சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்-MaalaiMalar - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்-MaalaiMalar


சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.டிசம்பர் மாதம் 16–ந் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22–ந்தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பிவிடும்.தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும்.இதன் காரணமாக டிசம்பர் 16–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரிய மண்டல புயல் பூமி அருகில் வராது. எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி, துகள்கள் 220 மணி நேரத்துக்கு வானத்தை அடைத்துவிட்டது போல மாற்றிவிடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

10 comments:

  1. Appo antha 6 daysum ulagam irulil mulguma

    ReplyDelete
  2. But intha karutthai 2 daysku munnadi nasa maruppu therivitthullathu

    ReplyDelete
  3. அரையாண்டு தேர்வு வருவதால் யாரோ மாணவன் கிளப்பிய புழுதியாக இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. PG WORKING & SELECTED CANDIDATES IMPORTANT NEWS FOR U

      PLS CONTACT 9788855419

      Delete
  4. Anybody know about counseling for bt

    ReplyDelete
  5. பூம்.. பூம் ..மாட்டுக்காரன் வாராண்டிடும்.. டும்.. சேதி சொல்வான்டி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி