TNTET - ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

TNTET - ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை

ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.

இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 comments:

  1. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

    அழைப்பேசி :

    7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI

    81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM

    7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI

    7639497834 THIRUVANNAMALAI, VELLORE

    9943228971 THIRUCHY, PUDUKOTTAI

    ReplyDelete
  2. Most important news watch
    http://kalvikooda.blogspot.com

    ReplyDelete
  3. சான்றிதழ் பதிவிறக்கம் செய்த இரண்டு முறையும் சரியாக சான்றிதழ் வரவில்லை, பெயர் விவரங்கள் எதுவும் இல்லாமல் வெற்று சான்றிதழாக வந்துள்ளது நான் என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. Chennai trb office poi unga details kudunga... avanga unga numberku cal panni ena panradhunu solvanga..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி