பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 7 லட்சம் மாதிரி வினாப் புத்தகங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 7 லட்சம் மாதிரி வினாப் புத்தகங்கள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக 7 லட்சம் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகம் செய்யப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினாப் புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி, ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையில் விற்பனை செய்யப்படும்.

பத்தாம் வகுப்புக்கு 3 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுதியின் விலை ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.200-க்கும், தமிழ் வழி புத்தகங்கள் ரூ.205-க்கும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.

விற்பனை மையங்களின் விவரம்:

1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, இ.எல்.எம். ஃபேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.

2. காஞ்சிபுரம் - அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கங்கரணை, சென்னை-34.

3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.

5. விழுப்புரம் - ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.

6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர்.

7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி (பழைய பஸ் நிலையம் அருகில்), நாகப்பட்டினம்.

8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, அம்மையப்பன், திருவாரூர்.

9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்கு வெளி வீதி, மதுரை.

10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.

11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.

12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.

15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி (ரத்னா தியேட்டர் எதிரில்), திருநெல்வேலி.

16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.

21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணா சாலை, ராசிபுரம்.

22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.

23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.

25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.

26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

27. கோவை - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராஜ வீதி, கோவை.

28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (பன்னீர்செல்வம் பூங்கா அருகில்), ஈரோடு.

29. ஊட்டி - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர், நீலகிரி.

30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.

31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி