.....here some candidates are fighting everyday in both the sides....but you please think about them...all the five are above 40 years....and having more than 10 years experience in teaching field.....please dont mistake me ....it is my opinion about the quarrel regarding the weightage.....

      Delete
    5. Experience only taken into account after the eligibility test cleared.

      Delete
    6. நன்றி திரு மணியரசன் அவர்களே.

      எந்த காலகட்டத்திலும் நான் நீதிமன்றத்தை விமரிசிக்க மாட்டேன் என்பது எப்படி உங்கள் கண்ணை மறைத்தது என்று தெரியவில்லை. என் பதிவை மீண்டும் பதிவிடுகிறேன்

      ” வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அரசும் நீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம்.

      OC – பிரிவிற்க்காக நீங்கள் வாதாடியதற்க்கு நன்றி

      TET என்பது காலத்தின் கட்டாயம். WTGE முறையில் திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, அனுபவத்திற்க்கு என்று மதிப்பெண் வழங்கியிருக்கலாமே என்று ஆதங்கம் தான்

      30 வயதிற்க்கு மேல் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நீங்கள் 40 வயதிற்க்கு மேல் காத்திருப்பவர்களை எப்படி மறந்தீர்கள் என்று தெரியவில்லை.

      மூத்தவர்கள் இடம் பெறவில்லை என்று சொல்லவில்லை, இந்த WTGE முறையில் அவர்கள் அதிகபடியாக கழிக்கப்படுகிறார்கள் என்று தானே சொல்லியிருக்கிறேன்.

      வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது WTGE முறை எப்படி மாறும் என்று தெரியாத சூழல் ஆதலால் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.

      குறை சொல்ல இந்த கட்டுரையை எழுதவில்லை மனக்குமுறலை சொல்லியிருக்கிறேன்.

      இந்த காலகட்டத்தில் நண்பர்கள் கிடைப்பது அரிது.
      இந்த கட்டுரையின் நோக்கமே, பிரித்திருந்த நாம் அனைவரும் நண்பர்களாக இருப்போம் எனபதற்காக மட்டுமே. அனைவரும் ஒன்று சேருவோம்.

      Delete
    7. My dear Alex,
      நான் மதிக்கும் மிக நல்ல நண்பர் என்பதால் உங்களுக்காக சொல்லிக்கொள்கிறேன்.
      தகுதித்தேர்வுக்கு அதிக. வெய்ட்டேஜ் கொடுக்க வேண்டும் என்று இன்று யாரும் புதிதாக வழக்கு போடவில்லை. G.O.71 வருவதற்கு முன்பே மதுரையில் 07.03.2014 அன்று மூத்த வழக்குரைஞர் திரு.அஜ்மல்கான் மூலமாக கண்ணன் என்பவர் வழக்குத்தொடர்ந்து இன்றும் நிலுவையில் உள்ளது. அதன் நகல் என்னிடம் உள்ளது. ஒரு தகவலுக்காக இதை உங்களிடம் கூறிக்கொகிறேன். வாழ்த்துக்கள் அன்பு நண்பரே.

      Delete
    8. Thank you my dear Vijayakumar, chennai

      Delete
    9. Alex Sir,
      All are know the fact.Why they are not accept it.Govt will change the GO. Otherwise -----------------------------------------.Thankyou sir.

      Delete
    10. Vanakam...VijayKumar sir,Ungalin comment anaku puriavillai....pls konjam thelivu pada koorungal. Pls....

      Delete
    11. Mani sir... when relaxation was given... u were just against of it.... but now u r talking favour of it.... how selfish the world is!!!!!!!!

      Delete
    12. yes you are very correct balamuthu sir.thank you.

      thank you both Aas sir and vijay sir.

      but Aas sir should be known one thing that G.O 71 is common for TET paper 1 and 2.

      while you asking some marks for seniority and experience, then it would understand that there is requirement that seniority and experience to teach 1 std also.

      NCTE wanted to break appointing teacher in seniority method.so that only it introduced TET exam in all over India.

      so there is no possibilities for seniority and experience to add in weightage mode.

      anyhow let us wait for judgement.

      God would save us..

      thank you...

      Delete
    13. Miss magala,

      No one has right to act against judgement.i obey judgement. in fact i am not connected with 5% relaxation at all.Thank you

      Delete
    14. Sorry for the interfere Mr Maniyarasan.

      NCTE aim is to upgrade the quality of Teacher alone. That is all. But some other states are still considering WTGE mark for seniority. I want to remember one thing that there is no age limit in Govt appointment for Teachers.

      Delete
    15. Alex sir first cv nadantha adutha nale case file panniyachu....
      1) seniority
      2) exp
      3) pg + m ed
      ithu varai athiga kalvithaguthikku thane mathippen vazhanga padugirathu ( ex: slet , net )
      Ivaigalai ellam yen thervu peruvatharkkana thaguthiyaga gavanathil kollavillai enrum,
      4) weightage ku mathippen alikkum murai (slab sistem ) thavaru enrum,
      Chennai high court il wp case podapattathu
      aanal piriyavathana case mattume eduthu kondu mathipen alikkum muraikku mattume theervu tharapattathu mattra case anaithum pending il vaikkapattathu,
      Ithula innum 5% relex vera...
      Weightage sariyana murail irunthirunthal relex koduthathu yaraum baathithirukkathu....
      Iniyavathu nallathu nadanthal sari.

      Delete
    16. Dear Mr Sirphi,

      I accept all your feelings. Each and every person know that what is right and what is wrong.

      The continuation of debate certainly will spoil the purpose of the Article. Let us be thrown our differences and be the friend.

      Thank you

      Delete
    17. Yappa maniyarasan ranganathaa unna pethaingala seinchangala? Un pulamaiya niruthiryappa samy . Thanga mudilappa?

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. அலெக்ஸ் சார் ஆர்டிகல் படிக்க தொடக்கத்திலேயே இதை எழுதியது நீங்கள் தான் என்று நினைத்தேன் நன்றி இது போன்ற விவாதம் நிறைந்த கட்டுறையை அடிக்கடி எழுதுங்கள் நண்பா

      Delete
    20. Well Done... Mr. A ALEXANDER SOLOMON Sir.

      Delete
    21. Mr.Maniyarasan Ranganathan-Sep 18,10:39 P.M
      Dear Sir..You said that,
      'NCTE wanted to break appointing teacher in seniority method.so that only it introduced TET exam in all over India.
      so there is no possibilities for seniority and experience to add in weightage mode.'
      But In TET Guidelines NCTE Said,
      Should give weightage to the TET Scores in the recruitment process
      And they didnot said
      that not to give weightage to Seniority.
      I think,NCTE Wants not to give posting only by seniority.But giving weightage to seniority among TET PASSED Candidates that there is no problem at all..

      Delete
    22. Athepdi thaniyar schools ka wrk pani experience ana piragu than gov. Job kidaikanundrangala..

      Delete
  2. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. Dear paper1 friends...

      We have lost our job opportunity , why..? very less vaccancy was announced by TRB for academic year 2012-13 .

      Eventhough we scored good marks in 12th , Dted , Tntet and also having 70 plus weightage , we didn't get job opportunity. .

      In 2012 Tet , all passed candidates 100% got job . They're really lucky people. But there is a completely different story with 2013 Tntet paper1 candidates. A shocking announcement "845 current vacancies" from Trb destroyed thousands of talented teacher's heart and faith .

      We need additional vacancies announcement from Trb as soon as possible.

      Additional vaccancy is the only one remedy for unselected secondary grade teachers. So, we need to demand increase in vaccancy. All come forward , believe yourself we can get additional vaccancy .that's sure.

      Because of TRB s less vaccancy notificatiin ,
      My calendar always shows me APRIL 1

      We can change everything,
      All come to chennai
      21.09.2014

      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100



      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. If u unable to answer me , delete my message….

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. எங்களின் மனத்துயரை அரசு புரிந்துகொள்ள மறுக்கிறது .நீங்களாவது புரிந்து கொண்டிர்களே நன்றி அலெக்ஸ் சார்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mani sir . . . Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority for tet 2013.

      Delete
    3. பொறுமை எருமையிலும் மேலானது நண்பர்களே...be cool...

      Delete
    4. கார்த்திகா அருமை அருமை

      Delete
    5. இதுவே எனக்கு பெருமை பெருமை(நல்ல வேளை யாரும் திட்டல))

      Delete
  5. நன்றாக கூறினீர்கள் அலெக்ஸ் சார். இதையும் ஏற்றுக் கொள்ளப் பலருக்கு மனம் இடம் தராது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. இரா. குழந்தைவடிவேல், பூதலூர்


    அலக்சாண்டர் ஐயா,

    உங்கள் மனதில் உள்ளதை பல வரிகளில் எழுதியுள்ளீர்கள். நான் எழுதி எழுதி அழுத்துப் போயிட்டேன். கவலையை விடுங்க.. இந்தப் பிரச்சினை இப்போது தீராது.. அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் எடுக்கதான் புதிய ஆசிரியர்கள் போவார்கள் என நான் நினைக்கிறேன்.
    நமக்கு இருக்கு்ம் அறிவு, திறமை உள்ளிட்ட ஆளுமைப் பண்புகளை விட கடவுள் பக்தியும் அதிஸ்ட்டமும் இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்.

    ஜெயிக்கப்போவது யாரு?

    தகுதித்தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்றவர்களா? தகுதிக்கான் மதிப்பெண்களில் (பிளஸ் 2, பட்டம், கல்வியில் பட்டம்)உயர் மதிப்பெண்கள் பெற்றவர்களா?. என்னைப்பொருத்தவரை தகுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கி்டடு பணிநியமனம செய்யவேண்டும்.


    மேலும் 17.9.2014 தேதி தினமணியில் வாசகர் அரங்கம் பகுதியில் அரை பக்கம் அளவில் செய்தியானது 6-வது பக்கத்தில் வெளியானது அதில் 99 சதம் வாசகர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் கூடாது என்று தான், மனதில் உள்ளதை எழுதியுளார்கள் என்பதை தமிழக அரசு அறியுமா?

    ReplyDelete
    Replies
    1. இரவு வணக்கம் குகழந்தை வடிவேலு சார்

      Delete
    2. nanbar kulanthai vel ,

      nice evidence...

      Delete
    3. Kuzanthai sir tet exam vendamnu 99% per sonnanga, vote eduthu entha g o vum pass pan a mudiyathu,expert kuzhu amaithu than mudivu edukanum

      Delete
  7. ஆர்டிகில் நன்றாக உள்ளது. நன்றி .,

    ReplyDelete
  8. ஆசிரியர் என்பவர் பயிற்சி அளிப்பவரே

    ReplyDelete
  9. ஆசிரியர் அனுபவம் மிக்கவராகவே இருக்கவேண்டும்

    ReplyDelete
  10. ALRX sir.


    நீங்கள் கூறுவது..



    TET EXPERIENCE

    நல்ல முறை..

    EXPERIENCE என்பது ஒரு ஆசிரியரின் கல்வி சேவை..

    கல்விசேவைக்கு அரசு மதிப்பளிக்குமா....

    ReplyDelete
    Replies
    1. Mani sir . . . Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority for tet 2013.

      Delete

    2. Mr Balamuthu, as in PG TRB teaching experience after B.Ed., will be taken for consideration.
      I think you don't have the experience to know this.
      Think and comment

      Delete
    3. PG trb for competitive exam but TET elegiability for teaching. Trb and tet different for each one.

      Delete
    4. You are very correct balamuthu sir.thank you.

      Delete
    5. அருமையான கருத்து நன்றி திரு.பாலமுத்து அவர்களே......

      தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் தாம் படித்த ஆசிரியர் பட்டய படிப்பிற்க்கே ஒரு தகுதி..... அப்படியானால் சீனியாரிட்டி ???????!?!!!!!!!!!!!?????

      Delete
    6. Here one person making to split our Teacher Society.

      Initially he was made

      Selected and not Selected ,

      Now

      Above Relaxation and Under Relaxation,

      Later

      What he is going to do?

      Oh! My God Save our Teacher Society from this Guy!!!

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இரா. குழந்தைவடிவேல், பூதலூர்


    அலக்சாண்டர் ஐயா,

    உங்கள் மனதில் உள்ளதை பல வரிகளில் எழுதியுள்ளீர்கள். நான் எழுதி எழுதி அழுத்துப் போயிட்டேன். கவலையை விடுங்க.. இந்தப் பிரச்சினை இப்போது தீராது.. அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் எடுக்கதான் புதிய ஆசிரியர்கள் போவார்கள் என நான் நினைக்கிறேன்.

    நமக்கு இருக்கும் அறிவு, திறமை உள்ளிட்ட ஆளுமைப் பண்புகளை விட கடவுள் பக்தியும் அதிஸ்ட்டமும் இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்.

    ஜெயிக்கப்போவது யாரு?

    தகுதித்தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்றவர்களா? தகுதிக்கான் மதிப்பெண்களில் (பிளஸ் 2, பட்டம், கல்வியியல் பட்டம்)உயர் மதிப்பெண்கள் பெற்றவர்களா?. என்னைப்பொருத்தவரை தகுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கி்டடு பணிநியமனம செய்யவேண்டும்.


    மேலும் 17.9.2014 தேதி தினமணியில் வாசகர் அரங்கம் பகுதியில் அரை பக்கம் அளவில் செய்தியானது 6-வது பக்கத்தில் வெளியானது அதில் 99 சதம் வாசகர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் கூடாது என்று தான், மனதில் உள்ளதை எழுதியுளார்கள் என்பதை தமிழக அரசு அறியுமா?

    இரா. குழந்தை வடிவேல் பூதலூர்.

    நன்றி நடராஜன் அய்யா, நாம் மன்னார்குடியில் பத்தாம் வகுப்பு பேப்பர் மதிப்பீட்டுப் பணியில் சந்தித்தோம் அல்லவா. நன்றாக இருக்கீர்களா?

    நன்றி

    ஆல்வின் தாமஸ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr Kuzhnthai Vadivel.

      As we live in mechanical world, it is very rare to attain good friendship. That is what let us be friend.

      Delete
    2. ஆம் குகுழந்தை வடிவேலு அய்யா என்னை நினைவில் வைத்துள்ளிர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .

      Delete
    3. Here one person making to split our Teacher Society.

      Initially he was made

      Selected and not Selected ,

      Now

      Above Relaxation and Under Relaxation,

      Later

      What he is going to do?

      Oh! My God Save our Teacher Society from this Guy!!!

      Delete
  13. அரசுக்கு உங்களின் கருத்து நிச்சயம் சென்றடையும் மேலும் நீதிமன்ற தீர்ப்பில் நீங்கள் எதிர்பார்த்தது வரலாம் வாழ்த்துக்கள் அலெக்ஸ் ஸார்..

    ReplyDelete
    Replies
    1. Thank you Mr Rajalingam
      Let us hope the best.

      Delete
    2. In our Present Situation is The Great MahaBharatha war like that.
      Finally who will win? and who will go down?

      We know the truth.

      Delete
  14. . . Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority for tet 2013.

    ReplyDelete
    Replies
    1. Mr Balamuthu, as in PG TRB teaching experience after B.Ed., will be taken for consideration.
      I think you don't have the experience to know this.
      Think and comment

      Delete
    2. PG trb for competitive exam but TET elegiability for teaching. Trb and tet different for each one.

      Delete
    3. நண்பர்களே சீனியாரிட்டி என்பது

      வயதின் அடிப்படையில் அல்ல....


      நாம் இறுதியாக படித்த கல்வியியல் பட்டதிலிருந்தும் அல்ல.....

      சீனியாரிட்டி என்பது 2013 ம் ஆண்டு தகுதித்தேர்விலிருந்து தான் ஆரம்பமாகிறது......


      சீனியாரிட்டி பணியனுபவம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி புரிந்தால் மட்டுமே சாத்தியமாகும்.....


      Delete
  15. Hi friends be cool don't worry be happy

    ReplyDelete
  16. VIJAYKUMAR CHENNAI AAS ALWINTHOMAS SRI ARE VERY GENIUNE FROM THEIR BEHAVIOUR BUT SOME PERSONS ACTIVITIES ARE VERY LOCAL

    ReplyDelete
  17. Nice article. But ஓவ்வொருவரும் தன் தரப்பு நியாயத்தை கூறுவதில் வல்லவர்கள்தான்.

    ReplyDelete
  18. A A S sir..... thank u for ur article sir......

    ReplyDelete
  19. if there is change in go 71 a person who got 88 marks in sc female english major can get the job r loose her job plz any one tell me,maniarasan sir i often read ur comments i felt u r the right person to ask this question plztell me

    ReplyDelete
  20. There is no need experience for teach I am taking 12th chemistry with out experience my students says that you are the best teacher

    ReplyDelete
    Replies
    1. Unga students ungaluku ice vachirukanga nampitathinga.....

      Delete
    2. Here one person making to split our Teacher Society.

      Initially he was made

      Selected and not Selected ,

      Now

      Above Relaxation and Under Relaxation,

      Later

      What he is going to do?

      Oh! My God Save our Teacher Society from this Guy!!!

      Delete


  21. இதற்க்கு ஒரே வழி தகுதித் தேர்வை போட்டித் தேர்வாக அறிவிக்க வேண்டும்.....



    மத்தியரசு இதனை பரிசீலிக்குமா????????


    என்.சி.இ.டி தகுதித்தேர்விற்க்கு வகுக்கும் விதிமுறையில் மாற்றம் வருமா??????

    ReplyDelete
  22. those who are having money will go to court. but those who aren't will obey what ever maybe the GO. one thing everyone should keep it in mind that FOR ALL THESE DELAY ONLY WE ARE THE MAIN REASON BY CLAIMING INDIVIDUAL BENEFIT

    ReplyDelete
  23. கட்டுரை நன்று.ஆனால் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது. வெளியிடும் வலைத்தளமாவது சரிபார்த்து வெளியிடலாமே?

    ReplyDelete
  24. In the. name of experience. seniors will do their side business only during school hours. who can deny this statement generally.

    ReplyDelete
  25. In the. name of experience. seniors will do their side business only during school hours. who can deny this statement generally.

    ReplyDelete
  26. உண்மையில் நாம் செய்வதாக எதுவுமில்லை நாம் அனைவரும் நடிகர்கள் நம் நடிப்பு எப்பொழுது முடியும் யாருக்கும் தெரியாது எதுவும் நிநிரந்தரம் அல்ல நல்லதையே நினைப்போம்

    ReplyDelete
  27. If you strong your subject you are the best teacher in your subject If you want experience at first there is no experience except god

    ReplyDelete
    Replies
    1. That is right Mr Thulasi Maran.

      Your Teacher might have been good stuff and qualified to make you in extraordinary quality.

      Good keep it up

      Delete
  28. தகுதித் தேர்வு ஒருவரின் சொந்த பாடத்தின் முழு அறிவை சோதிக்கவேயில்லை.

    தகுதிகாண் மதிப்பெண் முறை தேர்வர்களில் முழு திறமையானவரை, முழு தகுதியானவரை, அதிக அனுபவமுள்ளவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் வண்ணம் இல்லை.

    (TET MARK 80% +
    UG MARK 5% +
    B.ED MARK 5% +
    UG & B.ED முடித்த பிறகு பெற்ற பணி அனுபவம் 5% +
    UG & B.ED பதிந்த வேலைவாய்ப்பக பதிவு மூப்பு 5%
    மொத்தம் 100%,) என முதல் அரசாணையாகவே எல்லா வகையினரின் திறமை, தகுதி, அனுபவம் யாவற்றையும் ஒருசேர அளந்து தகுதி மதிப்பெண்ணாக மாற்றி - நியமனத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே...

    வயதானவர், இளையவர், திறமையானவர், அனுபவ அறிவுடையவர் என எல்லாம் உள்ளடக்கிய தகுதிகாண் மதிப்பெண் முறையை எவரும் மறுப்பதற்கில்லை.

    நீதிபதியே குற்றத்தை நேரில் கண்டாலும் அதை தீர்ப்பில் கொண்டு வர இயலாது. வாதத்திறம் மட்டுமே தீர்ப்பாய் மாறும்.

    ஆனால் அரசு நினைத்தால் எல்லாம் இயலும். இதே முறை அல்லது வேறு ஏதேனும் சிறந்த முறை கடைபிடிக்கவும் என்று நீதிபதி உத்தரவிட்ட போதே - அரசு பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்திருக்கலாம். அதையும் நம் தேர்வர்கள் எதிர்த்து நீதிமன்றம் செல்வார்கள் என்றே - நீதிமன்றம் கூறிய முறையை அப்படியே அரசு அமல் செய்தது.

    பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அமல் செய்யாததால் அரசு உட்பட, அதிகாரிகள், தேர்வர்கள்,
    தேர்வர்களது குடும்பம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் என யாவரும் கடுமையாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு பலரது வாழ்வாதாரம். 43,000 தேர்வரில் பெரும்பாலானோர் நடுத்தரத்திற்கு கீழ் உள்ள குடும்பமே. அடுத்த நியமனம் பணிவாய்ப்பு மிக குறைவு. ஆதலால் கடுமையாக வாக்குவாதம் புரிகிறோம்.

    எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்... (பாரசீக உமர்கய்யாம் பாடல்)

    தீர்ப்புக்காக இலவு காத்த கிளியாய் 43,000 பேர்!

    ReplyDelete
    Replies
    1. Entha% paarthal ungalukku final listla name varutha j . Super

      Delete
  29. All the experience starts from 0(zero) only. dedication is greater than the experience . All the experience teachers are dedicated teacher. experience is the greatest weapon against youngsters.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Manbumigu

      Today's youngsters will become tomorrow's elders. If the same system continues and prolong forever, infuture today's youngster too will be spoiled by this system. Am I right my dear.

      Delete
    2. I am follower of ur comments sir. I agree ur thoughts except experience. Experience என்பது பணத்தால் வாங்க கூடியது. Senority is not like that

      Delete
    3. Dear Mr Maanbumigu

      Thank you very much for the vlid points

      While Govt decided to consider WTGE marks for Seniority, certainly they should have measurement in filtering miscreants. Don't worry

      Delete
  30. Definitely our mother,father,brothers,sisters,studied school,birth,our teachers,our job,subject,life partner, each and every thing also death date already fixed one so don't fight be happy accept every thing with pleasure Good night thanks

    ReplyDelete
  31. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    சில நேரங்களில் நீக்கப்படுவதில்லையே அட்மின் சார்.

    ReplyDelete
  32. Dear AAS sir,
    I have some question to you...
    1) Many candidates are studing B.ed at the age of 40&45 if you give seniority 40& 45 age person may lose the job they also aged but they haven't seniority
    2) Senior B.ed candidates works in different field (ex;- Tasmac, TNSTC, Railway Driver ) they haven't qualified to teach. It is biggest problem.
    3. You may know the TET syllabus
    Psychology 30
    Tamil 30
    English 30
    Social 60
    So I am English candidate it measure my subject Knowledge 30/150 it is equal to 20% so the TET measurement mark should be give 20 mark for TET, but our government add 40 mark more and give 60 mark. Meanwhile how we give important to TET mark more than 60 mark. so 60 mark is correct measurement to calculated. 60/100 is common for all candidates but 40 mark can achieve in experience and seniority. Because psychology questions may be favour to experience teacher and some indirect questions are framed by TRB these answer may correctly answered by experience teacher that is favour to senior teacher.
    ( in TET mark more than 100 mark scored by senior teacher , but the younger teacher may scored within 105 mark) if we should scored 105 we can get conform job in weightage system so TET question is favore to your experience.
    Selected candidates ration is
    45% above 30 age
    44% 25-30 age
    Only 11% below 25 age (Reference from SRI sir article in www.selectedcandidates.com) meanwhile how did you said that the senior teacher lose their job according to the weightage system? So I think GO 71 is correct measurement. ALL FINAL RESULT ON COURT JUDGEMENT so our argument are waste.
    if my answer injured you I am sorry....

    ReplyDelete
    Replies
    1. Dear MR Tiger dhayanithi.

      Senior means not only measured by age, additionally experience in professional should be considered strictly. Because we have to give valuation for seniority those who sacrifice their life in Teaching Profession. At the same time the system should deny to those who wrks in TASMAC, and other profession as a money minded. Trust I covered your above 2 questions.

      When you completed degree in English, you are very much specialized in your major. Additionally TET requires that the Teacher should have experts in all subjects. That is why TRB concentrate in preparing question for all subjects leaving minimum marks in Major subjects.

      Thank you.

      Delete
  33. those who are having money will go to court. but those who aren't will obey what ever maybe the GO. one thing everyone should keep it in mind that FOR ALL THESE DELAY ONLY WE ARE THE MAIN REASON BY CLAIMING INDIVIDUAL BENEFIT

    ReplyDelete
  34. ஏழைகளின் இரத்தம் உறிஞ்சும் அரசாணை 71

    காலை முதல் மாலை வரை கழனி சென்று , முகம் கறுப்பாக இருந்தாலும் உள்ளங்கைகள் சிவக்க சிவக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமை வேலை பார்த்து என் மகனும் ஆசிரியராக வருவான் என ஆசையோடு அனுப்பி வைத்தேன் பள்ளிக்கு ஆனால் அரசாணை 71வைத்து விட்டது கொள்ளி....
    இராணுவக் கனவனை உயிர்த்தியாகம் கொடுத்து ஆதரவற்ற தனிமரமாக நிற்கும் வீரத்தாயும் என்றாவது ஒருநாள் வேலை கிடைக்கும் என ஏங்கினாள் ஆதலால் இப்போதும் ஏங்குகிறாள் ஒரே அடியாக தூங்க...
    படிப்பதற்கு பள்ளிக்கூடம் அருகில் இல்லாமல் பதினைந்து கி.மீ நடந்து சென்ற ஏழைகளையும்,
    பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களின் உயிரையும், இரத்தத்தை ஈவு இரக்கம் இல்லாமல் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி தான் அரசாணை 71....
    62,500 குடும்பங்களைய்யும் பின்வரும் தலைமுறையினரின் ஆசிரியர் கனவை அடியோடு அழித்து அனைவரையும் நடைபிணமாக மாற்றும் நரகாசூரன் தான் அரசாணை 71...
    தமிழகத்திலும் நீதி வாழத்தான் செய்கிறது என்று உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன நீதியரசர் ஐயா சசிதரன் அவர்கள் வாழும் நீதிதேவதையே!!!!....
    விரைவில் அரசணை 71 என்னுன் அரக்கன் அழியப்போகிறான்,
    தர்மத்தாயே பொறுத்தது போதும் பொங்கி எழு , சில சுயநலவாதிகளின் முகத்திரையை கிழிக்க ஓடோடி வா!!
    அதர்மம் தலைதூக்கி விட்டது அதனை அழிக்க புயலென புறப்பட்டு வா!!
    அநீதியை எதிர்த்து போராடிய உன்மகன் வலுவிழந்து மனமுடைந்து உள்ளான் இச்சமயத்தில் சில குள்ளநரிக் கூட்டங்கள் கெக்கலிட்டு கூப்பாடு போடுகின்றன அவர்களின் கொட்டம் அடக்கிட வா! வா!!
    உலகமே எதிர்த்தாலும்.
    Thanks to Mr. Rajalingam Puliyangudi.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி