டிசம்பர்4-ல் அதிநவீன செயற்கை கோள் : இஸ்ரோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

டிசம்பர்4-ல் அதிநவீன செயற்கை கோள் : இஸ்ரோ

தொலைகாட்சி ஒலிபரப்பு மற்றும் விமான போக்குவரத்தி்ற்கு உதவும் வகையிலான செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கை கோள் மையத்தின் இயக்குனர் சிவக்குமார் கூறியதாவது: பல்வேறு தொலை தொடர்பு வசதிகளை அதிகரிக்கும் விதமாக ஜிசாட்-16 வகை செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கை கோளில் 24 சி பேண்டுகள், 12 கியூ பேண்டுகள், மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்டுகள் கொண்ட 48 டிரான்ஸ்பாண்டர்களை கொண்டுளளது. இதன் மொத்த எடை 3.1 டன்னாகும். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறையினர் அளித்த

தற்போது விண்ணில் செலுத்த உள்ள இந்த ஜிசாட் -16 செயற்கை கோளின் ஆயுட் காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்சாட் 3-இ செயற்கை கோளுக்கு மாற்றாக இது கருதப்படுகிறது. இன்சாட் 3-சி செயற்கை கோளின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து விட்டது எனவும், இன்சாட் 3-சி இதே விண்வெளி தளத்தில் இருந்து ஏரியன் 5-ஜி ராக்கெட் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிசாட் -16 செயற்கை கோள் 865 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இன்சாட், ஜிசாட் செயற்கை கோள் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு்ள்ள சி பாண்ட் கியூ பாண்டு, மற்றும் மேம்படுத்தப்பட்ட சி பாண்டு என மொத்தம் 168 டிரான்ஸ்பாண்டர்கள் தொலை தொடர்பு, தொலைகாட்சி ஒளிபரப்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிர் மேலாண்மை போன்றவற்றில் துணைபுரிந்து வருகிறது. 

கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஜிசாட்-14 வகை செயற்கை கோளில் பொருத்தப்பட்ட ஆறு சி பாண்டு மற்றும் கியூபாண்டு டிரான்ஸ்பாண்டர்கள் டெலிமெடிசன் மற்றும் கல்வி சேவையில் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. Hello Sri sir, can u pls send me the court copy of 5% cancel .i need it for my BT post processing in aided school.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி