கல்வியில் மாற்றங்களை கொண்டு வர அரசு தயார்:உயர் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

கல்வியில் மாற்றங்களை கொண்டு வர அரசு தயார்:உயர் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.


பெங்களூரு:“கல்வியில் மாற்றங் களையும், ஆய்வுகளையும் செயல்படுத்த, அரசு தயாராக உள்ளது,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

முக்கியத்துவம்:ஈஸ்வரி பிரம்மகுமாரி பல்கலைக்கழகம், ராஜயோகா கல்வி மற்றும் ஆய்வு பவுண்டேஷன் ஒருங்கிணைந்து,பெங்களூரு இந்தியா வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று, அமைச்சர் தேஷ்பாண்டே பேசியதாவது:

ஊழல் இல்லாத நாடாக வேண்டுமானால், கல்வித்திறனை அதிகரிக்க முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால், எந்த நாட்டிலும் இல்லாத உயர்ந்த கலாசாரம், பண்பாடுகள் கொண்ட இந்தியாவில், அவை மறுக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான நல்லுறவு குறைவதாலும் கூட, கல்வித்தரம் குறைகிறது. இதனால், நாட்டில், பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.கல்வியில் மாற்றங்களையும், ஆய்வுகளையும் செயல்படுத்த, அரசு தயாராக உள்ளது.கல்வியின் தரத்தை உயர்த்தும்படி, ஏற்கனவே, துணைவேந்தரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது. இயந்திர வாழ்க்கையில், பெற்றோர், குழந்தைகளை அலட்சியமாகநடத்துகின்றனர். குழந்தைகளிடம், ஆன்மிகத்தை வளர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

காரணம் என்ன?:
மேலவை தலைவர் சங்கரமூர்த்தி பேசியதாவது:பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேம்பாலங்கள், கட்டடங்கள் ஆகியவை, இப்போதும் வலுவாக உள்ளன.ஆனால், உயர்கல்வி பெற்றுள்ள இன்ஜினியர்கள், சமீபத்தில் கட்டிய மேம்பாலங்கள் இடிந்து விழுகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை ஆலோசித்து, தீர்வு காண வேண்டும்.டாக்டர்கள், கிராமப்பகுதியில் சேவையாற்ற தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், தாங்கள் கல்வி பெற்றிருப்பது, அதே கிராமப்பகுதியினரின் வரிப்பணத்தால் என்பதை, அவர்கள் மறந்துவிடுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.கருத்தரங்கில் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், ராஜயோகி மிருதுஞ்செயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி