தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு.


அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு,
சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. காலியாக உள்ள, 67 இடங்களை நிரப்ப, பணிமூப்புஅடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,இயக்குனர் தெரிவித்தார்.

1 comment:

  1. உதவுங்கள் ....
    மிக மனவேதனைய்யுடன் இதை. பகிர்கிறோம் ....
    நாங்கள். 2000. மேற்பட்ட. பட்டதாரி. ஆசிரியர்கள். கடந்த 2011 டிசம்பர். மாதம் பணியில் சேர்ந்தோம் .....எங்களுக்கு. சான்றிதழ். சரிபார்ப்பு. நவம்பர். 2010 .டிசம்பர். 2010 மற்றும். பிப்பரவரி. 2011 லவ் நடந்தது .....
    எங்களுக்கு. பணி. 2009-2010 காலி பணியிடத்தை. காட்டியும். எங்களை. தேர்ந்தெடுக்க அரசாணை. 152/153 தேதி. 3-06-2010 அன்று. வழங்கப்பட்டுள்ளது ....

    ஆனால் 23-08-2010 க்கு முன்னர் சான்றிதழ். சரிபார்த்தவர்கள் மட்டுமே. TET. லிறுந்து. விளக்கு அளிக்கபட்டுள்ளது்.

    ஆனால் நவம்பர். 2010 ல. சான்றிதழ். சரிபார்க்கப்பட்டு ங செப்டம்பர். ல. பணியமர்த்தப்பட்ட. பல். பேருக்கு. தகுதிகாண் பருவம். முடிக்கபட்டுள்ளது .......ஆனால். எங்களுக்கு. எந்த பயனும் இல்லை ...
    மனவேதனை யுடன் ....இருக்கிறோம் .......
    நாங்கள். என்ன செய்வது ????
    தொடர் பிற்கு. 9962228283
    FB Jaya Venkat....my team (CVS after Aug 2010 appointed teachets)..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி