சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2014

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு


சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் யார்?: சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனு: கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தபின், அனைத்துப் பள்ளிகளும், மாநில அரசிடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்த சட்டத்தின் கீழ், விதிமுறைகள் வகுக்கப்படும்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரி யார் என்பதை நிர்ணயிக்க தமிழக அரசு தவறி விட்டது.பள்ளி கல்வித்துறை, கடந்த 2011, ஏப்ரலில் பிறப்பித்த அரசாணையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், குற்றங்களுக்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு, அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் பெறவில்லை. தமிழக அரசின் அங்கீகாரம் பெறாமல், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.இந்தப் பள்ளிகள் மீது, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அங்கீகாரம் பெறாமல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்க முடியாது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எதிராக, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில், உரிய பிரிவுகளை கொண்டு வரஉத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை: இம்மனு, தலைமை நீதிபதி எஸ்கே. கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பாணையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம், பள்ளி கல்வி இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனு பைசல்: இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், பதில் மனுத் தாக்கல் செய்தபின், மாநில அரசு, கடந்த மாதம் 19ம் தேதி, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதை அமல்படுத்து வதை தவிர, மேற்கொண்டு எந்த உத்தரவும் தேவையில்லை என, மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மனு, பைசல் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. Kalviseithi Nanbarkalukku Happy Diwali

    ReplyDelete
  2. un selected above 90 paper 1 and 2 candidates all members kaluku happu depavali.by madurai supreme court appel candidates

    ReplyDelete
  3. ALL ABOVE 90 UNSELECTED PAPER 1 AND PAPER 2 CANDIDATES DELHI SUPREME COURT LA GO NO 71 AND 25 CHALLANGE PANNA MADURAI LAWYER LAJAPATHY SIR CASE FILE PANNI COME MONDAY 27.10.2014 ANDRU HEARING VARUTHU.SO SECOND BATCH KU LAWYER READY PANNI NEXT MONDAY 3.10.2014 ANDRU FILE PANNA GO TO SUPREME COURT..SO CASE FILE PANNATHA CANDIDATES COME THURSDAY TO SUNDAY VARYKUM MADURAI LAWYER OFFICE KU VANTHU FILE PANNI KOLLAVUM.CONTACT --MADURAILOUIS@GMAIL.COM, KUBAMABED@GMAIL.COM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி