அங்கன்வாடி பணியாளர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

அங்கன்வாடி பணியாளர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல்.


அங்கன்வாடி குறு மையத்தில் இருந்து, பொது மையத்திற்கு இடமாறுதல் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சர்வீஸ் ரத்தாகும் என்பதால், அவர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தற்போது காலியாக உள்ள அங்கன்வாடி பொது மையங்களில், மினி மையங்களில் பணியாற்றுவோரை இனசுழற்சியில் முன்னுரிமை தரவேண்டும் என அரசு கூறியுள்ளது.அதுமட்டுமன்றி அங்கன்வாடி பணியாளர் 3 கி.மீ., தொலைவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும், மினி மையத்திலிருந்து, பொது மையத்துக்கு மாறுபவர்கள், பொது மையத்தில் புதிதாக பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். இதன்மூலம்,அவர்கள் கடந்த காலங்களில், பணியாற்றிய சர்வீஸ் ரத்தாகும் என தெரிவித்துள்ளனர்.இன சுழற்சி, தொலைவு உள்ளிட்ட காரணங்களால், காலியிடம் இருந்தும், மினிமையத்தில் உள்ளவர்கள் இட மாறுதல் பெற முடியாத நிலை உள்ளது. மேலும் சர்வீஸ் ரத்தாகும் என்பதால், மினி மையத்தில் உள்ளவர்கள், பொது மையத்துக்கு மாற முடியாமல் தவிக்கின்றனர்.அங்கன்வாடி பணியாளர் ஒருவர் கூறும்போது: மாவட்டத்தை பொறுத்த மட்டில் 396 மினி மைய பணியாளர்கள் உள்ளனர். பொது மையத்தில் 196 காலியிடம்உண்டு. இங்கு மாற இன சுழற்சி முறையில், முன்னுரிமை பெற வேண்டும். இது சாத்தியப்படாத ஒன்று.

பொது மையத்தில் பணி மாறுதல் பெறுபவர்கள், சர்வீஸ் ரத்தாகும் என கூறப்படுகிறது. இதனால் 5 ஆண்டு சர்வீஸ் ரத்தாகும்.எனவே, இடமாறுதலில் அங்கன்வாடி மினிமைய பொறுப்பாளர்களுக்கு முன்னுரிமை என்பது கண் துடைப்பே. எவ்வித நிபந்தனை இன்றி, மினி மையத்தில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வின்படி, மாறுதல் வழங்க அரசு முன்வர வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி