தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்


நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்.
தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.

அந்தோ பரிதாபம் என்ற தலைப்பில் காலியாக உள்ள உ.தொ.க.அ. காலிப் பணியிடங்களின் பட்டியலை வெளியிட்டு வந்தோம். 25-10-2014 அன்று நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளார்.மேல்நிலைக் கல்வித்தகுதிக்கு இணையாக diploma in teacher education படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை வழங்கி இன்ப அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளார்.

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தொலைப்பேசியில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ், வரலாறு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். - இவ்வாறு தகவல்கள் கிடைத்துள்ளது. உறுதியான தகவல் கிடைத்ததும் நமது வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.

2 comments:

  1. When will be tet certificates issue at CEO office

    ReplyDelete
  2. good morning if tet certiificates issue ceo office., pls. update the news., TIS KALVISEITHI OR

    applered201230@yahoo.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி