TET : வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

TET : வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்தஅரசாணை செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
ஐகோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது.

தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டதை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்ததால் ஆசிரியர் தேர்வில் பெரும் குழப்பம் நிலவி வரும் சூழலில் இந்த தீர்ப்பை மதுரை ஐகோர்ட்டு அளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்; அத்துடன் தேவையற்ற குழப்பங்களையும், முறைகேடுகளையும் தவிர்க்க வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி