தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல்.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர்பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் 652 தொழிற்கல்வி பயிற்றுநர் (கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்) காலி பணியிடத்திற்கு, மாநில அளவில் பரிந்துரை செய்திடும் பொருட்டு உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.இப்பணியிடத்திற்கு பி.எட்., கல்வி தகுதியுடன் பி.எஸ்.சி., கணினி அறிவியல் அல்லது பி.லிட்., கல்வித் தகுதியுடன் பி.சி.ஏ., அல்லது பி.எட்., கல்வித் தகுதியுடன் பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் அல்லது பி.எட்., கல்வித் தகுதியுடன் பி.இ., படிப்பு, மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளில் ஒன்றை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேவையான கல்வித் தகுதியுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தவர்கள், தங்களது பெயர், பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடலாம்.பதிவுதாரர்கள் அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு அட்டையுடன், வரும் 31ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி