பள்ளியில் வன்முறையைதவிர்க்க புதிய திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

பள்ளியில் வன்முறையைதவிர்க்க புதிய திட்டம்.


பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.
இந்த வன்முறைகளை தவிர்க்க காந்திகிராம பல்கலையில் காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.திட்டத்தின் துவக்கமாக காந்திகிராம பல்கலையில் பள்ளி வன்முறையை தவிர்த்தல் தொடர்பான பயிலரங்கம் நடந்தது. காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல் துறைத்தலைவர் மணி வரவேற்றார்.

துணை வேந்தர் நடராஜன் பேசியதாவது: மாணவர்கள் நாட்டின் சொத்து. பள்ளிகள் ஆலயங்களுக்கு இணையாக கருதப்படுகிறது.

ஜாதி, மதம், இனம், பாலியல், போதை வாஸ்து போன்ற காரணங்களால் பள்ளி வன்முறை ஏற்படுகிறது.இதை தவிர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்களை ஒழுக்கத்தோடு வளர்த்தால், பள்ளியில் வன்முறை ஏற்படாது, என்றார். பேராசிரியர்கள் வில்லியம் பாஸ்கர், ரவிச்சந்திரன், மல்லம்மாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி