சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுவிண்ணப்பிக்க நவ., 15 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுவிண்ணப்பிக்க நவ., 15 கடைசி


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும்'நெட்'தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை இதுவரை யு.ஜி.சி., (பல்கலை மானியக் குழு) நடத்தி வந்தது. இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ.,) இத்தேர்வை முதல்முறையாக வரும் டிச., மாதம்நடத்துகிறது.

ஆண்டுக்கு இருமுறை, இத்தேர்வு சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்டவுள்ளது.cbsenet.nic.in/cbsenet/welcome.aspxஎன்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவ., 15ம் தேதி கடைசி நாளாகவும், அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவ., 18ம் தேதியும் கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.'ஆன்லைன்' விண்ணப்பத்தை நவ., 19க்குள் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும். நகல் எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்புமையத்தில் சமர்ப்பிக்க, நவ., 25 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி