அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2014

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.


பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலைவெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி உடனடியாக நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள 600 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடன நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தபிறகும் எம்பில்- உயர்நிலைக்கல்விக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என அரசாணையைத்திருத்தி வெளியிட வேண்டும்.மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 250 -க்கும்மேல்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 29.10.2014 -ல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு,அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் (25.10.2014) சனிக்கிழமை சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவது, தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குசிறப்பு கலந்தாய்வு நடத்துவது,காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும்,இதரக்கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார்.இந்தஉறுதியைத்தொடர்ந்து வரும் 29.10.2014 (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

42 comments:

  1. 2012-2013 PG TRB YAI VAITHU NEW UPDATE SCHOOL KU APPOINTMENT PANNALOM

    ReplyDelete
  2. Suprim court detail plzzzzzzzzzzzz

    ReplyDelete
  3. Enna nadakudhu.... Adw list eppa tha varum...

    ReplyDelete
  4. Indha tharam uyartha pata 50 high schools ku teachers counselling poga matra vacancy 2013 TET passing list la irundhu nirappa paduma?

    ReplyDelete
  5. Flash news...
    High court of madurai branch given d stay order to released ADWS selection list n also give the stay of kallalar SG post appointments.

    ReplyDelete
  6. Flash news...
    High court of madurai branch given d stay order to released ADWS selection list n also give the stay of kallalar SG post appointments.
    source
    pudiyatalaimurai tv

    ReplyDelete
  7. அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறி இருப்பதாவது:–

    அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.

    அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அரசியல் அமைப்பின் சட்டப்படி இட ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது நியாயமற்றது. எனவே மேற்கண்ட பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. http://www.maalaimalar.com/2014/10/27142721/adidravidar-kallar-schools-sec.html

      Delete
    2. FLASH NEWS : ஆதிதிராவிடர்–கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை www.gurugulam.com இலவச குரூப் 4 ஆன்லைன் கோச்சிங் ஆன்லைன் டெஸ்ட் கல்வி குறித்த செய்திகள் அனைத்திற்கும் www.gurugulam.com குருகுலம்.காம்

      Delete
  8. Now adw&mbc final list ehiraka ramar udan sudalai mani enainthu ullar. .. eny yar yar ellam enaivarkalo? Udane adw list publish Pannuga. ..

    ReplyDelete
  9. ஆயிரம் பேர் எதிர்த்தாலும் இதை மாற்ற முடியாது

    ReplyDelete
    Replies
    1. I will agree with adidravidar

      Delete
    2. Enapa puthusa onnu mulaitiruku

      Delete
    3. மறுபடியும் எப்போ இந்த கேஸ் விசாரணைக்கு வருகிறது.

      Delete
    4. தடை விதிப்பது மதுரை கோர்ட்டில் சகஜம் தான்.
      ஆனால் எதுவும் எடுபாது.

      சிறுபான்மை ,ஆ தி ந துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன்.

      இது trb(without brain department)செய்த தவறு.எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டபடி,ஒரே சமயத்தில் பட்டியல் வெளியிட்டு இருந்தால் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது

      எனினும் தற்போதுள்ள நடைமுறையை மாற்றுவது மிக கடினம்

      எந்த அரசியல் கட்சியும் இதற்கு துனண போகாது மாறாக எதிர்க்கும்

      ஆகவே அக் 31 க்குள் நிச்சயம் பட்டியல் வெளிவரும்

      Delete
    5. திரு, ஆதிதிராவிடன் , ஆ 31 பட்டியல் வரும் என்பது சாத்தியமில்லை,முதலில் தீர்ப்பின் நகல் கிடைக்க 2 நாள் ஆகும், அதை தொடர்ந்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், பின்பு வழக்கு விசாரணைக்கு வரும், எப்படியும் ஒரு மாதம் ஆகிவிடும்.

      Delete
    6. வீதாமரை அவர்களே
      ஆ தி நலத்துறை உடனடியாக ஆசிரியர்களை நிரப்ப உத்தரவி்ட்டுள்ளது

      மேலும் கால தாமதத்திற்காக கண்டனமும் தெரிவித்துள்ளது

      31ஆக. ஆதிந பள்ளிகளில் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது

      ஆகவே நலத்துறையும் அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்பலாம்

      Delete
    7. பணி நியமனத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுப்பட்டியல் வெளியிடவோ?கலந்தாய்வு நடத்தவோ தடை விதிக்கப்படவில்லை
      தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதியே தடையும் விதித்துள்ளார்

      ஆகவே இது நிரந்தர தடையல்ல தாமதப்படுத்தும் செயல்

      Delete
    8. october 31 st adw list kandipa varuma adi dravidan sir.

      Delete
  10. Adw list vida nam alutham kodukka vendum. ..

    ReplyDelete


  11. மதுரை, அக். 27–

    அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறி இருப்பதாவது:–

    அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.

    அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அரசியல் அமைப்பின் சட்டப்படி இட ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது நியாயமற்றது. எனவே மேற்கண்ட பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

    ReplyDelete
  12. Posting increase panna selli case podunga. .. matravarkalin urimaiyai thatti parikkatheer

    ReplyDelete
  13. what happen the army priority case anyone know please comment

    ReplyDelete
  14. Wat about b.t posting. Any news

    ReplyDelete
  15. Next Exam Vaikum podhu Yarum Case Pota Koodadhunu Nodificationla sonnal than idharku Oru Mudivu Varum. Edharku Eduthalum Case.

    ReplyDelete
  16. சென்னை, அக். 27–

    சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால், சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீண்ட கால பணி செய்துள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்கள் சிலருக்கு மட்டுமே சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபீதா கோர்ட்டில் ஆஜராகினார். அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணகுமார், நீண்ட கால பணி செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. இந்த கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தப்பட்டு விட்டது’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், செயலாளர் சபீதாவை அருகில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்து சில கேள்விகளை கேட்டனர். அவற்றின் விவரம் பின் வருமாறு:–

    நீதிபதிகள்: உங்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடும்படியான ஒரு சூழ்நிலையை ஏன் உருவாக்கினீர்கள்? உங்களை போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இதுபோல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த ஏன் கால தாமதம் செய்கிறீர்கள்? பள்ளிக்கல்வித்துறை செயலாளராகி உங்கள் மீது எத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் இந்த ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்று தெரியுமா?

    சபீதா : பல வழக்குகள் உள்ளது.

    நீதிபதிகள்: ஏன் இந்த நிலை? இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்துங்கள். அல்லது அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யுங்கள். இதை செய்யாமல் இருப்பதால், இப்படி வழக்குகள் வருகிறது. உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை முடித்து வைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    ReplyDelete
  17. ADWS list ku mattum yen than ivvalavu sothanaiyo theriyavillai...kandippaga ini naam poruthu kolla kudathu.ADWS list ethir parkkum nanbargale udanadiyaga naam adutha katta nadavadikkaigalil iranga vendum..amaithiyaga irunthathu pothum.Govt namakkaga support panra mathiri theriyavillai..so naam than muyandru nam urimaigalai pera vendum...Akilan sir,palani sir,rajkumar sir aduthu enna pannalam enbathai theriya paduthungal.

    ReplyDelete
  18. SEIDHA THAVARUKKAGA TRB THARKOLAI MUYARCHI

    ReplyDelete
  19. EDU DEPT DOING PARTIALITY DSE,DEE VS ADW....BUT ALL ARE PASSED SAME TIME

    ReplyDelete
  20. THEY ARE PLAYING SELECTED TEACHERS LIFE....PLEASE APPOINT BT TEACHERS FOR ADW

    ReplyDelete
  21. தனக்கு வேலை கிடைக்க இல்லை எனில் வேறு யாருக்கும் வேலை கிடைக்க கூடாது என்று நினைக்கும் சுடலை மணியே அறிக்கை வந்த போது என்ன புடு. ..... கொண்டு இருந்தாயா? ??? இந்த தடை விதித்த நீதிபதிக்கு என்ன நடைமுறை என்று தெரியாதா? ?.

    ReplyDelete
  22. evvalavu porami. sudalimani. suyanalavathikal tn athikam

    ReplyDelete
  23. innum enna enna sothainaigalai anupavipatho theriyala

    ReplyDelete
  24. Dont worry..gov.appeal seiyyum.thadai vilagum..but time delay agum...

    ReplyDelete
  25. ADIDIRAVIDAN sir thanks for ur valuble&truthful words

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி