ரூ.15 ஆயிரத்திற்கு 'சோலார்' மோட்டார் சைக்கிள்: மாணவர்கள் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

ரூ.15 ஆயிரத்திற்கு 'சோலார்' மோட்டார் சைக்கிள்: மாணவர்கள் சாதனை

மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூவர் குறைந்த செலவில் புதுமையான 'சோலார்' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
9ம் வகுப்பு மாணவர்கள் தியாகராஜ், ஹரிபிரசாத், அனிருத்தன். பள்ளி இயற்பியல் துறையின் 'ஐன்ஸ்டீன் கிளப்பில்' தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக 'சோலார்' மோட்டார் சைக்கிளை தயார் செய்தனர். ஏற்கனவே உள்ள 'சோலார்' சைக்கிளை விட இதில் சில புதுமைகள் உள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள 'சோலார் பேனல்' சூரிய ஒளி எந்த திசையில் இருந்து விழுகிறதோ அந்த திசைக்கு தானாக திரும்பிவிடும். சூரிய ஒளி நேரடியாக படாவிட்டாலும் 30 சதவீதம் வரை 'சார்ஜ்' ஆகிவிடும். சிறுவர்களுக்கான சைக்கிளில் இதை மாதிரியாக தயார் செய்து, ஆசிரியர்கள் முன்னிலையில் ஓடவைத்தனர்.


இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: இந்த தயாரிப்புக்கு ரூ.3,950 செலவானது. இது, மிக குறைந்த செலவு. ஆட்கள் அமர்ந்து செல்லும் 'சோலார்' மோட்டார் சைக்கிளை ரூ.15,000க்குள் தயாரித்து விடலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில் கிடைத்த வடிவம் இது. மூன்று வாரங்களில் இதை தயார் செய்தோம். பராமரிப்பது மிகவும் எளிது. சோலார் டிரேசிங் சர்க்கியூட், சோலார் பேனல், பேட்டரி, டி.சி.,மோட்டார், வீல் என்ற ஒரு தொடர் இணைப்பில், இது ஓடும். பொதுவாக 'சோலார்' சைக்கிள் நல்ல வெயில் இருந்தால் தான் ஓடும். ஆனால் இது வெளிச்சம் குறைவாக இருந்தாலும் ஓடும். தொடர்ந்து இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வோம். இவ்வாறு கூறினார். பள்ளி முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் அருணாகுமாரி, இயற்பியல் துறை தலைவர் சுப்புலட்சுமி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி