காந்திக்கு பதில் நேருவை கொலை செய்திருக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

காந்திக்கு பதில் நேருவை கொலை செய்திருக்க வேண்டும்

வரலாற்றை கொஞ்சம் நியாயமான மனதுடன் திரும்பி பார்த்தால், இந்தியா பிரிவினைக்கு உள்ளானதையும், கோட்சே குறித்தும் தெளிவான முடிவுக்கு வர முடியும்.

அப்போது, கோட்சே தவறான மனிதரை தேர்ந்தெடுத்துவிட்டார் என்ற முடிவுக்கும் மக்கள் வருவார்கள். காந்திக்கு எதிராக அத்தனை சதிகளையும் செய்தது ஜவகர்லால் நேருதான்.

 நேருவை பொறுத்தளவில் காந்தியின் கதரும், அவர் அணிந்திருந்த தொப்பியும் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்பட்டதே தவிர காந்தி தேவைப்படவில்லை.

இந்த தேசம் கண்ட மிக மோசமான சோகங்களுக்கு நேருதான் காரண கர்த்தாவாக இருந்தார். இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதற்கும், காந்தி கொலைக்கும் நேருவின் சுய நலமே காரணம். கோட்சே நெஞ்சில்தான் சுட்டார். ஆனால் நேருவோ காந்தியின் முதுகில் குத்தினார்.

 உண்மையில், கோட்சே நேருவைதான் சுட்டிருக்க வேண்டும்.

பி.கோபாலகிரிஷ்ணன்.கேசரி இதழ்.

69 comments:

  1. தவறான பதிவு .தயவுசெய்து இதுபோன்ற
    தவறான மிகவும் அற்பத் தனமான கட்டுரைகளை பதவிடவேண்டாம் என கல்விச்செய்தி admin அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தவறான,அற்பத்தனமான பதிவாக காட்சியளிக்கிறது என்றால் அது எந்த வகையில் என்பதை விளக்குங்கள்.

      நீங்கள் இது போன்று அரசியலின் அரிச்சுவடி கூட தெரியாமல்,தெரிந்து கொள்ள விரும்பாமல் இருப்பது எனக்கு அற்பத்தனமாக உள்ளது.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பதிவை இடவோ அல்லது நீக்கவோ இயலாது...

      பிரபல நாளிதழ் ஒன்று இந்த தேசத்தின் முக்கியத் தலைவர்கள் இருவரைப் பற்றி கட்டுரை வெளியிட்டுள்ளது.

      இந்திய் அரசியலைப் பற்றி, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி, இந்திய அரசியலைப்புப் பற்றி நீங்கள் தெரிந்திருந்தால் இந்த கட்டுரையில் உள்ள பிழையை சுட்டிக்காட்டுங்கள்.

      அரசியல் அறிந்தவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி தங்களுடைய விளக்கங்களை எழுதி விவாதிக்கவே இது போன்ற பதிவு வெளியிடப்படுகிறது.

      அரசியல் இன்றி இங்கு ஒரு அணுவும் அசையாது.

      நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களின் ஒவ்வொரு சமூக செயல்பாடும் அரசியலால் கட்டுப்படுத்தப்படுகிறது.

      நீங்கள் விரும்புவது TET சார்ந்த செய்தி என்றால் அது போன்ற பதிவுகள் வரும் வரை காத்திருங்கள்.முடிந்தால் இது போன்ற அரசியல் பதிவுகளை படிக்காமல் தவிருங்கள்.

      Delete
    4. உங்களிடம் இது பற்றி ஏதும் ஆதாரம் உண்டா?

      Delete
    5. நன்றி மணியரசன் சார் i like it continue....................

      Delete
    6. Samaskirutha sang parivar pathirigai seithiyai appadiyea allip parugak kuudathu.. Kaamarajarai veettodu koluththa muyandra RSS in unmai thanmai ariya vendum .. Melum our kolaiyai niyaayap paduththuvathu pondra ippechchu mattamaanathu.. ithaip pesiya RSS kaarar Gotsea kuuttaththai naam purakkanikka vendum tholrgalea.

      Delete
    7. இராமாயணத்தில் ஸ்ரீராமர் மீது வைக்க‍ப்படும் பகிரங்க (பகீர்) குற்ற‍ச்சாட்டுக்கள்! gurugulam.com

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இது தவறான கட்டுரை ன்று சொல்லும் நண்பர்கள் ஏன் தவறு,எதற்காக தவறு போன்ற விளக்கங்களை எழுத வேண்டும்.

    அப்பொழுதுதான் உங்கள் கருத்தின் நியாயம் வெளிப்படும்.

    வெறுமனே சரி தவறு என்று எழுதுவதால் இந்த பதிவை நீக்கவோ மாற்றம் செய்யவோ இயலாது.

    ஒருவேளை நீங்கள் நண்பர்கள் என்பதால் உங்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் இங்கே நீக்கி விடலாம்.ஆனால் இந்த இந்த கட்டுரை இந்தியா முழுவதும் வெளியாகி இது குறித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறதே!

    அதற்கு என்ன செய்வீர்கள்?

    சரி என்று எழுதுபவர்கள் ஏன் சரி என்று வில்க்காமளிக்கத் தேவையில்லை.ஏனெனில் அவர்கள் கட்டுரையில் வெளியாகியுள்ள கருத்தோடு ஒத்து போகிறார்கள்.ஆனால் தவறு என்று எழுதுபவர்கள் ஏன் தவறு என்று கட்டுரையில் வெளியாகியுள்ள கருத்திற்கு மாற்று கருத்து எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

    அதனால் வெறும் தவறு என்று மட்டும் எழுதினால் எழுதுபவர்களின் முட்டாள்தனம் மட்டுமே வெளிப்படும்.

    ReplyDelete
  4. திரு மணியரசனைப் பொருத்த வரை அவர் அரிரசியலில் மிகப்பெரிய ஞானி என நினைத்துக் கொண்டிருக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ.. மிகப் பெரிய ஞானி என்று பேசியிருக்கிறார்? எங்கே விவாதம் செய்கிறார்?

      ஞானம் வந்தவர்களின் முதல் அறிகுறியே மௌனம்தான்...

      அது அரசியலாகட்டும் அல்லது ஆன்மீகமாகட்டும்.....

      நீங்கள் குறிப்பிடுவது "அரசியலில் முதர்ச்சி" என்றால் இன்றைய அரசியலில் இருப்பவர்கள் மிகக் குறைவு.

      மஞ்சப்பையை தூக்கி வந்த கலைஞராகட்டும்,கண்ணதாசனகட்டும்,அன்னவாகட்டும் ஏன் அது பெரியாராக இருந்தாலும் சரிதான்.யாரும் 25 வயதிலேயே பக்குவப்பட்டு விடவில்லை.

      அனுபவம்தான் முதர்ச்சியைத் தந்திருக்கிறது,தரும்.

      உங்களுக்கு தோழர் நல்லக்கண்ணுவைப் பற்றி தெரிந்தால் கொஞ்சம் எழுதுங்கள்... அதன் மூலம் உங்களின் முதிர்ச்சியை நான் அறிந்து கொள்கிறேன்..

      Delete
    2. மரியாதைகுரிய திரு மணியரசன் சார் உங்கள் இந்த ஆர்டிகல் அருமை இது பல நாள் என் மனதில் இருந்த ஒரு செய்தி அதை கண்டுபிடித்து வெளியிட்டமைக்கு நன்றி திரு நேரு அவர்கள் நான் மதிக்கும் மிகப்பெரிய தலைவர் என்னைப்பொறுத்தவரை வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் உள்ளது பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு தான் முதல் காரணம் இதை நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்கு தனி நாடு கோரியதற்கு காரணம் நேரு தான் இந்த காங்கிரஸ் காரர்கள் என்றும் பிரித்தாலும் கொள்கைக்கு சிறந்த பெயர் போனவர்கள் என்பது உண்மை காந்தியடிகள் எந்த பதவியையும் நேசிக்க வில்லை இந்த மக்களை தான் நேசித்தார் அவர் மட்டும் தேர்தலில் நின்று பிரதமராக ஆகிருந்தால் இறுதி நாள் வரை அவருக்கு எதிராக ஓட்டுக்கள் விழாது அவரே பதவியை நேசிக்காமல் மககளை நேசித்த போது நேரு அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்து அவருக்கு எதற்கு பிரதமர் கனவு பிறகு அவர் குடும்பம் வரிசையாக வந்தது தான் அனைவரும் அறிந்த உண்மை ஆனால் இவை எல்லோருக்கும் தெரிந்ததே காங்கிரஸ் கட்சியை வேறறுக்க வேண்டும் என்று சொல்லாத தலைவர்களே கிடையாது காந்தியில் இருந்து தென்னாட்டில் முத்துராமலிங்கத் தேவர் வரை சொன்னார்கள் இந்த கருத்துடன் உடன் படுகிறேன் ஆனால் காந்திக்கு பதிலாக நேருவை கொலை செய்திருக்கலாம் என கூறுவது இந்திய இறையான்மைக்கு எதிரானது கருத்து சுகந்திரம் உள்ளது நமது முனனாள் பிரதமர் நேரு அவர்ககளை பற்றி விமர்சிக்கலாம் ஆனால் அவரை கொலை செய்திருக்கலாம் என ஒரு நாட்டின் முனனாள் பிரதமரை பேசுவது இந்திய இறையான்மைக்கு எதிரானது கருத்து சுகந்திரம் வேண்டும் ஆனால் அவை விதி மீறல் கூடாது மணியரசன் சார் உங்கள் கருத்தை கூறவில்லை கேசரி இதழின் கருததை கூறுகிறேன் உயிர்களை பறிப்பதை நியாயாயப்படுத்துதல் தவறு அதுவும் முதல் பிரதமர் என்ற பெருமையில் உள்ள ஒருவரை கூறுவதால் இந்திய இறையான்மை பாதிக்கப்படும் அன்று கேசரி இதழ் கூறியிருப்பது அன்றைய அரசியல் சூழ்நிலை ஆனால் அதனை இன்று கூறினால் அது இறையான்மையை கேலிகூத்தாக்கும் மனித நேயத்தை தவிடுபொடியாக்கும். இது போன்ற சிந்தனை கட்டுரை கூறுவதை நான் வரவேற்கிறேன் முடிந்தது முடிந்துவிட்டது தற்கால பிரச்சனை பல அரசியல் நிகழ்வுகள் உள்ளது உதாரணமாக அன்று திரு சுப்பிரமணியசுவாமி பற்றிய கட்டுரை அருமை அவ்வாறு நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு கூறினால் இன்றை அரசியல் உண்மை புரியும் உங்கள் வேகம் அருமை தொடருங்கள்.......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Trb adw list eppa viduranganu kelunga sir. Arasiyal vathikalal nam vaalkai kelvikuriyaki vittathu nanbarkale.

    ReplyDelete
  7. திரு மணியரசன் அளவிற்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை.அவர் எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களோடும் ஒரே மேடையில் வாதம்செய்து அவர்களை பதில் சொல்ல முடியாத அளவிற்கு வாதம் செய்ய தயாராக இருப்பதாக அவரே கூறினார்.கலைஞரைப் பற்றி ஜெயலலிதா கூடவிமர்சனம் செய்யாத வாரத் தைகளை ப்பயன்படுத்தி விமர்சனம் செய்வார்ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும்.தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரியச் செய்தல் போன்றது என்று!

    ReplyDelete
    Replies
    1. திரு வாணி ராம் கலைஞர் என்று அவர் பெயரை குறிக்காமல் மரியாதையாக அவரது சிறப்பு பெயரை குறித்து கூறியது வரவேற்க தக்கது அப்படி என்றால் இதில் கூறியிருக்கும் மற்றொரு தலைவரை பெயர் வைத்து அழைப்பது சரியா செல்வி முன்னாள் முதல்வர் என கூறியிருக்கலாம் மரியாதை என்பது பற்றி பெரியார் கூறியுள்ளார் அவர் சிறுவர்களை கூட வாங்க போங்க என பேசுவாராம் சுயமரியாதை பற்றி அவரே கூறியுள்ளார் தங்களின் வாதம் சரி பிரதி வாதம் நான் இல்லை எனக்கு பதில் அளிக்க வேண்டாம் யாருக்கு கேள்வி எழுப்பிங்களோ அவர் கூறுவார்

      Delete
    2. நான் தன்னைத்தானே என்றும் புகழ்ந்து கொண்டது கிடையாது.

      இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே என்னைப் பாராட்டி வரும் comment களுக்கு சம்பிரதாய முறைக்குக் கூட நன்றி என்று எழுதுவது கிடையாது.அதிலேயே தெரியும் நான் தற்புகழ்ச்சி கொண்டவனா இல்லை தற்புகழ்ச்சியை விரும்புபவனா என்று!

      தனக்குத் நன்குத் தெரிந்த கருத்தை தீவிரமாக முன்வைப்பதன் பெயர் தற்புகழ்ச்சியா?

      """எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களோடும் ஒரே மேடையில் வாதம்செய்து அவர்களை பதில் சொல்ல முடியாத அளவிற்கு வாதம் செய்ய தயாராக இருப்பதாக அவரே கூறினார்."" என்று நான் எப்பொழுதும் எழுதவில்லை.

      TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகளை யாருடனும் விவாதிக்கத் தயார் என்றுதான் பாடசாலையில் எழுதியிருந்தேன்.கருத்தைத் திரித்து கூற வேண்டாமே!

      ஆமாம் தற்புகழ்ச்சி என்று நீங்கள் சொன்னதும் எனக்கு நினைவிற்கு வருபவர் கலைஞர்தான்.

      கலைஞர் தற்புகழ்ச்சி அற்றவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் தற்புகழ்ச்சியான செயலை எதுவும் செய்யவில்லை என்றும் நீங்கள் கருதுகிறீர்களா?

      Delete
    3. நண்பர் மணியரசு அவர்களே நீங்கள் தற்புகழ்ச்சி கொண்டவ் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தாங்கள் எங்கு விவாதம் செய்கிறீர்கள் என்றீர்களே அதற்கான விளக்கம் என்ன?

      Delete
  8. Wonderful article Mani sir.. இது போன்ற article publish பன்றதுக்கு நிஜமாவே தில் வேணும்.. Keep it up...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. பகத்சிங் துாக்கிற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் . அவரைத் துாக்கிலிட ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்த காந்தியை சுட்டதும் சரிதான் . நேருவை சுட்டிருக்க வேண்டும் என்பதும் சரிதான். தயவு செய்து இப்போது இருக்கும் கேவலமான அரசியல்வாதிகளுடன் பகுத்தறிவாளர் பெரியாரை இணைத்துப் பேசாதீர். திரு மணியரசன் அவர்களே நீங்கள்தான் எது நடந்தாலும் கடவுள் தான் காரணம் என்பீர்களே இதையும் அப்படியே சொல்லிவிட்டுப் போங்கள். நீங்கள் மாணவர்களிடமும் நடப்பதெல்லாம் ஆண்டவன் செயல் தான் என்றுதான் கூறுவீர்களா? மாணவரகளை சிந்திக்க விடுவீர்களா? ஏன்? எதற்கு ? எப்படி? என்ற வினாக்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? மதம் என்பது தனிப்பட்ட உரிமை . அதை இதுபோன்ற பொதுவான நடுநிலையான இணையத்தை மதப்பிரச்சாரம் செய்ய பயன்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் காந்தியோடு நேருவையும் சுட்டிருக்க வேண்டும் என்ற கருத்து வெளிப்படுவது போல் உள்ளது.

      இதுதான் மதத்திற்கு எதிரான வெறியை காட்டுவதாய் அமைகிறது.

      சுட்டது ஒரு இந்து,சுடப்பட்டது ஒரு இந்து,சுடப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கப்படுபவரும் ஒரு இந்து பிறகு எப்படி இது மதம் சார்ந்த கட்டுரையாகும்? எப்படி மாதப்பிரச்சாரம் செய்வதாக அமையும்?

      நாத்திகவாதியான நீங்கள் நேருவையும் சுட்டிருக்க வேண்டும் என்று எழுதியிருப்பதால் மதத்திற்கு எதிரான உங்களின் நாத்திகப் பிரச்சாரம்தான் வெளிப்படுகிறது.

      கட்டுரையின் வாயிலாக எங்கே மாதப்பிரச்சாரம் வெளிப்படுகிறது?

      எது நடந்தாலும் கடவுள்தான் காரணம் என்று நேரிடையாக எங்கேயும் சொல்லவில்லை.ஆனால் கடவுளின் அருளால் நடைபெறுகிறது என்று அடிக்கடி சொல்வதுண்டு.

      அறிவியலின் அடிப்படைத் தத்துவங்களை ஆழமாகப் படிக்கும் அதே வேளையில் நாத்திக கருத்தும், ஏதோ ஒரு காரணத்தினால் கடவுளின் மீது வெறுப்பு ஏற்படும் தனது சுய அனுபவமும் ஒன்று சேரும் பொழுது நாம் நாத்திக வார்த்தைகளை உதிர்ப்பது இயல்புதான்.

      நானும் சில ஆண்டுகள் நாத்திகம் பேசிக்கொண்டு திரிந்திருக்கிறேன்,

      ஆனால் அறிவியலின் அனைத்துக் கருத்துகளையும் ஆழமாகப் படிக்க முற்படும் பொழுதும்,ஆத்திகவாதிகளின் கருத்தோடு ஏன் நாத்திகம் உருவானது? பெரியார் ஏன் நாத்திகத்தை கையிலெடுத்தார்? என்பது போன்ற கருத்துக்ளை அறியும் பொழுதும் நமது வாழ்வில் சில மந்திரத்தனமான செயல்கள் நிகழும் பொழுதும் ஆத்திகம் அதுவாக உங்களை ஆட்கொள்ளும்.

      மேற்கண்ட செயல் எனக்கு நடைபெற்றுள்ளது.வெறுமனே நாத்திகம் குறித்து மட்டும் உங்களது மூளையை update செய்யாமல் ஆத்திகவாதிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்தும் update செய்யுங்கள்.நீங்களும் விரைவில் ஆத்திகவாதியாக மாறுவீர்கள்.

      """""நீங்கள் மாணவர்களிடமும் நடப்பதெல்லாம் ஆண்டவன் செயல் தான் என்றுதான் கூறுவீர்களா? மாணவரகளை சிந்திக்க விடுவீர்களா? ஏன்? எதற்கு ? எப்படி? என்ற வினாக்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?""
      என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

      தமிழ் ஆசிரியரான நான் தமிழை விட அறிவியலையும் வரலாற்றையும் ஆங்கிலத்தையும் தான் அதிகம் கற்பிக்கிறேன்.தமிழ்ப் பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தைக்கு விளக்கமளிக்கத் தொடங்கி பிற பாடங்களுக்கு சென்று விடுகிறேன்.கொடுக்கப்பட்டிருக்கும் 45 நிமிடங்களில் தமிழ்ப் பாடத்தில் ஒரு பத்தி கூட நடத்தி முடித்திருக்கப் பட மாட்டாது.

      நண்பர் செந்தில் குமரன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

      மூட நம்பிக்கையை அகற்றவும்,தீண்டாமையை ஒழிக்கவும் நாத்திகவாதியாக இருந்தால் மட்டுமே முடியும் என்பது பெரியார் அவர்கள் உருவாக்கிய ஒரு மாயத்தோற்றம்.

      ஒருவேளை பெரியார் வாழ்ந்த காலத்தில் தீண்டாமையை ஒழிக்க நாத்திகனாக இருப்பது வசதியாக இருந்திருக்கலாம்.ஆனால் அதுவே தீண்டாமையை ஒழிக்கவும்,பெண்ணாடிமையை எதிர்க்கவும்,மூடக்கருத்தை வேரருக்கவும் வரையறையாக ஆகி விடாது.

      பாரதியார் அக்கினி காக்கும் வார்த்தைகளால் பெண்ணடிமைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளாரே அவர் நாத்திகவாதியன்று ஆத்திகவாதிதான்.

      வள்ளலாரும், அயோத்திதாசப்பண்டிதரும்,உ வே சா வும் கூட மோத நம்பிக்கை,தீண்டாமைக்கு எதிராக வரலாற்றில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.இவர்களில் ஒருவர் கூட நாத்திகவாதிகள் இல்லை.

      ஆமாம்,ஆத்திகவாதியாக இருந்த பெரியார் ஏன்&எப்படி திடீரென நாத்திகவாதியாக மாறினார்? என்பதை கொஞ்சம் எழுதுங்களேன்.

      Delete
    2. உண்மையில் இது திரு மணியரசனின் சொந்த கருத்து இல்லை எனபதில் மகிழ்ச்சியே.

      ஆசிரியரின் நேருவைப்பற்றி கருத்து, பாகிஸ்தான் பிரிந்தது தான் காரணம் என்றால். இன்றைய காலகட்டத்தில் பாகிஸ்தானில் நடக்கும் அரசாட்சியின் அவல நிலை, கட்டுபடுத்த முடியாத வனமுறைகள், இதைவைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் இந்தியாவோடு இனைந்திருந்தால், நம் நிலை கேள்விக்குறியாகிருக்கும். இதற்க்கு நாம் அனைவரும் நேருவுக்கு காலமுள்ள வரையில் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று தான் என்ன தோன்றுகிறது.

      தந்தை பெரியார் கடவுளைப் பற்றி சொல்லும் போது, தாழந்த நிலையில் உள்ள சாமானிய மனிதனை மீட்க்காத கடவுள் எனக்கு தேவையில்லை என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

      மேலும் தந்தை பெரியார் மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிடும் போது.
      காந்தியார், தீண்டப்படாதார் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாக சொல்லிவிட்டார். அதாவது சுயராஜ்யம் இல்லாவிட்டாலும் சரி; சீர்திருத்தம் இல்லாவிட்டாலும் சரி; தீண்டப்படாதவர்களுக்கு வகுப்பு உரிமை வழங்க முடியாது என்று சொன்னது மாத்திரமல்லாமல் உயிரைக்கூட விட்டு விடுவேன் என்ற சொன்னார்கள்.
      குடி அரசு சொற்பொழிவு 23.06.1935

      Delete
    3. திரு செந்தில் குமரன் அவர்களின் பதிலுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். ஆர்.எஸ்எஸ் அமைப்பு தூக்கி பிடித்த போராளியாக உருவகபடுத்திய கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதும் அதை நியாய படுத்தியதும் உலகறிந்த செய்தி பதிவு. ஆனால் எவ்வளவோ கல்வி மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்த பதிவுகளை விட்டு விட்டு இதுபோன்ற சர்ச்கைக்குரிய பதிவுகளை வெளியிடுவது இந்த நடுநிலை கல்வி சார்ந்த இணையதளத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத தேவையற்ற பதிவாகும்.பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மத சார்பற்ற பள்ளியான அரசு பள்ளிகளில் சரஸ்வதிக்கு பூசைகள் செய்வதும் மாணவர்களை சிந்திக்கும் திறனற்றவர்களாகவும் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் மாற்றும் வேலையையும் செய்து வருகின்றனர் அவர்களில் இவரும் ஒருவர். இதுபோன்ற பதிவுளால் பெருமை தேடிக்கொள்பவர்களுக்கு கல்விச்செய்தி வடிகாலாக இல்லாமல் வடிகட்டியாக செயல்படவேண்டும் என்பதே என்போன்றோரின் வேண்டுகோள்.

      Delete
    4. திரு மணியரசன் ,நான்கு குருடர்கள் கண்ட யானை போல தந்தை பெரியார் என்ற சகாப்தம் உங்கள் பரிமாணத்துக்குள் அடங்காதது.பெரியார் என்ற மாமனிதரின் சிந்தனையும் சீர்திருத்தமும் சமூக தொண்டும் 90 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சமுதாயம் பெற்று விழிப்படைந்தது .பெண் கல்விக்கும் ,பெண் சம உரிமைக்கும் அவர் ஆற்றிய பணி அளவிட முடியாதது.அவரது தொண்டுள்ளம் கண்டு பெண்கள்தான் அவரை பெரியார் என்று போற்றினர்.அவரைப் பற்றி சற்றும் அறிந்திராமல் போகிற போக்கில் பேசி விட்டு போகமுடியாது.நீங்கள் ஒரு அரசு .பள்ளி ஆசிரியர்.தந்தை பெரியாரால் கிடைத்த சமூக நீதியால்- இட ஒதுக்கீட்டால் பயன் பெற்று பதவி பெற்று அவரையே தூற்றும் உங்கள் செயல் வன்மையாக கண்டிக்கிறோம்

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. RSS Samaskirutha sang parivarin sevakkugalil oruvaraaga irukkalaam intha Admin..

    ReplyDelete
  13. நன்றி மணியரசன் அவர்களே.... விவாதம் தான் முழுமையான தகவலை தரும் இங்கு கருத்து கூற மட்டுமே ஆட்கள் உள்ளனர் விவாதிக்க யாரும் இல்லை... இங்குள்ள பலர் அரசியல் ஆர்வம் அற்றவர்களாகவே உள்ளனர்.. அதற்கான காரணம் தெரியவில்லை... சுதந்திரத்தில் தென்னிந்தியர்களின் பங்கு அளப்பரியது அனால் அவை எல்லாம் நசுக்கப்பட்டு விட்டன... இது ஒரு தலைவரை பற்றிய கட்டுரை... இதற்கு ஏன் மதச்சாயம் பூசுகிறீர்கள்... அன்றைய டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழில் கோட்சே வாக்கு மூலம் வெளியிடப்பட்டது அதில் நான் செய்தது தவறு இல்லை என்றே கொஊறி அதக்கான காரணமும் கூறியிருந்தார்...நாம் சுதந்திர தினம் கொண்டாடும் போது நிம்மதியாக கோடி ஏற்ற முடியுதா? கோட்டையை சுற்றி ஐந்தடுக்கு பாதுகாப்பு போட்டு தானே கொடிஎற்றுகிறோம் ...

    ReplyDelete
  14. Ada sanda podatheenga pa

    ReplyDelete
  15. true matter. We can read my experiments with truth and discovery of India books..

    ReplyDelete
  16. This matter is true. Please read the my experiments with truth and discovery of India.

    ReplyDelete
  17. இரண்டு பேருமே வரலாற்று நாயகர் கள் இபபோது உள்ள கருப்பு பண சாமியார் களை உங்கள் யாரால் துறவறம் மேற்கொள்ளச் செய்ய முடியும்

    ReplyDelete
  18. Vijaykumar chennai sir,paper 2 la my waitage 69.79 ,bc maths.0.29 la mis.next list ethathu varuma sir.ans me sir plz

    ReplyDelete
  19. paper 1 adw second list 31 st oct kulla varuma illa varatha pls any one answer me

    ReplyDelete
    Replies
    1. TRANSFER KUM ,IDHUKUM THODARBU ILLAI LIST WILL COME WITH IN 31

      Delete
  20. yen ivlo delay pandranga adw list vidrathuku

    ReplyDelete
    Replies
    1. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியலுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் : நீதிமன்றத்திலிருந்தோ , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவோ தகவல் வந்ததால் உண்மை . அது வரை காத்திருக்கமால் tnpsc தேர்வுக்கு தயார் செய்து கொள்வது மிகவும் நல்லது , நல்லதே நடக்கும் ' வெற்றி நமதே , வாழ்த்துக்கள் .

      Delete
  21. Hi friends adw listla bcmku posting poduvagala yaravadhu slugapa

    ReplyDelete
    Replies
    1. VANDHALUM VARALANALUM 31 KUL LIST VARUM

      Delete
    2. kandipaga 31 st kulla list varuma dhanush sir

      Delete
    3. Sir listla sc and sca mattum varuvagala ila other caste varuvagala pls tel

      Delete
  22. கல்விச்செய்தியில் இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய கட்டுரைகளை வெளியிடுவதை நாங்களும் விரும்பவில்லை.இது வரலாற்றை திரிக்கவும் நேருவின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது..இதை எழுதியவர் சார்ந்துள்ள அமைப்பை வைத்தே நம்மால் இதை உணரமுடியும். வேண்டாமே சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்கள்.நன்றி

    ReplyDelete
  23. MANIYARASAN INDIA AND PAKISTAN INAIKKA PORARU

    ReplyDelete
  24. இது தனிப்பட்ட மதத்தையோ நபரையோ குறிப்பிடுவதில்லை. எனது கருத்தை பதிவு செய்கிறேன. முக்கியமாக இந்த கருத்து ஆசிரியர் களுக்கு............
    திரு.மணியரசன் அவர்களே. உங்களது அனைத்து கட்டுரையும் நான் படிப்பேன் அருமையாக இருக்கும். தாய் மொழி பற்றிய நீங்கள் செய்த பதிவு அருமை. ஆனால் உங்களது இந்த கருத்தில் நான் முரண்படுகிறேன்..............
    நான் கூறிய கருத்துகளை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக்கொண்டீர்கள். ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை இந்திய முதலாளி களிடம் கொடுத்து சென்று விட்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் யாரையும் நான் மதவாதியாக பார்த்ததே இல்லை. காந்தியும் நேருவும் இந்து என்பது நீங்கள் கூறிய பிறகுதான் நியாபகமே வருகிறது. மறந்து போய்விட்டேன்.
    நீங்கள் எழுதிய கட்டுரையில் மதசாயம் என்று கூறவில்லை. இதற்கு முன்னர் உங்களது கமணட்சில் கடவுள் என்ற வார்த்தை நிச்சயமாக இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம்.
    பெரியாரைப்பற்றி அடிப்படை விசயம் கூட தெரியாமல் இருக்கமாட்டீர்கள் . ஏனெனில் நீங்கள் ஒரு தமிழ் ஆசிரியர். தமிழ் பெரியோர் பற்றி நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். நான் நாத்தீக வாதி என்று கூறவில்லையே. ஒரு காலத்தில் நானும் சந்தனம் வைத்த இடத்தையெல்லாம் கையெடுத்து கும்பிட்டவன்தான். காரணம் எனது பெற்றோரும் எனது சில ஆசிரியர்களும்தான. நமது வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைக்கும் தீமைக்கும் காரணம் கடவுள்தான் என்று கூறி வளர்த்தது தான்.
    எனது ஆசிரியர்களில் ஒருவர் ஒருமுறை “இதோ இயற்பியல் ,வேதியியல், கணிதம், உயிரியியல் , இதில் கடவுள் எங்கே ? " என்று கேட்டது என்னை சிந்திக்க வைத்தது. பின்னர் பெரியார், விவேகானந்தர், காரல் ,டார்வின் இன்னும் பலர் போன்றோரின் சில வைர வரிகளும் பகுத்தறிவு நண்பர்களின் தொடர்பும் கருத்து தாக்கத்தையும் மாறுபட்ட கருத்துக்களையும் தேடலையும் உருவாக்கியது....அனைவருக்கும் உருவாக்கும்.
    உங்களிடம் சில வினாக்கள். (நீங்கள் எந்த மதத்தை சேர்ந்த சகோதரராக இருந்தாலும் பரவாயில்லை)
    1. எண்ண முடியாத அளவில் கடவுள்கள் ஏன்?
    2.சமூகத்தில் ஒருவருக்கு கீழ் மற்றொருவர் அவருக்கு மேல் மற்றொருவர் இந்த அடுக்கு முறை எதற்கு வைத்தார் கடவுள்?
    3.திறமை மிக்கோர் திறமை குறைந்தவர் என்ற பிரிவினையை ஏன் வைத்தார்?
    4.மாற்றுத்திறனாளிகளை ஏன் படைத்தார்?
    5.தன்னை மற்றுமே புகழ்ந்து பாடிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்ற தன் துதிபாடுவதை ஏன் விரும்புகிறார்?
    6.இருவர் ஒரே நிகழ்விற்கு இரு முரண்பாடாக வேண்டுதலை கடவுள் முன் வைத்தால் யாருக்கு செவிசாய்ப்பார்?
    7.உலகில் நிலநடுக்கம் ஏன்?
    8.சுனாமி ஏன்?
    9.வெள்ளம் ஏன்?
    10.அப்பாவி மக்கள் அழிவு ஏன்?
    11.கார்ப்பரேட் சுரண்டல் ஏன்? ஏகாதிபத்தியம் ஏன்?
    12.இலங்கையில் மனிதாபிமானமற்ற போர் ஏன்?
    13.உலகிற்கே உணவளிக்கும் விவசாயி தற்கொலை ஏன்?
    14. இதற்கு எல்லாம் காரணம் கடவுள் இல்லை மனிதன் தானே தேடிக்கொண்டது . என்பது தான் உங்கள் பதில் என்றால் அந்த மனிதனை கடவுள் ஏன் தண்டிக்க வில்லை?
    15. தெய்வம் நின்று கொல்லும் என்றால் , எப்போது சூரியகுடும்பம் முழுதும் சூரியனுக்குள் சென்ற பின்பா?
    இந்த வினாக்கள் 2ம் வகுப்பு மாணவர்கள் கேட்கும் சாதாரண வினாக்கள்.. (தொடர்ச்சி ........ அடுத்து.......)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் விவாதத்திற்கு நன்றி நண்பரே,

      வேலையின் நிமித்தம் வெளியே சென்றிருந்தேன்.அதனால் உரிய நேரத்தில் உங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை.

      மீண்டும் ஒரு கட்டுரையின் கீழ் நிச்சயம் உங்களின் கேள்விகளுக்கு பதிலெழுதுகிறேன்.

      உங்களின் நீண்ட கேள்விகளுக்கு நேரமின்மை காரணமாக இப்போதைக்கு பதில் எழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.

      Delete
  25. தொடர்ச்சி.....
    இந்த வினாக்கள் அனைத்திற்கும் அறிவியல் வாயிலாக சமூக வாயிலாக உங்களால் பதில் அளிக்க முடியும். ஆனால் அந்த கருத்தை உங்கள் கடவுள் நம்பிக்கை ஏற்க மறுக்கும். இதுதான் பிரச்சனைமீண்டும் கூறுகிறேன் நான் நாத்திகன் இல்லை எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. நான் வேண்டும் கடவுள்கள்
    என் பெற்றோர் ( என்னைப் படைத்தவர்கள், இதுவரை எனது தேவைகளை நிறைவு செய்தவர்கள்)
    எனது ஆசிரியர்கள் ( எனது அறிவைத் துாண்டியவர்கள்)
    இயற்கை (நிறைய அனுபவம் தந்தது)
    எனது நண்பர்கள் (உதவியவர்கள்)
    இவர்கள் உங்களுக்கு அமைத்துக் கொடுத்தது கடவுள் என்றால் அது உங்கள் பலவீனம்.
    பகுத்தறிவு பெரியார் என்ற ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல ஆறு அறிவு படைத்த உயிரினங்கள் அனைவருக்கும் சொந்தம். டார்வின், காரல, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் அனைவரும் பொதுவுடைமையுடன் பகுத்தறிவையும் பேசியிருக்கிறார்கள். டார்வினும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான் என்ற உங்களது எண்ணம் எனக்கு கேட்கிறது. (இயற்கை சமநிலை தவறும் போது மனிதர்களுள் சில முரண்பாடுகள் வருவது இயல்பு .. உதாரணமாக செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் அனுப்பி விட்டு திருப்பதிக்கு போய் அர்ச்சனை செய்தாரே மிஸ்டர் ராதாகிருஷ்ணன. அதுபோல)
    பெரியார் சிறுவதில் ஒருவருக்கு கீழ் மற்றொருவர் அவர்களுக்கு மேல் மற்றொருவர் இந்த அடிமை முறையை எதிர்த்தவர். கடைக்காரர் ஒருவர் நடப்பது எல்லாம் இறைவன் செயல் என்று கூறியவர் தலையில் தராசைத்தட்டி விட்டு இது என் செயல் என்று சிந்திக்க வைத்தவர். தன்னைத் துதிபாடவும் தனக்கு கீழ் யாரும் இருப்பதையும் விரும்பாதவர். சிறுவர்களைக்கூட மரியாதையாக பன்மையில் அழைப்பவர். தன்னை எதிர்த்து பேசியவர்களின் எழுத்துக்களை தனது இதழில் முதல் பக்கத்தில் பிரசுரம் செய்தவர். அவர் தீண்டாமை , அறியாமை, அடிமை முறையை எதிர்க்க நாத்தீகம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார் என்று கூறினீர்களே. அப்படி அல்ல ... அப்படியே இருந்தாலும் அது பாராட்டுக்குரிய விசயம். மாணவர் ஒருவர் கல்வியில் திறனை அடைய பல்வேறு உத்திகளை கையில் எடுப்பதில்லையா ? அது தவறா? தன் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது மக்களின் சுயமரியாதைக்காக போராடியவர்.கடவுள் இல்லை என்று அவர் கூறவில்லை கடவுள் நம்பிக்கை மக்களை அடிமைப்படுத்துவதுடன் மூடநம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்ற கருத்தைத்தான் மக்கள் முன் வைத்தார். பாரதியார் கூட கூறியிருக்கிறாரே. “அன்ன சத்திரம்1000 கட்டுவதைவிட ஆலயம் 1000 கட்டுவதைவிட ஆங்கு ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் ....“ இறுதியாக நாத்தீக வாதிகள் யாரும் கடவுள் இல்லை என்று முடிந்தவரை கூறுவதில்லை . பாமர மக்களை காப்பாற்ற கமல்ஹாசன் பாணியில் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்.
    கடவுள் நம்பிக்கை அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் . ஆனால் அது மூடநம்பிக்கைக்கு வழிவிட்டுவிடக்கூடாது....... (ஆனால் இந்த பாதை போய் சேறும் கடைசி இடமும் மூடநம்பிக்கைதான்)
    உங்கள் விருப்ப படி நானும் கடவுளை உணர்ந்தால் கண்டிப்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை திரு செந்தில்குமாரன் அவர்களே!

      Delete
    2. திரு செந்தில் மற்றும் திரு வாணி ராம் இருவரின் பேச்சுக்களும் நன்றாக உள்ளது எதிர்வாதம் என்பது ஒரு ஆரோக்கிமான விவாதத்துக்கு முக்கியம் நன்றி

      Delete
    3. திரு செந்தில் குமரன். அவர்களின் பதிலுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். ஆர்.எஸ்எஸ் அமைப்பு தூக்கி பிடித்த போராளியாக உருவகபடுத்திய கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதும் அதை நியாய படுத்தியதும் உலகறிந்த செய்தி பதிவு. ஆனால் எவ்வளவோ கல்வி மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்த பதிவுகளை விட்டு விட்டு இதுபோன்ற சர்ச்கைக்குரிய பதிவுகளை வெளியிடுவது இந்த நடுநிலை கல்வி சார்ந்த இணையதளத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத தேவையற்ற பதிவாகும்.பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மத சார்பற்ற பள்ளியான அரசு பள்ளிகளில் சரஸ்வதிக்கு பூசைகள் செய்வதும் மாணவர்களை சிந்திக்கும் திறனற்றவர்களாகவும் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் மாற்றும் வேலையையும் செய்து வருகின்றனர் அவர்களில் இவரும் ஒருவர். இதுபோன்ற பதிவுளால் பெருமை தேடிக்கொள்பவர்களுக்கு கல்விச்செய்தி வடிகாலாக இல்லாமல் வடிகட்டியாக செயல்படவேண்டும் என்பதே என்போன்றோரின் வேண்டுகோள்.

      Delete
  26. senthil kumar avargale nanru... but paarkkalaam....

    ReplyDelete
  27. சகோதரர்களே . சாக்ரடீஸ்....... பிளேட்டோ ..... அரிஸ்டாட்டில்..... போன்றோர் வழிவழியாக தனக்குத் தெரிந்தவற்றை கற்றுக்கொடுத்து விட்டுப் போனார்கள் அவ்வழியாக கற்றுக்கொடுக்கும் புனிதமான நாம் ஆசிரியர்கள்.... மாணவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்.... திரு . மணியரசு திறமையானவர் அவர் நினைத்தால் மிக திறமையான இளைஞர்களை உருவாக்க முடியும். நான் கூறிய கருத்து யாருடைய மனதையும் புண் படுத்தியிருந்தால் வருந்துகிறேன். நண்பர்களுக்கு நன்றி. ஆனால் எனது கருத்து பாராட்டுக்காக அல்ல.இதை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். ஒரு ஆசிரியர் மனது வைத்தால் சமுதாயத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களில் என்னைக் காண்கிறேன். உங்கள் பதிவுகள் சிறந்த முறையில் தொடரவேண்டும்.நன்றி...

      Delete
  28. Thamathamaaga vantha karuththu yendraalum anavarayum yosikka vaiththa karuththu!....satru yosiththaal idaththai koduththu madaththai pidiththa kathai puriyum!...SEENU...AMBAI.

    ReplyDelete
  29. AIDED SCHOOL VACANCY PG PHYSICS

    PLACE: CHENNAI ST.THOMAS MOUNT
    COMMUNITY : OC
    COMTACT - jegansaran@gmail.com, 8144170981

    ReplyDelete
  30. AIDED SCHOOL VACANCY PG PHYSICS

    PLACE: CHENNAI ST.THOMAS MOUNT
    COMMUNITY : OC
    COMTACT - jegansaran@gmail.com, 8144170981

    ReplyDelete
  31. karuththai tamilil yezhutha yenna saeiya vaendum?

    ReplyDelete
  32. ITHAI POST PANNIA MANI ORU SIRANTHA PECHALARAGA IRUKKALAM, ALLATHU NALLA ARASIYALVATHIYAGA VARALAAM, ELLA SAMUGATHINARUM IRUKKUM ORU ARASU PALLI ASIRIYAR ITHU PONDRA KURIPPAGA NHERUVAI PATRI PAADAM NADATHA EPPADI MANAM VARUM, FIRST PRIME MINISTER OF INDIA AND CHILDRENSDAY ALSO , ITHU ARASU SAMBALAM VAANGUM YAARUM UNGAL SONTHA KARUTHUKKALAI KUZHANTHAIKALIDAM SOLLATHIRKAL

    ReplyDelete
  33. maniyarasan comment big issue in tamilnadu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி