தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2014

தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.


தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய 2ம் கட்ட கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

தொடக்கக் கல்வித் துறையில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவிஉயர்வு பெறுவதற்கு உரிய முன்னுரிமை பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியானது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.இவர்களில் ஒன்று முதல் 30 வரை இடம்பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீதம்உள்ள 165 பேர் தங்களுக்கு எப்போது பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 முதல் 160 முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.இதற்கான கலந்தாய்வு நாளை (25ம் தேதி) சென்னை தொடக்க கல்வி இயக்ககூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. Kaalai vanakkam
    Yarenum ADW selection list patriya tagavalai pathiyungal

    ReplyDelete
  2. Minority Language Counselling Eppo?

    ReplyDelete
  3. தேர்வு பெற்றோர் பட்டியலை டிஆர்பி அந்தந்த துறைகளுக்கு அனுப்பிவிட்டதா?

    ReplyDelete
  4. please tell me about computer science teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி